Tuesday, 18 February 2020

ராமநாதபுரம் சமஸ்தானம்..

வருடம் : கி.பி.1862
இடம் : ராமநாதபுரம் சமஸ்தானம்..
ஆண்ட மன்னர் : கிழவன் சேதுபதி ...

            இன்றைய இந்தியா எனும் நிலபரப்பு மொத்தமும்  ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக்கு கீழ்சென்ற பிறகு, பிரிட்டிஷ் மகாராணி ஒரு சட்டத்தை இங்கிலாந்தில் நிறைவேற்றுகிறார்.அது என்னவென்றால் தங்களின் ஆட்சி அதிகாரத்துக்குட்ப்பட்டு இருக்கும் இந்திய நிலப்பரப்பில் ஆளும் மன்னரோ,பாளையக்காரர்களோ,ஜமீன்களுக்கோ ஆண் வாரிசு இல்லையெனில் ஆளும் மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்தபின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தம் என சட்டமும் இயற்றினார்கள்.

      இப்போது மேலே சொன்ன ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண்பிள்ளையை தன் உறவினர்களின் சம்மதத்தோடு தத்தெடுக்கிறார்.முத்துராமரலிங்கத்தை தத்தெடுத்து வளர்த்த பின் சிறிது காலத்தில் ராணி இறந்துவிட ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னராக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்..

 அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராமநாதபுரம், சிவகங்கை என எல்லாம் ஒன்றிணைந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியரான ஆங்கிலேயர் மன்னர் இறந்த தகவலை லண்டனில் உள்ள மகாராணிக்கு தெரிவித்து,உடனடியாக  அவர் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து ராமநாதபுரம் ராணி சார்பில் தாங்கள் முத்துராமலிங்கத்தை தத்தெடுத்தது சரியே என வாதாடினார்கள் சமஸ்தானத்தார்.  சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தத்தெடுத்த முத்துராமலிங்கம் மன்னர் பதவியேற்றது சரியே என தீர்ப்பு வருகிறது...

அன்று பிரிட்டிஷ் அரசின் வெள்ளைய அதிகாரியான ஆட்சியருக்கு சட்ட ஆலோசனை தரும் சாஸ்திரம் கற்ற பார்ப்பனர்கள் இங்கு தான் தங்களின் விஷம விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் அந்த வழக்கு சமஸ்தானத்திற்கு எதிராக லண்டனில் உள்ள பிரிவிவ்யூ கவுன்சிலுக்கு வழக்கு எடுத்து செல்லப்படுகிறது. சாஸ்திர வேதவிற்பன்னர்கள் ஆட்சியருக்கு சொல்லி கொடுக்கிறார்கள், அன்றைய நாளின் ஹிந்து சட்டப்படி,பல ஸ்மிருதிகளின் படியும் ஒரு ஹிந்து விதவைபெண் தத்தெடுக்கவேண்டுமானால் ஆளும் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்கவேண்டும் என ஹிந்து சட்டத்தின் மூலமான ஸ்மிருதிகள் சொல்கின்றன,எனவே முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது என கொள்ளையடிப்பதற்காக வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை தந்தனர்.

இந்த வழக்கு நடந்த 1867-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சிலில் சமஸ்தானம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின்( ARYAN SCHOOL OF LAW) கீழ் வராது.எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் (DRAVIDIAN SCHOOL OF LAW) கீழ் வரும் என ஆணித்தரமாக வாதாடி தீர்ப்பு முத்துராமலிங்கத்திற்கு சாதகமாக அந்த வழக்கை வென்றது மிகமுக்கியமான திராவிட இயக்கத்தின் முன்னோடியான சட்ட வரலாறு..்.

முத்துராமலிங்கம் VS மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் ஜர்னல் (MOORES JOURNAL) எனும் லண்டன் பத்திரிக்கையில் புகழ்பெற்ற வழக்குகளின் அடிப்படையில் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வழக்கு இடம்பெற்றது.நம் இந்திய ஒன்றியத்தின் சட்ட புத்தகத்தில் "ஹிந்து குடும்ப சட்டத்திலும்" இடம்பெற்றிருக்கிறது.

அந்த திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் வழியே தான் பிற்காலத்தில் திராவிட இயக்க முன்னோடிகளும்,பெரியாரும் திராவிடர் கழக அமைப்பை நிறுவி தமிழர்களின் நலன்களுக்காக தங்களின் பெரும் உழைப்பை செலுத்தினார்கள்.

இந்த வரலாற்றை எல்லாம் அறியாமல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என அறியாமையால் அலறும்,திராவிடம் என்ற சொல்லே கிடையாது என உளரும் கும்பலுக்குமான பதில் இதுதான்...

ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???


கோயில் பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ???

பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????
🤔🤔🤔🤔🤔

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,

ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.

இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிரைவு வாழ்க்கை.

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர்,எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

அனைத்து சமூகமும் ஒரே முகமாக ஹிந்து என்ற ஒரு குடையின் கீழ், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நமக்கு அளித்ததே ஹிந்து தர்மமும், ஹிந்து  கோயில்கள் மட்டும்தான்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது

கோயில்கள், மற்றும் ஹிந்து தர்மத்தை பற்றி, எனது சிறிய பார்வை.

🙏🙏🙏🙏
படித்ததில் பிடித்தது!!

பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!



கவியரசு கண்ணதாசன்

கல்லூரியில் படிக்கும் போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.

இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

பக்குவமற்ற நிலை என்பது இரண்டு எக்ஸ்ட்ரீம்’ நிலை.

ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

இதுதான் அந்தப் பழமொழி.

பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

இனி விஷயத்திற்கு வருகிறேன்.

`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்”
என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

நல்லது.

`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலை நாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை
விடவா அவன் உயர்ந்து விட்டான்.

ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டு பிடிக்க முயலுகிறான்.

ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர,அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது
அவனுக்குத் தெரியுமா?
அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காண முடிகிறது.

இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக்
கண்டுபிடிப்பேன்.

