Thursday, 5 December 2013

AKKI ROTI


Wednesday, 4 December 2013

ATM/BANK ISSUE

அன்புள்ள நண்பர்களே… மிக மிக முக்கியமான செய்தி
ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும்
இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.
அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.
அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.
உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.
வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.
இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.
அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.
அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.
அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.
மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.
அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.
மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }
"https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.
நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.
மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.
இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.
எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை
TO READ MORE { Ombudsman }
http://www.rbi.org.in/scripts/AboutUsDisplay.aspx?pg=BankingOmbudsmen.htm
PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS
https://secweb.rbi.org.in/BO/ComplaintToNodalOfficer.html
via Vidiyal Welfare Trust.

from

senthilvelblog

Peanut chutney


Tuesday, 3 December 2013

தொல்லை தரும் அழைப்புகளை நீக்க


மொபைல் இன்றைய காலகட்டத்தில் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கிராமங்களிலிருந்து நகரம் வரை மொபைல் பரவியுள்ளது. சாதரண மனிதன் கையிலும் மொபைல் உள்ளது. இதனை பொருளாதார வளர்ச்சி எனவும் கூறலாம். 
                                            

Aircel, Airtel,  Vodafone போன்ற பல்வேறு நிறுவனங்களில் இருந்து hello tune Friends Alerts,missed Call Alert போன்றவைகளை ஆக்டிவேட் செய்யுமாறு நாம் பயன்படுத்தும் கம்பெனியிலிருந்து தினமும் பல அழைப்புகள் வரும்.

நாம் சில நேரங்களில் முக்கியமான வேலைகளில் இருக்கும் போது பைக்குளிளோ அல்லது கார்களிளோ சென்று கொன்டிருக்கும் போது இது போன்ற போன் கால்கள் வரும்.எந்த சர்வீஸை ஆக்ட்டிவேட் செய்தோம் என்றே தெரியாது ஆனால் பேலன்ஸ் மட்டும் குறைந்து இருக்கும், என்ன காரணம் என்று புரியாமல் வாடிக்கையாளர் சேவை மையத்தை நாடி காரணம் கேட்டால், நாம் தான் ஆக்டிவேட் செய்யப்பட்டுள்ளதாக கூறுவார்கள். இது போன்ற போன் அழைப்புகளை  நிறுத்த 
முதலில் National Do Not Call Registry (NDNC Registry) என்ற தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.

1.AIRCEL:

ஏர்செல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த"START DND" to "1909" (Toll Free) என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய ”STOP DND” to “1909” (Toll Free).


2.AIRTEL:
ஏர்டெல்லில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 121 என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும், இதனை மீண்டும் Deactivate செய்ய "STOP DND" to 121.




3.VODAFONE:

Vodafone-லிருந்து வரும் அழைப்புகளை நீக்க ACT DND to 111என்ற என்னுக்கு SMS அனுப்ப வேண்டும்.
 Deactive செய்ய CAN ACT என்ற என்னுக்கு SMS செய்ய வேண்டும்.









4.BSNL:

BSNL-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க, IVRS ஆப்ஷன் மூலகாக நிறுத்த 1909 என்ற என்னுக்கு போன் செய்து Active மற்றும் Deactive செய்ய முடியும்.

SMS மூலமாக நிறுத்த START DND to 1909 மீண்டும் அதனை Deactive செய்யSTOP DND to 1909.




5.Reliance:



Reliance-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.







6.Tata Indicom:
Tata indicom-ல் இருந்து வரும் அழைப்புகளை நீக்க Click இந்த தளத்திற்கு சென்று பதிவு செய்து கொள்ளவும்.








7.Tata Docomo:

TATA DOCOMO-ல் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த START DND to 1909 (toll free) தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய STOP DND to 1909(toll free).








8. Idea Callular:
 Idea-வில் இருந்து வரும் அழைப்புகளை நிறுத்த “START DND” to 1909 தனை மீண்டும் ஆக்ட்டிவேட் செய்ய  “STOP DND” to 1909.
 
