Friday, 14 September 2012

telugu song


Wednesday, 12 September 2012

Important softwares


கட்டாயம் வைத்திருக்க வேண்டிய இலவச மென்பொருட்கள்


மென்பொருட்கள் இல்லாமல் நாம் கணினியை பயன்படுத்தவே முடியாது. நம்முடைய அத்தனை செயல்களும் ஏதோ ஒரு மென்பொருளை சார்ந்தே இருக்கும். இதில் நிறைய மென்பொருட்கள் நமக்கு இலவசமாகவே கிடைக்கின்றன. அதில் சில நமக்கு கட்டாயம் தேவைப்படும் அவற்றைப் பற்றி பார்ப்போம். 
Browser
ப்ரௌசர் என்பது இல்லாமல் நீங்கள் இப்போது இந்த பதிவை படிக்க முடியாது. இணையத்தில் நாம் செயல்பட ப்ரௌசர் ஒரு கட்டாய தேவை. இதில் சிறந்த இரண்டு. 

Antivirus  
அடிக்கடி பென்டிரைவ் அல்லது இணையத்தில் இருந்து டவுன்லோட் செய்யும் போது நம் கணினியில் வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. அம்மாதிரியான தருணங்களில் அவற்றை தடுக்கவோ அல்லது தவிர்க்கவோ ஒரு ஆண்டி வைரஸ் மென்பொருள் தேவை. அவற்றில் சிறந்த இரண்டு. 
File Compression Software 
File Compression Software என்பது நாம் அடிக்கடி பயன்படுத்தும் ஒன்று. இதில் winzip மற்றும் winrar போன்றவை கட்டண மென்பொருட்கள். இதை செய்ய சிறந்த இலவச மென்பொருட்கள். 
Image/Graphics editor, paint program, and picture organizer
இமேஜ் எடிட்டர் என்பது நமக்கு அடிக்கடி தேவைப்படும் ஒன்று. இதில் பெரும்பாலான மென்பொருட்கள் நமக்கு இலவசமாக கிடைப்பது இல்லை. ஆனால் சில நமக்கு இலவசமாக பல வசதிகளை தருகின்றன. அவற்றில் சிறந்தவை. 

கணினியில் ஓய்வு நேரங்களில் நாம் செய்வது பாடல்கள் கேட்பது மற்றும் படங்கள் பார்ப்பது. அத்தோடு Video Editor, Video Converter போன்றவை தொழில்ரீதியாக உள்ள Multimedia Tools. இதில் சிறந்த இலவச மென்பொருட்கள். 
Office Tools 
MS Office க்கு மாற்றாக பல இலவச மென்பொருட்கள் உள்ளன. அவற்றில் சிறந்தவை. 

Monday, 10 September 2012

Yeah, don’t do it on 64bit Vista.

Yeah, don’t do it on 64bit Vista.
If you made the mistake of trying to create a GodMode folder on 64Bit Vista (or Windows Server 2008), then explorer.exe will restart over and over.
So how do you get of the folder?  You have 2 choices.
1) You can go to another computer and browse to the desktop on your computer (\\computername\users\USERNAME\desktop\) and delete the GodMode folder.
2) If you have trouble with this (or don’t have another computer) then you can reboot into safe mode command prompt.  Then you can change directories to the desktop (cd c:\users\USERNAME\desktop).  Then run the following command: rd /s “GodMode.{ED7BA470-8E54-465E-825C-99712043E01C}”   Click Y, when asked.
(You can also rename the directory and delete it after you reboot).
Then reboot and everything should be back to normal