என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

பக்குவமாய் வாழுங்கள்;
வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள்

ஐஐடி-யைத் தாக்குங்கள்!


இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலும் வட இந்தியர்களோ, பிராமணர்களோதான் பயில்கின்றனர். இதன் விளைவாக, இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும்.

பிராமணர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த உயர் வகுப்பினரும், நிதானமாகத் திட்டமிட்டு படித்து, அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் அவசப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்பார்களே, அதுதான் இந்த விடயத்தில் நடக்கிறது.

நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்? 12-ஆம் வகுப்பு படித்தவுடன், அவசர அவசரமாக ஏதேனும் ஒருக் கல்லூரியில் பிஎஸ்ஸி, பிஇ போன்ற ஏதேனும் ஒருப் படிப்பில் சேர்த்துவிடுகிறோம். இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தேன் என்று பெருமைப் பீற்றுகிறோம். ஆனால், பிள்ளைகளோ, தரமாகத் தயாராகி வராமல், தகுதியற்றவற்களாக சமூகத்திற்குள் நுழைந்து, வேலையில்லாமல் திரிகின்றனர். தொழிற்நுட்ப கிரீயேட்டர்களாக வரவேண்டியவர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களாக வலம் வருகின்றனர்.

பிஇ படித்துவிட்டு வீட்டிலும் இருக்க முடியாமல், சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் முட்டுச்சந்துகளில் அறை எடுத்துத் தங்கி, சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் திண்டாடி, தங்களின் வாழ்வே சூரையாடப்பட்டுவிட்டதை உணர்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

'முதல் கோணலே முற்றும் கோணல்' என்பதுதான். முதலில் எந்தப் படிப்பில் சேரவேண்டும். அதையும் எங்கு சேர வேண்டுமெனத் திட்டமிட்டுச் சேரவேண்டும். எத்தனையோ தகுதியுள்ள, திறமையான, புத்திசாலி மாணவர்கள், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதேவொரு ஓட்டை ஒடைச்சல் கல்லூரிகளில் சேர்ந்து நான்கு, ஐந்து ஆண்டுகளை விரையம் செய்துவிடுகின்றனர். அந்தக் கல்லூரிகளில் எந்த அறிவியல் புரிதலும் இல்லாத, அதேக் கல்லூரியில் படித்த மாணவர்களையே பேராசிரியர்களாக குறைந்தச் சம்பளத்திற்கு நியமித்து, தொடக்கத்திலேயே மாணவர்களின் வாழ்க்கையை அழித்துவிடுகின்றனர்.

ஆனால், பிராமணர்களும் வட இந்திய உயர் வகுப்பினரும், 12-ஆம் வகுப்பு முடித்தக் கையோடு, பிள்ளைகளை ஓரிரு ஆண்டுகள் வீட்டில் இருந்தே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத உதவியாக இருக்கின்றனர். அதற்கென எத்தனையோ புத்தகங்கள் வெளியில் கிடைக்கின்றன. அதனை முழுமையாகப் படித்து, இரண்டு மூன்று முறை நுழைவுத் தேர்வுகளை எழுதி, தங்களின் இடங்களைக் கைப்பற்றுகின்றனர்.

ஐஐடியிலும், மத்தியப் பல்கலைகழகங்களிலும் நுழைவதுதான் கடினம். நுழைந்தப்பின் எல்லாமும் மாணவர்களைத் தேடி வந்துவிடுகின்றன. பணம், தொழில்நுட்ப கருவிகள், வசதிகள், புத்தகம் என்று எல்லாமும் எளிதாக அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. சிறந்த அறிவியல் புரிதல் உள்ள மாணவர்களாக உருவாகி, புதியப் புதியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்ற பேராற்றல் கொண்ட மாணவர்களாக சமூகத்திற்குள் நுழைகின்றனர். இந்த திட்டமிட்ட நகர்வு நம்மிடம் இருக்கிறதா?

இல்லை..

எல்லாவற்றிலும் ஓர் அவசரம். உடனே பிஇ சேர்ந்தாக வேண்டும். உடனே வேலைக்கு போயாக வேண்டும். உடனே கை நிறைய சம்பாதிச்சாக வேண்டும். இதன் விளைவு, இன்று பொறியியல் துறை கவிழ்ந்து கிடக்கிறது. எல்லாத் துறைகளிலும் தகுதியில்லாத பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர். இந்தியப் பொருளாதாரம் சரிந்த கையோடு, பொறியாளர்களும் தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பலப் பொறியியல் கல்லூரிகளை மூடுகின்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

ஆனாலும், இன்றும் ஐஐடியன்களுக்கு வாழ்வு உச்சத்தில்தான் இருக்கிறது. ஐஐடியில் தன் படிப்பை முடிப்பதற்கு முன்பே, உலகம் முழுவதும் பறந்துச் சென்று பணியில் அமர்ந்துவிடுகின்றனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் ஒரே பதில்தான் வருகிறது. '12-ஆம் வகுப்பு படித்துவிட்டு, இரண்டு மூன்று ஆண்டுகள் கடினப்பட்டு படித்தேன்.. ஐஐடியில் சேர்ந்தேன்.. சாதித்தேன்..' என்பதுதான் அந்த பதில்.

உங்கள் வீட்டில் வளரும் இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்...

'ஐஐடியைக் குறிவையுங்கள்..'