 
 
 
 
From
Tamilcomputermini.blogspot.com

பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக கன்வெர்ட் செய்ய - Simpo PDF

முக்கியமான தகவல்களை நாம் பிடிஎப் பைல் பார்மெட்களில் வைத்திருப்போம், மேலும் முக்கிய அலுவல்கள் யாவும் பிடிஎப் கோப்பாகவே இருக்கும். அவற்றில் எதாவது மாற்றங்கள் செய்ய வேண்டுமெனில் அதனை நாம் வேர்ட் கோப்பாக மாற்றிய பின்புதான் மாற்றங்கள் செய்ய முடியும். இவ்வாறு பிடிஎப் பைல்களை வேர்ட் பைல்களாக மாற்றம் செய்ய இணையத்தில் மென்பொருள்கள் கிடைக்கிறன. ஆனால் தற்போது Simpo PDF மென்பொருளை இலவசமாக தருகிறனர். 

மென்பொருளை தரவிறக்க சுட்டி


சுட்டியில் குறிப்பிட்ட தளத்திற்கு சென்று, முகநூல் பயனர்பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உள்நுழையவும். பின் Like என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது தோன்றும் விண்டோவில் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை உள்ளிட்டு Send me Keycode என்னும் பொத்தானை அழுத்தவும். தற்போது லைசன்ஸ் கீயானது உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பட்டிருக்கும். மேலும் மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கான சுட்டியும் அனுப்பட்டிருக்கும். அதை பயன்படுத்தி மென்பொருளை தரவிறக்கம் செய்து கொள்ளவும்.


பின் Simpo PDF மென்பொருளை கணினியில் நிறுவிக்கொள்ளவும். லைசன்ஸ் கீயை பயன்படுத்தி மென்பொருளை முழுமையாக நிறுவவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்து ADD PDF(s) என்னும் பொத்தானை அழுத்தி பிடிஎப் பைலை உள்ளினைத்துக்கொள்ளவும். கன்வெர்ட் செய்யப்படவேண்டிய பைல்பார்மெட்டை தேர்வு செய்யவும். வேர்ட் மற்றும் டெக்ஸ்ட் பைல் பார்மெட்கள் ஆகும். அடுத்து கன்வெர்ட் செய்து சேமிக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்யவும். பின் Convert என்னும் பொத்தானை அழுத்தி கன்வெர்ட் செய்யவும். சில மணி நேரங்களில் உங்களுடைய பிடிஎப் பைலானது வேர்ட் பைலாக நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் சேமிக்கப்பட்டிருக்கும்.
 
