Thursday, 3 April 2014

முசுமுசுக்கை அடை

எங்கள் நாவல் மூலிகை உணவகத்தில் பலரும் விரும்பிக் கேட்கும் உணவு முசுமுசுக்கை அடைதான். இந்த வாரம் அதன் மருத்துவப் பயன்களைப் பார்ப்போம்.
முசுமுசுக்கைகொடி வகையைச் சேர்ந்தது. இது வயல்வெளிகளில், காடுகளில், நிலங்களில் தானாக வளரக்கூடியது. நம் முன்னோர்கள் இதன் மருத்துவக் குணத்தை அறிந்து உணவில் அடையாகச் செய்து பிள்ளைகளுக்குக் கொடுத்து சில நோய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தினார்கள். சித்தர்கள் இதன் வடிவமைப்பைப் பார்த்து "இரு குரங்குகளின் கை' என அழைத்தார்கள்.
"இருமலுடனீளை யிரைப்பு புகைச்சல்
மருவுகின்ற நீர்த்தோடம் மாறுந் - திருவுடைய
மானே! முசுமுசுக்கை மாமூலி யல்விலையைத்
தானே யருந்துவார்க்குத் தான்'
இருமல், ஈளை, இரைப்பு, புகையிருமல், மூக்கால் நீர்பாய்தல் (பீனிசம்) என்பன முசுமுசுக்கையால் தீரும் என்கிறது குணவாகடம் நூல்.
புழுங்கலரிசியை நன்கு ஊறவைத்து அதனுடன் சுத்தப்படுத்திய முசுமுசுக்கை இலையைச் சிறிதளவு சேர்த்து, மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு அரைத்து எடுக்கவும். இந்த மாவைத் தோசைக் கல்லில் சிறிது நெய் தடவி, அடையாகச் சுட்டுச் சாப்பிட்டு வர கோழைக்கட்டு, இருமல், தொய்வு முதலியன நீங்கும்.
முசுமுசுக்கைக்கு ஒரு விசேஷம் என்னவென்றால் உண்ட அன்றிரவே வேலை செய்ய ஆரம்பித்துவிடும். குறிப்பாக, சிலருக்கு தூக்கத்தில் அவர்களை அறியாமல் குறட்டை வரும். அதுவும் ஒவ்வொருவருக்கும் விதவிதமான சத்தத்தில் வரும். இது அவர்களுக்கு தெரியாது. ஆனால் அருகே படுத்திருப்பவர்களுக்கு வேதனையாக இருக்கும். இந்தப் பிரச்சனைக்கு இத வரை எந்த மருத்தவத்திலும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதற்குக் கைகண்ட மருந்து முசுமுசுக்கை. இதை உணவில் சேர்த்துக் கொண்டால் அன்றிரவே அது குறட்டையின் அளவைக் குறைக்கும். தொடர்ந்து உணவில் சேர்த்து வந்தால் குறட்டையை உடலை விட்டு விரட்டிவிடலாம்.
அதுமட்டுமல்லாமல், அக்காலங்களில் குழந்தைகளுக்குச் சளி, இருமல், மூக்கில் நீர் வடிதல் போன்றவற்றுக்கு முசுமுசுக்கை இலையைப் பறித்துச் சாறெடுத்து வெல்லத்தில் குழைத்துக் கொடுத்தார்கள். இதையே அடையாகச் செய்து தந்து நாமும் அவர்களோடு சேர்ந்து உண்ணும்போது குழந்தைகளும் நன்கு சாப்பிட்டு சளி தொல்லையை இல்லாமல் செய்யலாம். குறிப்பாக, நுறையீரல் ஆஸ்துமாவுக்கு முசுமுசுக்கை சிறந்தது. முசுமுசுக்கை இலைக்கு மகத்துவம் இருப்பதைப் போல முசுமுசுக்கையின் வேரும் சமையல் பயன்பாட்டுக்குரியது. செரியாமை, மார்பு எரிச்சல், வாந்தி போன்ற தொல்லைகளுக்கு முசுமுசுக்கை வேரைக் கொண்டு வந்து சுத்தம் செய்து இடித்து நீரைக் காய்ச்சி அதில் போட்டு வெல்லம் கலந்து கஷாயமாகக் குடித்தால் மேற்கண்ட பிரச்னைகள் நீங்கிவிடும்.