-பேராசிரியர் ஆ.அருளினியன்

மஹாளய_அமாவாசை


              புரட்டாசி மாதம்  பௌர்ணமிக்கு. மறுநாள்   பிரதமை  திதியில். தொடங்கி   புரட்டாசி  அமாவாசை வரையிலான  நாட்கள்  மஹாளய பட்சம் என்றும், அதில்   புரட்டாசி  அமாவாசையானது   மஹாளய  அமாவாசை  என்றும்  அழைக்கப்படுகிறது.  மஹாளயம் என்றால்  பெரிய இடம்;  பட்சம்    என்றால் பதினைந்து நாட்கள்.  உயிர்களைக் கவரும் யமதர்மன்,  யமலோகத்திலிருக்கும்  உயிர்களைப்  பூமிக்கு அனுப்பி,  இப் பதினைந்து  நாட்களும்  தங்கள்  குடும்பத்தோடு  தங்கி வருமாறு  அனுப்புவாராம். மறைந்த  நம்  முன்னோர்கள். பித்ரு லோகத்திலிருந்து வந்து  நம்மோடு  தங்கும்  காலமே  மஹாளயபட்சமாகும்.
        மஹாளயபட்ச    விதிப்படி  அந்த  பதினைந்து  நாட்களும்  பித்ருக்களுக்காக  அன்ன  சிரார்த்தம் செய்ய வேண்டும்!  தானதர்மங்களையும்  இந்நாளில்  செய்யலாம். மஹாளய. அமாவாசை  நாளன்றாவது  முன்னோர் வழிபாடு  செய்ய வேண்டும்.  மற்ற நாட்களில்   தர்ப்பணம்( எள்ளுத் தண்ணீர் விடுதல்)  செய்ய வேண்டும்.
         பித்ரு வழிபாடு  செய்தால்   வீட்டில்   நல்லவை  நடைபெறும்;  அவர்களை  அலட்சியப்படுத்தினால்  சாபத்தைப்  பெற்றுத் தரும்.    நம் வாழ்வில் வரும் பல துன்பங்களுக்கு  முன்னோர் வழிபாடு செய்யாததும்  ஒரு  காரணம்  என்கின்றனர்.  இந்நாளில்  புனித நீராடி  பித்ரு கடன்   செய்வதும் சிறப்பான  நாளாகக்  கருதப்படுகிறது.
        நம் வாழ்வில் வரும் இன்பத் துன்பங்கள் யாவும் நாம்  முற்பிறவியில்  செய்த  பாவ புண்ணியத்திற்கு ஏற்ப அமையும்  என்பதே  நம்  நம்பிக்கை.   தவிர்க்க இயலாதக் காரணங்களால்   அமாவாசை திதி நாளில்  நம் முன்னோரை வழிபட முடியாமல் போயிருந்தாலும்,   அவர்களது  ஆன்மா  சாந்தியடைய  இந்த  பதினைந்து  நாட்களுமே அல்லது அதில்  ஏதோவொரு நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்து நற்பலனை அடையலாம்.
      அதனால் முற்பிறவியின்  பாவங்களும்,  பித்ரு சாபமும் முழுமையாக விலகும்.
   மஹாளயபட்சத்தில்,  குறிப்பாக  மஹாளய  அமாவாசையன்று  (28. 9. '19) அன்று  முன்னோருக்கு முறையான வழிபாடு செய்தால் நம் வாழ்வின்  அனைத்துவிதமான பிரச்சனைகளும் விலகி, எங்கும் சுபிட்சமே நிலவும். 🙏