by
 
Tc kumaresan

விண்டோஸ் 8: இன்ஸ்டலேஷன்



1.  முதலில் விண்டோஸ் 8 மற்றும் விண்டோஸ் 7 யு.எஸ்.பி./டி.வி.டி. டூலினை தரவிறக்கம் செய்திடவும். இதற்கான தளங்களின் முகவரிகள் :http://www.tech spot.com/downloads/5330windows8releasepreview.html மற்றும் http:// www.techspot. com/downloads/4911windows7usbdvddownloadtool.html. உங்களுக்கு விண்டோஸ் 8 தொகுப்பின் எந்த வெர்ஷன் (64 பிட் அல்லது 32 பிட்) தரவிறக்கம் செய்திட வேண்டும் என்ற குழப்பம் இருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் அண்மையில் வாங்கப்பட்டிருந்தால், 64 பிட் பதிப்பினையே செய்திட பரிந்துரைக்கிறேன். இரண்டு பிட் பதிப்புகளுக்கிடையே என்ன வேறுபாடு என அறிந்து கொள்ள ஆர்வமும், நேரமும் இருப்பவர்கள், http://www.techspot. com/ news/ 35624techtipoftheweekshouldyouinstallwindows732bitor64bit.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் தரப்பட்டுள்ள வழி காட்டுதல்களைப் படிக்கலாம். வேறுபாடுகளும் புரியும்.
சுருக்கமாகச் சொல்வதென்றால், விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்கு, 1 ஜிபி ராம் கூடுதலாகத் தேவைப்படும். ஸ்டோரேஜ் அதற்கென 4 ஜிபி வேண்டும். இது அநேகமாக பலர் பயன்படுத்தும் கம்ப்யூட்டர்களில் இருக்கும்.
2. பூட் செய்யக்கூடிய விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினைத் தயார் செய்திடவும். இதற்கு 4 ஜிபிக்கும் அதிகமான கொள்ளளவு உடைய யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ் ஒன்றினை, கம்ப்யூட்டரில் அதற்கான ட்ரைவில் இணைக்கவும். இப்போது தரவிறக்கம் செய்த Windows 7 USB/DVD டூலை இன்ஸ்டால் செய்திடவும். இந்த டூல் செயல்படத் தொடங்கியவுடன், பிரவுஸ் செய்து, உங்களின் யு.எஸ்.பி. ட்ரைவ் மற்றும் நீங்கள் தரவிறக்கம் செய்த விண்டோஸ் 8 ஐ.எஸ்.ஓ. பைலைக் கண்டறிய முடியும். இச்செயல்பாட்டின் போது உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவில் உள்ள அனைத்து பைல்களும் அழிக்கப்படும் என்பதால், முக்கிய அல்லது அனைத்து பைல்களுக்கும் பேக் அப் காப்பி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பேக் அப் காப்பி எடுக்க, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவ் வேகத்தைப் பொறுத்து 5 நிமிடங்கள் முதல் 10 நிமிடங்கள் வரை ஆகலாம்.
3. விண்டோஸ் 8 ரிலீஸ் பிரிவியூ இன்ஸ்டால் செய்திடலாம். இதற்கான கீ (key: TK8TP9JN 6P7X7 WWRFFTVB7QPF) உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள பைல்களில் தேவையானதை, அல்லது அனைத்தையும் பேக் அப் எடுத்து வைத்துக் கொள்வது நல்லது. இந்த முன் எச்சரிக்கை நடவடிக்கையினை நீங்கள் ஏற்கனவே எடுத்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண்டோஸ் எக்ஸ்பி, விஸ்டா அல்லது விண்டோஸ் 7 சிஸ்டத்தின் மீதே நீங்கள் மீண்டும் சிஸ்டம் அமைப்பதாக இருந்தாலோ, அல்லது அப்கிரேட் செய்வதாக இருந்தாலோ, உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவின் ரூட் டைரக்டரியைத் திறந்து, அதில் உள்ள Setup.exe பைலை இயக்கவும்.
இதில், விண்டோஸ் 7 பயனாளர்கள், எந்தவிதப் பிரச்னையும் இல்லாமல், அப்கிரேட் செய்யப்படுவதனை உணர்வீர்கள். ஏனென்றால், புரோகிராம்கள், விண்டோஸ் செட்டிங்ஸ், யூசர் அக்கவுண்ட்ஸ் மற்றும் பைல்கள் அனைத்தும் இம்போர்ட் செய்யப்படும். ஆனால், விண்டோஸ் 8, விஸ்டாவிலிருந்து புரோகிராம்களை சேவ் செய்திடாது. அதே போல விண்டோஸ் எக்ஸ்பியிலிருந்தும் புரோகிராம்கள் சேவ் செய்யப்பட மாட்டாது.