- டாக்டர் வீரபாபு
Click Here

Sunday, 23 March 2014

ரத்தினங்ளைப் பரிசோதனை செய்யும் எளிய முறை

.

மாணிக்கம் கல்லை பாலில் போட்டால் பாலில் சிவப்பு நிறம் படரவேண்டும்.

நுரையுள்ள பாலில் முத்தைப் போட்டால் அது மிதக்க வேண்டும்.

பவளம் பாலில் விழுந்தவுடன் பால் சிவப்பாக மாறவேண்டும்.

நல்ல மரகதத்தை குதிரையின் மூக்கின் அருகே கொண்டு சென்றால் அது தும்ம வேண்டும்.

சந்தனம் அரைக்கும் கல்லின் மீது புஷ்ப ராகத்தை வைத்தால் தாமரைப் பூவின் வாசம் வரவேண்டும்.

வைரத்தின் கீழ் பகுதியின் விரல் வைத்தால் விரலில் பிம்பம் மேல்புறத்தில் தெரியக்கூடாது.

பசும்பாலில் நீலக்கல்லைப் போட்டால் பால் நீல நிறமாக மாறவேண்டும்.

பசும் பாலில் கோமேகத்தைப் போட்டால் பால் கோமியத்தின் வண்ணத்தைப் பெறவேண்டும்.

இருட்டில் வைடூயத்தை வைத்தால் அது பூனைக்கண் போல் ஜொலிக்க வேண்டும்.



Saturday, 1 March 2014

Hard Disk -ஐ பாதுக்காப்பது எப்படி?