சௌராட்டிரர்

சௌராட்டிரர் தற்போதைய குஜராத மாநிலத்தில் உள்ளராஜ்கோட் மாவட்டம்,
பவநகர் மாவட்டம்,ஜாம்நகர் மாவட்டம்,அம்ரேலி மாவட்டம் ,
ஜூனாகாத் மாவட்டம்,போர்பந்தர் மாவட்டம்,
தேவபூமி துவாரகைமாவட்டம், கிர்சோம்நாத்மாவட்டம், சுரேந்திரநகர்மாவட்டம், மற்றும்
அகமதாபாத்மாவட்டத்தின்
கிழக்கு மற்றும்
தென்கிழக்குப்
பகுதிகளில்
வாழ்ந்தவர்கள்.
அலாவுதீன் கில்ஜி
மற்றும் கஜினி முகமது
போன்ற
ஆக்கிரமிப்பாளர்களின்
கொலை
வெறியாட்டத்திற்கு
அஞ்சியும், கட்டாய
இசுலாமிய மத
மாற்றத்திற்கு
அஞ்சியும்,
சௌராஷ்ட்டிர தேசத்து
சௌராட்டிரர்கள் கி.பி.,
1025 முதல்
புலம்பெயர்ந்து, பல
இடங்களில்
பல்லாண்டுகள் சுற்றித்
திரிந்து இறுதியாகத்
தமிழ்நாட்டை தாயகமாகக்
கொண்டு வாழ்கின்றனர்.
புலப்பெயர்வுகள்
1024-1025இல்
கஜினி முகமது
சௌராட்டிர
தேசத்தினையும்,
சோமநாதபுரத்தில் உள்ள
சிவன் கோயிலையும்
சூறையாடிய பின்,
அங்கு வாழ்ந்த
சௌராட்டிரர்களின்
பெரும் பகுதியினர்,
தேவபூமி துவாரகை
மாவட்டத்தின்
தலைமையகமான
காம்பாலியம் நகரத்தில்
குடியேறி அறுபது
ஆண்டுகள் வாழ்ந்த பின்,
தற்போதைய
மகாராட்டிரத்தில் உள்ள
தேவகிரியில்
குடியேறி 300 ஆண்டுகள்
வாழ்ந்தனர். பின்னர்
தில்லி சுல்தான்
அலாவுதீன் கில்ஜியின்
படைத்தலைவரான மாலிக்
கபூர் தேவகிரியை 1307ல்
கைப்பற்றியபின்பு,
இந்துக்களின் புகழிடமாக
விளங்கிய விஜயநகரப்
பேரரசுசில் 1312ல்
குடியேறினர். விஜயநகரப்
பேரரசு,
பாமினி சுல்தான்களால்
ஆக்கிரமிப்பு
செய்யப்பட்ட பின்னர்
சௌராட்டிர சமூக மக்கள்
1675க்குப்
பின்பு தமிழ்நாட்டை
ஆண்டு கொண்டிருந்த
தெலுங்கு நாயக்கர்
மன்னர்கள் ஆளும்
பகுதிகளில்
குடியேறினர்.
சௌராஷ்ட்ர
விஜயாப்தம்
சௌராட்டிரர்கள்
சௌராட்டிர
தேசத்திலிருந்து
வெளியேறி, விசயநகரப்
பேரரசில் குடியேறிய
ஆண்டான கி. பி., 1312-ஆம்
ஆண்டு முதல்
சௌராஷ்ட்டிர
சௌராஷ்ட்ர விஜயாப்தம்
துவங்குகிறது.
தமிழ் நாட்காட்டிப்படி
சித்திரை மாதம்
ஒன்றாம் நாள்
சௌராஷ்ட்டிரர்களின்
புத்தாண்டு
துவங்குகிறது. 14
ஏப்பிரல் 2012 முதல் 13
ஏப்பிரல் 2013 முடிய உள்ள
காலம்
வரை சௌராஷ்ட்டிர
விஜயாப்தம் 700
ஆண்டுகள்
நிறைவு பெற்றுள்ளது.
மக்கட் தொகை
2001ஆம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கீட்டின்படி
இந்தியாவில் மொத்தம்
10,10,562 சௌராட்டிரர்கள்
வாழ்கிறார்கள்.
வாழ்விடங்கள்
சௌராட்டிர மொழி
பேசும் மக்கள் தமிழ்
நாட்டில் காஞ்சிபுரம் ,
ஆரணி, ஆம்பூர்,
வாலாஜாபேட்டை,
புவனகிரி, சிதம்பரம்,
சேலம் ,அம்மாபேட்டை
நாமக்கல், இராசிபுரம் ,
பரமத்தி, தஞ்சை,
திருபுவனம், தாராசுரம்,
துவரங்குறிச்சி,
திருவாரூர்,
கும்பகோணம்,
திருவையாறு ,
அம்மையப்பன், சேலம் ,
மாரியம்மன் கோயில்
(தஞ்சை), அய்யம்பேட்டை,
திருச்சி, உறையூர்,
திருவாப்பூர்,
(புதுக்கோட்டை),
இலுப்பூர், பரம்பூர்,
அறந்தாங்கி,
திண்டுக்கல்,
பெரியகுளம்,
நிலக்கோட்டை, மதுரை,
பரமக்குடி, எமனேசுவரம் ,
இராமநாதபுரம் ,
பாளையங்கோட்டை ,
கிளாக்குளம்,
வெள்ளாங்குழி,
வீரவநல்லூர், மற்றும்
கோட்டாறு
(நாகர்கோவில்)
பெயர்க் காரணம்
சௌ எனும் சொல் இந்தி
மொழியில் (सौ) =
நூறு எனவும்,
ராஷ்டிரம் எனும்
சொல் ’பெரும் பகுதி ’
என்றும்
பொருள்படும்.
நூறு பகுதிகளில்
வாழ்ந்தவர்கள்
இந்தி மொழியில்
செளராஷ்டிரர் என
வழங்கலாயிற்று.
மேலும் ’செளரம்’எனும்
சொல் சமசுகிருதம்
மொழியில் சூரியனை
குறிக்கும்,
செளராஷ்டிரர்
சூரியனை
வணங்குவோர் என்றும்
பொருள்படும்.
ஸ்ரீகிருஷ்ணனும்
சூரியனை வழிபடும்
மரபினர்
என்பது இங்கு நினைவு
கூரத்தக்கது.
கோத்திரமும்
குடும்பப்
பெயர்களும்
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிரர்களின்
கோத்திரங்களும்
குடும்பப் பெயர்களும்
சௌராட்டிரர்களின்
சமுதாயம், பண்டைய
வேதகால 64 ரிசிகளின்
பெயர்களில்
கோத்திரங்களாகப்
பிரிந்து உள்ளனர்.
ஒரே கோத்திரத்தில்
திருமண உறவு வைத்துக்
கொள்வதில்லை. இவர்கள்
யசூர் வேதம், ஆபஸ்தம்ப
சூத்திரத்தின்படி
அனைத்துச் சடங்குகள்
இச்சமூகப் புரோகிதர்கள்
செய்கின்றனர்.
ஒரு கோத்திரத்தில் பல
குடும்பப் பெயர்கள்
கொண்டுள்ளது.
பெரும்பாலான குடும்பப்
பெயர்கள், காரணப்
பெயர்களாலும் பட்டப்
பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.
மொழி
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிர மொழி
இவர்கள் பேசும் மொழி,
சமஸ்கிருதத்தின்
பேச்சு மொழியான
பிராகிருதம் என்ற
குடும்ப
மொழியிலிருந்து பிரிந்த
கிளை மொழியான
’சௌரஸேனி’
மொழியாகும். இந்த
‘சௌரஸெனி’ மொழியைத்
தான் சௌராட்டிரர்கள்
தேசத்தில்
இருந்தபோது பேசினர்.
இந்த மொழி குறித்து 1861
மற்றும் 1907 ஆகிய
ஆண்டுகளில் டாக்டர்.
ராண்டேல் மற்றும்
ராபர்ட் கால்டுவெல்
ஆகியவர்கள்
ஆய்வு செய்து,
தமிழ்நாட்டு
சௌராட்டிரர்கள் பேசும்
மொழி ‘சௌரஸேனி”
என்று உறுதிப்
படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் மேற்குப்
பகுதியில் புழக்கத்தில்
இருந்த பிராகிருத
மொழியிலிருந்து
வளர்ந்தவைகள்தான்,
”சௌராஷ்ட்ரீ’, ’அவதி’,
மற்றும் ’மஹராஷ்ட்ரீ’
மொழிகள். ’சௌரஸேனி’
மொழியிலிருந்து
வளர்ந்தவைகள் தான்.
இன்றைய குஜராத்தி
மற்றும் இராஜஸ்தானி
மொழிகள்” என்று
கலைக்களஞ்சியம்
(பகுதி 7. பக்கம் 301)
கூறுகிறது.
தமிழ்நாட்டில் வாழும்
சௌராட்டிரர்கள் பேசும்
மொழியை சௌராஷ்ட்ரம்
என்று அழைக்கிறது.
இவர்கள் பயன்படுத்தும்
சௌராஷ்டிர
மொழி எழுத்து
வடிவத்தை மதுரை
போராசிரியர் தொ.மு.
இராமராய் (1852-1913) என்ற
சௌராட்டிர
மொழி அறிஞர், வட
மொழி பேராசிரியரான
சதுர்வேதி
இலக்குமணாச்சாரியர்
என்பவரின் உதவியுடன்,
சௌராட்டிர
மொழி எழுத்துக்களை
சீர்திருத்தி, புதிய
வடிவில்
சௌராஷ்டிரா மொழியில்
பல பாடநூல்கள்
அச்சிட்டு
வெளிட்டுள்ளார்.
இம்மொழிக்கான
இலக்கணத்தை மதுரை,
தொ. மு. இராமராய்
மற்றும் சேலம், புட்டா.
ந. அழகரய்யர் ஆகியவர்கள்
செம்மைப்படுத்தி புதிய
இலக்கண நூல்கள்
அச்சிட்டு வெளியிட்டனர்
.
பல்துறையில் புகழ்
பெற்றவர்கள்
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிர சமூகத்தவர்
பட்டியல்
வேங்கடரமண பாகவதர்
வேங்கட
சூரி சுவாமிகள்
நடனகோபால
நாயகி சுவாமிகள்
கே.வி. இராமாச்சாரி
எல்.கே. துளசிராம்
என்.எம்.ஆர். சுப்பராமன்
என்.எம்.ஆர்.
கிருட்டிணமூர்த்தி
பி.எஸ்.ஏ.
கிருட்டிணய்யர்
எம்.வி. வெங்கட்ராம்
சி.எஸ். இராமாச்சாரி
கே. எல். என்.
கிருஷ்ணன்
கே.எல்.என். ஜானகிராம்
என்.எம்.ஆர்.
கிருட்டிணமூர்த்தி
பி.எஸ்.ஏ.
கிருட்டிணய்யர்
எம்.வி. வெங்கட்ராம்
கசின் ஆனந்தம்
கே.ஆர். சேதுராமன்
பி.வி. நரசிம்ம பாரதி
பத்மஸ்ரீ. டி.எம்.
சௌந்தரராஜன்
எம்.என். ராஜம்
ஏ.எல். ராகவன்
லீலாவதி
ஆரியங்காவு கோயில்
முதன்மைக் கட்டுரை:
ஆரியங்காவு ஐயப்பன்
கோவில்
கேரளாவிலுள்ள
ஆரியங்காவு ஐயப்பன்
கோவில் கோயிலில்
மார்கழி மாதத்
திருவிழாவின்
போது சௌராட்டிர
சமூகத்தினருக்கு தனி
மரியாதை
அளிக்கப்படுகிறது.
அதாவது இங்குள்ள
தர்மசாஸ்தாவிற்கு
சௌராட்டிரப்
பெண்ணை திருமணம்
முடிக்கும் நிகழ்வாக
ஒரு விழா உள்ளது.
இதன்படி "ஆரியங்காவு
தேவஸ்தான சௌராட்டிர
மகாஜன சங்கத்தினர்"
இங்கு பெண் வீட்டார்
என்கிற முறையில்
திருமணத்திற்கு
வேண்டிய
பொருட்களோடு வந்து
ஓரிடத்தில்
தங்கி திருமண
ஏற்பாடுகளைச்
செய்கிறார்கள்.
பிள்ளை வீட்டார் செய்ய
வேண்டிய
மரியாதைகளை மறக்காமல்
, முதல் நாள் பாண்டிய
அரசன்
பணமுடிப்பு அளிக்கும்
சடங்கையும்
தேவஸ்தானத்தார்
நிறைவேற்றி
வைக்கின்றனர்.
அன்று சௌராட்டிரர்கள்
குடும்பத்தோடு
மணப்பெண்ணைத்
திருமணத்திற்கு
அழைத்து வரும்
பாவனையில்
அருகிலுள்ள மாம்பழத்
துறைக்குச்
சென்று அங்குள்ள
பகவதியையும்
வணங்கி வருகின்றனர்."

