Tuesday, 18 February 2020

மஹாளய_அமாவாசை


              புரட்டாசி மாதம்  பௌர்ணமிக்கு. மறுநாள்   பிரதமை  திதியில். தொடங்கி   புரட்டாசி  அமாவாசை வரையிலான  நாட்கள்  மஹாளய பட்சம் என்றும், அதில்   புரட்டாசி  அமாவாசையானது   மஹாளய  அமாவாசை  என்றும்  அழைக்கப்படுகிறது.  மஹாளயம் என்றால்  பெரிய இடம்;  பட்சம்    என்றால் பதினைந்து நாட்கள்.  உயிர்களைக் கவரும் யமதர்மன்,  யமலோகத்திலிருக்கும்  உயிர்களைப்  பூமிக்கு அனுப்பி,  இப் பதினைந்து  நாட்களும்  தங்கள்  குடும்பத்தோடு  தங்கி வருமாறு  அனுப்புவாராம். மறைந்த  நம்  முன்னோர்கள். பித்ரு லோகத்திலிருந்து வந்து  நம்மோடு  தங்கும்  காலமே  மஹாளயபட்சமாகும்.
        மஹாளயபட்ச    விதிப்படி  அந்த  பதினைந்து  நாட்களும்  பித்ருக்களுக்காக  அன்ன  சிரார்த்தம் செய்ய வேண்டும்!  தானதர்மங்களையும்  இந்நாளில்  செய்யலாம். மஹாளய. அமாவாசை  நாளன்றாவது  முன்னோர் வழிபாடு  செய்ய வேண்டும்.  மற்ற நாட்களில்   தர்ப்பணம்( எள்ளுத் தண்ணீர் விடுதல்)  செய்ய வேண்டும்.
         பித்ரு வழிபாடு  செய்தால்   வீட்டில்   நல்லவை  நடைபெறும்;  அவர்களை  அலட்சியப்படுத்தினால்  சாபத்தைப்  பெற்றுத் தரும்.    நம் வாழ்வில் வரும் பல துன்பங்களுக்கு  முன்னோர் வழிபாடு செய்யாததும்  ஒரு  காரணம்  என்கின்றனர்.  இந்நாளில்  புனித நீராடி  பித்ரு கடன்   செய்வதும் சிறப்பான  நாளாகக்  கருதப்படுகிறது.
        நம் வாழ்வில் வரும் இன்பத் துன்பங்கள் யாவும் நாம்  முற்பிறவியில்  செய்த  பாவ புண்ணியத்திற்கு ஏற்ப அமையும்  என்பதே  நம்  நம்பிக்கை.   தவிர்க்க இயலாதக் காரணங்களால்   அமாவாசை திதி நாளில்  நம் முன்னோரை வழிபட முடியாமல் போயிருந்தாலும்,   அவர்களது  ஆன்மா  சாந்தியடைய  இந்த  பதினைந்து  நாட்களுமே அல்லது அதில்  ஏதோவொரு நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்து நற்பலனை அடையலாம்.
      அதனால் முற்பிறவியின்  பாவங்களும்,  பித்ரு சாபமும் முழுமையாக விலகும்.
   மஹாளயபட்சத்தில்,  குறிப்பாக  மஹாளய  அமாவாசையன்று  (28. 9. '19) அன்று  முன்னோருக்கு முறையான வழிபாடு செய்தால் நம் வாழ்வின்  அனைத்துவிதமான பிரச்சனைகளும் விலகி, எங்கும் சுபிட்சமே நிலவும். 🙏

No comments:

Post a Comment