உங்கள் கம்ப்யூட்டர் இ யங்கிக் கொண்டு இருக் கும் போது, ஏதாவது பி ரச்சினைகளினால் கம் ப்யூட்டர் ஆஃப் ஆனால், அல்லது ரீஸ்டார்ட் செ ய்யசொல்லி அப்படி செ ய்தால் hard disk இல் கு ப்பை உருவாகும். இது போல பல காரணங்களினால் உங்கள் hard Disk குப்பை ஆக வாய்ப்பு உள்ளது. இதனால்
திடீர் என்று உங்கள் Hard Disk வேலை நிறுத்தம் செய்து விடும்.
மனிதன் வேலை நிறுத்தம் செய் தால் சம்பளம் கொடுத்து தீர்வு செய்யலாம். இதற்கு என்ன செய் ய முடியும். எனவே வரும்முன் காப்பதே சிறந்தது. அதற்குத்தா ன் check Disk வசதி உள்ளது. இது கம்ப்யூட்டரில் Chkdsk என்ற பெயரில் அறியப்படும்.
இதன்மூலம் உங்கள் HardDisk இன் Critical நிலைகளை கண்டறிந்து அவற்றை சரி செய்யலாம். இதனா ல்உங்கள் கம்ப்யூட்டர் வேகமாக இயங்கவும் வாய்ப்புகள் உள்ளது.
இதை செய்யும் போது கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும். இது எடுத்துக் கொள்ளும் நேரம் கிட்டதட்ட ஒரு மணி நேரம். கூட குறைய இருக்கலாம். இந்த சமயத்தி ல் உங்களால் எதுவும் செய்ய இயலாது என்பதை நினைவி ல் கொள்ளுங்கள்.
ஆனால் இதை செய்வதன் கா ரணமாக உங்கள் Hard Disk பாதுகாப்பாக இருக்கும். மிக அதிக நேரம் இயங்கும் கம்ப் யூட்டர் என்றால் மாதம் ஒரு முறையாவது Check Disk செய் து கொள்ளுங்கள்.
எப்படி செய்வது எனக் காண் போம் வாருங்கள்.
1.My Computer உள்ளே நுழை ந்து C Driveமீது Right Click செ ய்து Properties செல்லவும்.
2.அடுத்து வரும் குட்டி விண் டோவில் Tools என்ற Tabஐ தெ ரிவு செய்யவும். இதில் Error Check என்பதில் “Check Now” என் பது இருக்கும். அதை கிளிக் செய்யவும். இதற்கு அடுத்து கீழே உள்ள விண்டோ வரும்.
3.இதில் முதலாவது எப் போதும் கிளிக் செய்யப் பட்டு இருக்க வேண்டும். இது System Error களை கண்டறிந்து Automatic ஆக சரிசெய்துவிடும். இ ரண்டாவது ஒன்றுஉங்க ள் Disk இன் Bad Sectorக ளை scan செய்து அவற் றை நல்ல நிலைக்கு Recovery செய்யும். இந்த இரண்டாவது option சேர்த்து click செய்தா ல் Check Diskக்கு மிக நீண் டநேரம்எடுத்துக்கொள்ளும். ஆனால் இது மிகவும் பயனு ள்ள ஒன்று. நேரம் ஆனாலு ம் இதையும் செய்வது நலம்.
4.இப்போது கிளிக்செய்து வி ட்டு Start என்பதை கொடுக்கவும். இப்போது அடுத்த Window வரும்.
உங்கள் C Drive தான் உங்கள் கம்ப்யூட்டரை இயக்கிக்கொ ண்டுள்ளது எனவே இதனை இ ப்போது செய்ய முடியாது என ச் சொல்லி, அடுத்த முறை கம் ப்யூட்டர் Start ஆகும் போது செய்யவா எனக் கேட்கும். அத ற்கு வட்டமிடப்பட்டுள்ள தை  கொடுத்து விடவும். இப்போது உங்கள் கம்ப்யூட்டரை Restart செய்யவும். இப்போது Check Disk வேலைகள் ஆரம்பிக்கும்.
5.இந்த வேலை முடியும் வரை கம்ப்யூட்டர் OFF ஆகக்கூடாது எனவே சரியான நேரத்தில் இதை செய்யுங்கள். மோசமா ன பகுதிகளை கம்ப்யூட்டர் Bad Sector என்று முடிவு செய்து கொள்ளும், இதனால் பிரச்சி னை எதுவும் இல்லை. இது மு டிந்த வுடன் உங்கள் Hard Disk இன் பிரச்சினைகள் சரி செய்யப் பட்டு விடும். உங்கள் Hard Disk குறித்த விவரங்கள் Check Disk முடிந்த உடன் காண்பி க்கப் படும்.
6.மற்ற Drive களை Check Disk செய்யும் போது அது கம்ப்யூட்டர் ON ஆகி இருக் கும் நேரத்திலயே செய்ய முடியும். ஆனால் C ட்ரை வை (அல்லது நீங்கள் OS இன்ஸ்டால் செய்துள்ள ட் ரைவ் ) Check Disk க்கு உள் ளாக்குவதுதான் Hard Disk க்கு பயனுள்ளது.
உங்கள் Hard Disk ஐ பரமரிப்பது உங்கள் கடமை. எனவே முதலி ல் chkdsk (check Disk )செய்யுங் கள். உங்கள் Hard Disk ஐ காப் பாற்றுங்கள்.

Saturday, 8 February 2014

Who is entitled to share in self acquired property of Hindu in Indian Law?