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36

 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.
அவை:
1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',
2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',
3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',
4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',
5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்
அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .
அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .
மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி.🙏🏼🙏🏼
நன்றி.

DIABETIC

சக்கரை நோயை இந்த நாட்டை விட்டு அடித்துத் துரத்தும் வேளை வந்து விட்டது..

சக்கரை நோயை வைத்து
இந்தியாவில் மட்டுமே
700 மருந்து நிறுவனங்கள் (கம்பெனிகள்) ஆண்டுக்குப் பல இலட்சம் கோடி ரூபாய்களை அள்ளிச் செல்கின்றனர்.

இனிமேலாவது இதற்குச் செலவு செய்யும் பணத்தை உணவுக்காகச் செலவு செய்தால் உறுதியாக வேளாண்மை செழிக்கும்  ;

வேளாண்மை செழித்தால் எல்லாத் தொழில்களும் வீறுநடை போடும்.

இதற்கான
அரு மருந்து நம்மிடமே உள்ளது.

சக்கரை நோய்க்குக் காரணம் இன்சுலின் ஒழுங்காகச் சுரக்காதது தான்;

ஆனால், இயற்கையாகச் சுரக்க ஒரே மருந்து எது?

உமிழ்நீர் தான்.

சக்கரை நோய்க்கும் வாயில் ஊறக்கூடிய உமிழ்நீருக்கும் என்ன தொடர்பு உண்டு என்பதைப் பார்ப்ப்போம்.

உணவுடன் கலந்து செல்லும் உமிழ்நீர்தான்,
 கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்து.


உமிழ்நீர் எனும் இயற்கை மருந்தை நம் முன்னோர்கள், தாங்கள் உண்ணும் உணவுடன், அதிக அளவு எடுத்துக் கொண்டனர்.

வாழ்வதற்காக  உண்டனர்.