உங்கள் கம்ப்யூட்டரில் இயங்கிக் கொண்டிருக்கும் சிஸ்டத்துடன், விண்டோஸ் 8 சிஸ்டத்தினை டூயல் பூட் ஆக அமைக்க திட்டமிட்டால், நீங்கள் இன்னொரு ஸ்டோரேஜ் சாதனத்தினை இன்ஸ்டால் செய்திட வேண்டும்; அல்லது புதிய பார்ட்டிஷன் ஒன்றை உருவாக்க வேண்டும். புதிய பார்ட்டிஷனை உருவாக்க சற்று கூடுதல் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியதிருக்கும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 சிஸ்டம் இயக்குபவர்களுக்கு இது எளிதாக இருக்கலாம். இந்த சிஸ்டத்தில் உள்ள Windows’ Disk Management application என்ற (Start > search for Disk Management) அப்ளிகேஷனைப் பயன்படுத்தலாம். இந்த அப்ளிகேஷன் லோட் ஆனவுடன், உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் ட்ரைவினைக் காணலாம். கீழ்க்காணும் முறையில் செயல்படவும்:
* எந்த ட்ரைவில் விண்டோஸ் 8 அமைக்க விரும்புகிறீர்களோ, அதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “Shrink Volume” என்பதைத் தேர்ந்தெடுக்கவும். (விண்டோஸ் 8 சிஸ்டத்தின் 64 பிட் பதிப்பிற்குக் குறைந்தது 20 ஜிபி இடம் தேவைப்படும் என்பதால், அதற்கேற்ப ட்ரைவ் தேர்ந்தெடுக்கவும்.)
* தொடர்ந்து, “Unallocated” என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். இங்கு “New Simple Volume” என்று ஒன்றை உருவாக்கவும்.
* இவ்வகையில் கிடைக்கும் ட்ரைவ் எழுத்தைத் தேர்ந்தெடுத்து, அதனை quick format முறையில் பார்ட்டிஷன் செய்திடவும். இதனை NTFS பார்மட் பைல் வகையில் பார்ட்டிஷன் செய்வது அவசியம்.
இந்த ட்ரைவ் வால்யூமிற்கு ஏதேனும் ஒரு பெயர் கொடுக்கலாம். விண்டோஸ் 8 எனப் பெயர் கொடுப்பது, நமக்கு அதனை எளிதாக அடையாளம் காட்டும். விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள், Partition Logic போன்ற ஏதேனும் ஒரு தர்ட் பார்ட்டி டூல் மூலம், ட்ரைவ் பார்ட்டிஷன் செய்வது நல்லது. இந்த வழியிலும் மேலே கூறப்பட்ட அதே வழிகளையே பின்பற்ற வேண்டியதிருக்கும். ஒரு வால்யூம் ட்ரைவினைச் சுருக்கி, இன்னொன்றை உருவாக்க வேண்டும். இவ்வாறு உருவாக்கிய பின்னர், மைக்ரோசாப்ட் இன்ஸ்டலேஷன் புரோகிராம் உங்களை எளிதாக வழி நடத்தும். விண்டோஸ் 8 யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்கி, custom installation என்பதனைத் தேந்தெடுக்கவும். புதியதாய் நீங்கள் உருவாக்கிய பார்ட்டிஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
உங்கள் யு.எஸ்.பி. ட்ரைவினை இயக்குவதில் சிக்கல் இருந்தால், பயாஸ் செட் அப்பில், உங்கள் சிஸ்டம் ட்ரைவிற்கு முன்னால், யு.எஸ்.பி. ட்ரைவினை அமைக்க வேண்டியதிருக்கும். பூட் ஆப்ஷன்ஸ் பகுதியில் இதனை அமைக்கலாம். சரி, விண்டோஸ் 8 சிஸ்டம் அமைத்த பின்னர், அது தேவை இல்லை என நீங்கள் எண்ணினால், நீக்குவதும் எளிதாக அமையும்.
உங்களுடைய முதன்மை ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் நுழைந்து, பார்ட்டிஷன் சாப்ட்வேர் புரோகிராமினை இயக்கவும். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 பயன்படுத்துபவர்கள் Disk Management இயக்க வேண்டும். பின்னர், விண்டோஸ் 8 வால்யூமினை டெலீட் செய்திடுங்கள். மீதமுள்ள பகுதியை நீக்கிய இந்த பகுதியின் நீட்சியாக மாற்றவும். விண்டோஸ் 8 நீக்கப்பட்டதால், உங்கள் பூட் லோடர் பிரச்னைகுள்ளாகி, ஒரிஜினல் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இயங்குவதில் சற்றே சிக்கல் ஏற்படலாம். கவலையே பட வேண்டாம். இது சின்ன பிரச்னைதான். விண்டோஸ் விஸ்டா மற்றும் 7 பயன்படுத்துபவர்கள், ஆட்டோமேடிக் ஸ்டார்ட் அப் ரிப்பேர் டூலைப் பயன்படுத்தி சரி செய்துவிடலாம்.
விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்கள் தான் சற்று கூடுதல் சிரமத்தை எதிர் கொள்ள வேண்டியதிருக்கும். சுற்றி வளைத்து விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டத்தினையே மீண்டும் பதிய வேண்டியதிருக்கலாம். இவர்கள் விளக்கமான நடைமுறைக்கு http://www. techspot.com /guides/144removingwindows7/page2.html என்ற முகவரியில் உள்ள தளத்தில் காட்டப்பட்டுள்ள வழிமுறையினைப் பின்பற்றலாம்.

BY

கைபேசி உலகம்