FROM

Khushlikeu’s Blog

One person was allotted a flat in his name. With the passage of time he became father of two children one son and one daughter. Time moved and lot of things changed in his life. Many years later dispute arose between husband and wife. Husband left the flat and stated living with his daughter. At the time of death he left a will in which he bestowed his only property on his daughter.
Now the question is whether he had the right to give that property to his daughter under will?
As per Indian Law a person can give his self acquired property to anyone through Will.
Whether his son has any right in the property?
As the property was a self acquired property therefore son do not have any right in the property.
Whether the wife has any right in the property?
Wife do not have any right in the property because under the will the property was exclusively given to daughter.
What would have happened if he would have died without living behind any will?
In that case the property would be divided among class one heirs.
Who are class one heirs under the hindu law?
Son, daughter, widow, mother, son of a pre-deceased son, daughter of a pre-deceased son, son of a pre-deceased daughter, duaghter of a pre-deceased daughter, widow of a pre-deceased son, son of pre-deceased son of a pre-deceased son, daughter of a pre-deceased son of a pre-deceased son, widow of a pre-deceased son of a pre-deceased son.

Tuesday, 4 February 2014

விதவைப் பெண்களுக்கான நிவாரணத்தை நிறுத்தக்கூடாது

முதல் கணவனின் எதிர்பாராத மரணத்திற்கு பின் மறுமணம் செய்து கொள்ளும் விதவைப் பெண்களுக்கான நிவாரணத்தை நிறுத்தக்கூடாது என மும்பை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
நீதிபதி தர்மதிகாரி தலைமையிலான அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
"பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணத்தை வழங்க வேண்டும் என்றே சட்டம் கூறுகிறது. மறுமணம் செய்து கொண்டார் என்பதனால், முதல் கணவருடன் அந்தப் பெண் வாழ்ந்ததையோ, குழந்தைப் பெற்றுக் கொண்டதையோ, அந்தக் குழந்தையை பேண முதல் கணவரின் துணையை அவர் இழந்து விட்டார் என்பதையோ மறுக்க முடியாது. எனவே மறுமணம் ஆனாலும் அவருக்கான நிவாரணம் கொடுக்கப்படவேண்டும்" என அமர்வு உத்தரவிட்டது.
முன்னதாக இந்த வழக்கை விசாரித்த விபத்து இழப்பீடுகளை விசாரிக்கும் தீர்ப்பாயம், இறந்தவரின் மனைவி மறுமணம் செய்து கொண்டதால் அவருக்கான நிவாரணத்தை தர மறுத்தது. ஆனால் அவரது பெண்ணிற்கு வழங்கியது.
மும்பை நகரில் வசித்து வந்த சந்தீப் புரந்தரே, ஜுலை 5, 2006 அன்று அந்தேரி பகுதியில் நடந்த விபத்தில் காலமானார். இதற்கான நிவாரணமாக சந்திப்பின் குடும்பத்திற்கு 30 லட்சம் ரூபாயை தீர்ப்பாயம் வழங்கியது. ஆனால், உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த மேல் முறையீடு வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிமன்றம் நிவாரணத் தொகையை வட்டியுடன் சேர்த்து 66.98 லட்சமாக உயர்த்தியது. முதலில், இறந்தவரின் வருமானம் ஒழுங்காகக் கணக்கிடப்படவில்லை, அவர் உயிரோடு இருந்தால் சம்பாதித்திருக்கக்கூடிய பணத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள் வேண்டும் என்றும் தெரிவித்தது.
மேலும், 67 லட்ச ரூபாய் நிவாரணத் தொகையில் 20 சதவீதம் இறந்தவரின் மனைவிக்கும், 60 சதவீதம் அவரது 11 வயது மகளுக்கும், மீதமுள்ள 20 சதவீதம் அவரது தாயாருக்கும் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதோடு வழக்காடுதலுக்கான செலவுகளுக்கு 30,000 ரூபாய் தரச் சொல்லியும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த குழந்தையின் படிப்புச் செலவுக்கும், அன்றாட செலவுகளுக்கும், எதிர்காலத்தில் திருமண செலவுகளுக்கும் பணம் தேவைப்படும் என்பதாலேயே நிவாரணத்தின் பெரும் பங்கு குழந்தைக்கு என நீதிமன்றம் கூறியுள்ளது. இத்தொகையை, தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் நிலையான வைப்புத் தொகையாக வைத்துக் கொள்ளலாம் என்றும் அமர்வு உத்தரவிட்டுள்ளது.