அதனால்தான் பொறுமையுடனும்
 அமைதியுடனும்
 பொறுப்புடனும் உணவருந்தினர்.

அதனால் அவர்கள் சாப்பிடும் உணவுடன் உமிழ்நீர் அதிக அளவு கலந்து வயிற்றுக்குள் சென்றது.

 கூடுதல் உமிழ்நீரைச் சுரக்கச் செய்வதற்காக ஊறுகாயைச் சிறிதளவு எடுத்துக் கொண்டனர்.

அதேபோல் உணவு உண்பதற்கு
30 நிமிடம் முன்னதாகவும்

 உணவு உண்டபின் 30 நிமிடம் கழித்தும்

 நாம் கடலைமிட்டாய் , வெல்லம் , பனங்கற்கண்டு,  பனங்கருப்பட்டி இவற்றில் ஏதாவது ஒன்றை எடுத்துக் கொண்டால் கட்டாயம் உமிழ்நீர் நன்கு சுரக்கும்.

நம் முன்னோர்களுக்கு உமிழ்நீரின் அருமை தெரிந்திருந்ததால் ஊறுகாய் என்ற உணவுப் பொருளை கண்டுபிடித்துப் பயன்படுத்தினர்.

தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது.

நமது வாழ்க்கையின் வேகம் அதிகரித்து விட்டது.

 உணவு சாப்பிடும் வேகமும் அதிகரித்துவிட்டது.
 வாழ்க்கைக்கான சாப்பாடு என்ற மனநிலை மாறி,

 சாப்பிடுவதும் ஒரு 'வேலை'தான் என்ற மனநிலைக்கு வந்துவிட்டோம்.

உணவை ரசித்து, ருசித்து; உமிழ்நீர் கலந்து சாப்பிடாமல்,

 அவசர அவசரமாக வாயில் போட்டு விழுங்குகிறோம்.

நாம் விழுங்கும் உணவில் உமிழ்நீர் இல்லாததால், அந்த உணவுக்கு இன்சுலின் சுரக்காது.

உணவிலுள்ள குளுக்கோசு, கிளைக்கோசனாக மாறாமல், அது சக்கரையாகவே இரத்தத்தில் தங்கிவிடும்.

நாளடைவில் அது சக்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோயாக மாறிவிடுகிறது.

சக்கரை நோய்க்கு மிகச்சிறந்த இயற்கை மருந்து நம் வாயில் ஊறும் உமிழ்நீர்தான்.

 எனவே,
நாம் சாப்பிடும் ஒவ்வோர் உணவிலும் உமிழ்நீர் கலந்து சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும்.

நாம் குடிநீர் அல்லது தேநீர் அருந்தினால் கூட உமிழ்நீர் கலந்துதான் வயிற்றிற்குள் அணுப்ப வேண்டும்.

 நீரிழிவு நோய் எனும் செயற்கையான நோயை உமிழ்நீர் எனும் இயற்கையான மருந்து கொண்டு அழித்து ஒழிப்போம்.

- தோழர் ஒருவரின் பதிவு..

Sunday, 4 November 2018

ஏழு ஏழு ஏழு ஏழு ஏழு

🔥🕉🔥🕉🔥🕉🔥🕉🔥  🏹
____________
ரிஷிகள் ஏழு...

அகத்தியர்,
காசியபர்,
அத்திரி,
பரத்வாஜர்,
வியாசர்,
கவுதமர்,
வசிஷ்டர்.
____________
கன்னியர்கள் ஏழு...

பிராம்மி,
மகேஸ்வரி,
கௌமாரி, வைஷ்ணவி,
வராகி,
இந்திராணி,
சாமுண்டி
____________
சஞ்சீவிகள் ஏழு...

அனுமன்,
விபீஷணர்,
மகாபலி சக்கரவர்த்தி,
 மார்க்கண்டேயர்,
 வியாசர்,
பரசுராமர்,
 அசுவத்தாமர்.
____________
முக்கிய தலங்கள் ஏழு....

வாரணாசி,
அயோத்தி,
காஞ்சிபுரம்,
மதுரா,
துவாரகை,
உஜ்ஜைன்,
ஹரித்வார்.
____________
நதிகள் ஏழு...

கங்கை,
யமுனை,
கோதாவரி,
சரஸ்வதி,
நர்மதா,
சிந்து,
காவிரி.
____________
வானவில் நிறங்கள் ஏழு...

ஊதா,
கருநீலம்,
நீலம்,
பச்சை,
மஞ்சள்,
ஆரஞ்சு,
சிவப்பு. 
____________
நாட்கள் ஏழு...

திங்கள்,
செவ்வாய்,
புதன்,
வியாழன்,
வெள்ளி,
சனி,
ஞாயிறு
____________
கிரகங்கள் ஏழு...

சூரியன்,
சந்திரன்,
செவ்வாய்,
புதன்,
குரு,
சுக்கிரன்,
சனி.
____________
மலைகள் ஏழு...

இமயம்/கயிலை, மந்த்ரம்,
விந்தியம்,
நிடதம்,
ஹேமகூடம்,
நீலம்,
கந்தமாதனம்.
____________
கடல்கள் ஏழு..

உவர் நீர்,
தேன்/மது,
நன்னீர்,
பால்,
தயிர்,
நெய்,
கரும்புச் சாறு.
____________
மழையின் வகைகள் ஏழு...

சம்வர்த்தம் - மணி (ரத்தினக் கற்கள்)
ஆவர்த்தம் - நீர் மழை
புஷ்கலாவர்த்தம் - பொன் (தங்க) மழை
சங்காரித்தம் - பூ மழை (பூ மாரி)
துரோணம் - மண் மழை
காளமுகி - கல் மழை
நீலவருணம் – தீ மழை (எரிமலை, சுனாமி)
____________
பெண்களின் பருவங்கள் ஏழு...

பேதை,
பெதும்பை,
மங்கை,
மடந்தை,
அரிவை,
தெரிவை,
பேரிளம் பெண்.
____________
ஆண்களின் பருவங்கள் ஏழு.