Saturday, 8 September 2012

geethai1

மனிதனிடம் ஆற்றலிருந்தாலும், அதிர்ஷ்டம் இல்லையெனில் பொருள் சேர்க்க இயலாது.இறைவனின் அருள் இருந்தால் தான் முயற்சியும் கை கூடும்.அலை கடலையும்,பல மலைகளையும் கடந்து முயன்றாலும் முயற்சி இல்லையெனில் பொருள் இல்லை .தெய்வ சம்மதம் இல்லா முயற்சியில் என்ன பயன்.உண்மையான இன்பம் என்பது பொருள் ஆசையைத் துறப்பதுதான். ஆசையை நிறைவேற்றுவது இன்பமல்ல.ஆசையே இல்லாமல் இருப்பதுதான் நிலையான இன்பம் பொருள் பெருகப் பெருக ஆசையும் பெருகிக் கொண்டே போகும். ஆசையை அறவே துறப்பதால் ஏற்படும் இன்பம், அதைப் பெறுவதால் ஏற்படும் இன்பத்தை விடப் பல மடங்கு உயர்ந்ததாகும்.ஆன்மாவை அலைக்கழிப்பதில் பொறாமை,வஞ்சனை ஆகிய இவற்றைக் காட்டிலும் காமமே மிகவும் சக்தி வாய்ந்தது.இவை அனைத்தையும் வைராக்கியம் என்னும் வாளால் வெட்டி வீழ்த்தி வேண்டும்.

Nanal

பலம் வாய்ந்த பகைவனிடம் பணிவாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை உணர்த்தும் நாணலும் கடலும் பற்றிய கதையைப் பீஷ்மர் கூறுகிறார்.

தருமரே! ஒரு சமயம் அசுரர்களின் இருப்பிடமும் நதிகளின் புகலிடமுமான கடலுக்கு ஒரு ஐயம் வந்தது.அது ஆறுகளை நோக்கி 'நதிகளே..உங்கள் வேகமான பிரவாகத்தின் போது பலம் மிக்க வேர்களை வேரோடும், கிளையோடும் கொண்டு வருகிறீர்கள்.ஆனால் நாணலை மட்டும் ஏன் நீங்கள் கொண்டு வருவதில்லை?அது அற்பத்தனமான புல்தானே என்ற அலட்சியத்தால்,அந்த நாணலை விட்டு விடுவீர்களா?உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன்' என்றது.அதற்கு கங்கை ஆறு பதில் அளித்தது.

'இந்த மரங்கள் எல்லாம் கொஞ்சமும் பணிவின்றி நிமிர்ந்து நிற்கன்றன.வேகமாக வரும் எங்களைச் சிறிதும் மதிப்பதில்லை.பணிவுடன் வணங்குவதில்லை.அதனால் பலனை அனுபவிக்கின்றன.தம் இடத்தை விட்டுப் பெயர்ந்து தலைகுப்பற எங்கள் பிரவாகத்தில் வீழ்ந்து, அடித்து வரப்பட்டு தங்களை அடைகின்றன.ஆனால் நாணலின் கதையே வேறு..பெரியாரைப் பணிதல் என்பது அதன் தனிக் குணம்.எங்களைக் கண்டு பணிந்து வணங்குகின்றது.அதனால் எங்கள் சினத்திற்கு ஆளாவதில்லை.நாங்கள் வரும் போது வளைந்து கொடுத்துப் பின் நிமிர்ந்து நிற்கின்றது.அது சமய சந்தர்ப்பத்திற்கேற்றவாறு எங்களுக்கு அடங்கி எங்கள் தலைமையை ஏற்றுக் கொள்கிறது.அதனால் அதன் இடத்திலேயே இருக்கின்றது.இங்கு வருவதில்லை.எந்தச் செடியாயினும் கொடியாயினும் மரமாயினும் எங்கள் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாது.ஆதலால் பணிந்து போவது மட்டும் நிலைத்து வாழ்கிறது.பணிவுடைமையை அறியாது விறைத்து நிற்பவை நிலைத்து நிற்காது எங்களால் அடித்து வரப்பட்டு இங்கே நிலை குலைந்து வீழ்கின்றன.'

'கங்கையின் இந்தக் கூற்றிலிருந்து தருமரே! ஒன்றைத் தெரிந்துக் கொள்ள வேண்டும்.அரசர்க்கு இக்கதை நல்ல பாடம்.பகைவனின் பேராற்றலின் முன் நிற்க முடியாது என்று தெரிந்தால் அந்த நேரத்துக்குப் பணிதல் வேண்டும்.பின் நாணலைப் போல நிலைத்து வாழலாம்.பகைவரின் ஆற்றலை உணர்த்தும் பணிவின்றி சேண் உயர் தேக்கு போல் நிமிர்ந்து நின்றால் முறிந்து விழ வேண்டியதுதான் என்ற தெளிவு யாவர்க்கும் வேண்டும்' என்றார் பீஷ்மர்.

sattenu