பாலன்,
மீளி,
மறவோன்,
திறவோன்,
விடலை
காளை,
முதுமகன்.
____________
ஜென்மங்கள் ஏழு...

தேவர்,
மனிதர்,
விலங்கு,
பறவை,
ஊர்வன,
நீர்வாழ்வன,
தாவரம்.
____________
தலைமுறைகள் ஏழு

நாம் -
முதல் தலைமுறை

தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை

பாட்டன் + பாட்டி -மூன்றாம் தலைமுறை

பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை

ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை

சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை

பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
____________
கடை வள்ளல்கள் ஏழு...

பேகன்,
பாரி,
காரி,
ஆய்,
அதிகன்,
நள்ளி,
ஓரி.
____________
சக்கரங்கள் ஏழு...

மூலாதாரம்,
ஸ்வாதிஷ்டானம், 
மணிபூரகம், 
அனாஹதம்,
விஷுத்தி,
ஆக்னா,
சகஸ்ராரம்.
____________
கொடிய பாவங்கள் ஏழு....

உழைப்பு இல்லாத செல்வம்,
மனசாட்சி இலாத மகிழ்ச்சி,
மனிதம் இல்லாத விஞ்ஞானம்,
பண்பு இல்லாத படிப்பறிவு,
கொள்கை இல்லாத அரசியல்,
நேர்மை இல்லாத வணிகம்,
சுயநலம் இல்லாத ஆன்மிகம்.
____________
கொல்லும் கொடிய பாவங்கள் ஏழு...

ஆணவம்,
சினம்,
பொறாமை,
காமம்,
பெருந்துனி,
சோம்பல்,
பேராசை.
____________
திருமணத்தின் போது அக்னியை சுற்றும்  அடிகள் ஏழு ... 

முதல் அடி.. பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்.

இரண்டாம் அடி.. ஆரோக்கியமாக வாழ வேண்டும்.

மூன்றாம் அடி.. நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்.

நான்காவது அடி... சுகத்தையும், செல்வத்தையும் அளிக்க வேண்டும்.

ஐந்தாவது அடி....
லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்.

ஆறாவது அடி...
நாட்டில் நல்ல பருவங்கள் நிலையாக தொடர வேண்டும்.

ஏழாவது அடி... தர்மங்கள் நிலைக்க வேண்டும்.

சிவ சிவா...

Wednesday, 30 May 2018

Tamilar paramparai


Siddhas advise to take proactive or after Nipah viral fever:-  Take 5 leaves of Pavazha malli LEAVES (in Tamil), Pavizha malli (in malayalam), Parijatha (in Kannada), har singar (in Hindi), tear into small pieces (leaves), boil in 200ml water till it reduced to 100ml in slim....and add 3 drops of lemon juice, 2 piece pepper (as powder)..... Drink for 3 times every day till fever reduced to facilitate Allopathy medicine..... This advise seems like Papaya leaf juice for Dengue.... Pls share to Kerala & TN people more..... Pls see picture below

இருதய அடைபப்பை நவீன முரையில் Angiography Just ஒரு மாத்திரை மூலம் சுத்தமாக Clear ₹5000 செலவில் ஆதாரம் Video Proof.                  J J Hospital Mumbai Please. Share. To All💙
🌴🌴🌴🌴🌴🌴

நாச்சியார்கோவில் கல் கருடன் அமைந்த விதம்.

#நாச்சியார்கோவில் கல் கருடன் அமைந்த விதம்.
#மருத்துவர்.ஜெ.ஜெயபிரகாஷ்
+919840341404

#தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த காற்றை சுவாசிக்கும் கல் கருடன்.

செங்கட்பெயர் கொண்ட செம்பியர்கோன்’ என்றும், ‘காவிரிக்கரையெங்கும் எழுபது மாடக் கோயில்களைக் கட்டியவன்’ என்றும் பெயர் பெற்ற கோச்செங்கட்சோழன்.

தேவசேனாபதியாரின் சிற்பக் கூடத்தில் பயின்ற மாணவன் மயூரசன்மன். முப்பத்தியிரண்டு சிற்ப நூல்களையும், பதினெட்டு உப நூல்களையும் கரதலப் பாடமாக அறிந்தவன்.

அது மட்டுமல்ல, இரு திங்களாக ‘யந்த்ர சர்வாஸ’ மந்திரத்தையும் உபதேசித்திருக்கிறேன். நீ எழுப்பும் அத்தனை ஆலயங்களுக்கும் தேவையான எந்த சிற்பத்தையும் வடித்துத் தரக்கூடியவன்" என்றவர், சற்றுத் தள்ளி நின்ற சீடனை நோக்கி, நீ சென்று மயூரசன்மனை அழைத்து வா" என்றார் தேவசேனாபதி.

சற்று நேரத்தில் உள்ளே நுழைந்து மன்னனையும் சிற்பியையும் வணங்கி நிமிர்ந்தவனின் பிராயம் இருபதுக்கு மேலிராது. கறுத்துச் சுருண்டு தோள்களை எட்டிய குழல்களும், அகன்ற நெற்றியில் சந்தனமும், விழிகளில் தீட்சண்யமுமாக நின்றவனைக் கண்டதும் மன்னன் முகத்தில் திருப்தி தெரிந்தது.

இவன் மயூரசன்மன், எனது பிரதான சீடன். உனது ஆலயப் பணிக்கு இவனை அழைத்துக் கொண்டு போகலாம் மன்னா" என்ற சிற்பி, முதலில் இவனை எங்கு அழைத்துச் செல்லப்போகிறா?" என்றும் வினவினார்.

மன்னனிடமிருந்து பதில் உடனே வந்தது, திருநறையூருக்கு" என்று.

‘செந்தளிர் கோதிக் குயில் கூவும்’ திருநறையூரின் ஆலயத்தை மன்னனுடன் அடைந்த மயூரசன்மனின் பார்வை திருக்குளத்தை ஒட்டி அடுக்கப்பட்டிருந்த பாறைகளின் மேல் விழுந்தது. பார்த்தவுடன் அவை கங்க நாட்டிலும் குவளாலபுரியிலும் விளையும் நீரோட்டமிக்க அடுக்குப்பாறைகள் என்பது புரிந்தது அவனுக்கு.

மயூரசன்மனின் விழிகள் பாறைகளை வெறிப்பதையும், அவற்றில் விரிந்த கனவையும் கவனித்த மன்னன், அவனை நெருங்கினான்.
மயூரா... ஏன் அந்தப் பாறைகளை அப்படிப் பார்க்கிறா?" என்றான் மன்னன்.
மன்னவா, இந்த ஆலயத்தில் நான் செதுக்க வேண்டிய சிற்பம் எது?" மயூரனின் பதில் கேள்வி யாகவே வந்தது. அவனது குரலும் கனவிலிருந்து ஒலிப்பது போலிருந்தது.

இங்கு எம்பெருமானுக்கு திருமணத்தை நடத்திவைத்த பெரிய திருவடியான கருடனைத்தான். மூலவரின் உயரமான ஆகிருதிக்கு ஏற்ற வடிவில் வடிக்க வேண்டும்" என்றான் மன்னன்.

மன்னவா, இந்த அடுக்குப் பாறைகள் பூமியின் நீரோட்டங்களுக்கு நடுவிலிருந்தவை. இவற்றுள் சில வற்றில் நீரோட்டம் கடந்து சென்ற மெல்லிய பாதைகள் இருக்கும். அவற்றைத் தேர்ந்தெடுத்து, சுத்தப்படுத்தினால் காற்று ஊடே செல்லும் பாதைகிட்டும். காற்று சென்று வரக்கூடிய வழி கிடைத்தால் இவை சுவாசிக்கும் பாறைகளாகும்.

மனிதருக்கு சப்த நாடிகள் உள்ளது போல் இவற்றுக்கும் நாடிகள் உண்டு. காற்றை சுவாசிக்கும் எந்த ஜீவனும் பூமியின் விசையை எதிர்த்து நடமாடக்கூடியது. நாம் செய்யக் கூடிய சிற்பத்தின் நாசியில் அந்தப்பாதை வருமாறு அமைத்தால், சந்திரனின் ஒளியை உள்வாங்கும் சந்திர காந்தக் கல்லைப்போல் இவை பூமியின் விசைக்கெதிராக சக்தி பெறும். பின்னர், ‘யந்திரசர்வாஸ’ மந்திரமும் வடிக்கும் சிற்பத்துக்குண்டான மந்திரத்தையும் பிரயோகிக்கும்போது அவை உயிர்பெற்று விடும்."

மன்னனுடன் ஆலயத்துள் நுழைந்த மயூரசன்மன் மூலவரின் இடப்புறம் உள்ள பகுதியைத் தேர்ந்தெடுத்தான். மன்னவா, அந்தப் பாறைகளைக் கொண்டு இங்கு மண்டபத்தை அமைக்கிறேன். இங்கிருந்து பிராகாரத்தில் இறங்கும் வழிநெடுக நான் கூறும்படி அந்தப் பாறைகளைக் கொண்டு பாதை அமைத்து விடுங்கள். மண்டபத்தின் பீடத்தில் பூமியின் விசை எதிர்ப்புறம் இருக்கும்படி அமைத்து விட்டால், கருட சிற்பத்தின் எடை மிகக் குறைவாகவே இருக்கும். அதே பாறைகளைக்கொண்டு வெளிப் பிராகாரம்வரை பாதையாக அமைத்து விடலாம்" என்றான் மயூரசன்மன்.

சரி மயூரா, அதனால் என்ன நிகழும்?" என்றான் மன்னன்.

மயூரசன்மனின் விழிகள் மின்னின. மன்னா, மூலவரின் உயரத்துக்கும் ஆகிருதிக்கும் ஏற்றபடி சுமக்கும் கருடனுக்கும் உருவம் அமைத்தால் ஆயிரம் மடங்கு எடையும் அதிகமாக இருக்கும். ஆனால், அந்த எடை இந்த மண்டபத்தில் பத்து மடங்கு குறை வாகவே இருக்கும். கருடன் புறப்பாடு காணும் போது கருடனைத் தூக்க நால்வரே போதும். மண்ட பத்தை விட்டுக் கீழிறங்கினால் தூக்குபவர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும்.

பாதை நெடுக நான் அமைக்கும் அடுக்குப்பாறைத் தளத்தில் ஈர்ப்பு விசை பாதிப்பாதியாகக் குறைந்துகொண்டே வரும். எனவே, மேற்கொண்டு செல்லச் செல்ல கருடன்தன் சுய எடையைப் பெற்றுவிடுவார். அப்போது தூக்கு பவர் எண்ணிக்கையும் இரண்டிரண்டு மடங்காக உயர்ந்துகொண்டே செல்லும். மீண்டும் மண்டபத் துக்குத் திரும்பி வரும்போது அதே எண்ணிக்கையில் எடை குறைந்துகொண்டே வரும்" என்றான் மயூரசன்மன்.

செங்கட்சோழனின் முகத்தில் மலர்ச்சி தெரிந்தது. அப்படியே செய்துவிடு மயூரா. உனக்கு உதவியாக கல் தச்சர்களையும், ஆட்களையும் இப்போதே ஏற்பாடு செய்கிறேன்" என்றான் மன்னன்.

தமிழகத்தின் சிற்பக்கலை அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் மயூரசன்மன் வடித்த அந்தக் கல் கருடன் இன்றளவும் அப்படியே #நாச்சியார்கோயில் என்று அழைக்கப்படும் #திருநறையூரில் நிற்கிறது.

மார்கழியிலும் பங்குனியிலும் பிரம்மோத்ஸவம் நடைபெறுகிறது. கருட சேவையின்போது பிரம்மாண்டமான அந்தக் கல் கருடனை முதலில் நால்வரும், மண்ட பத்தை விட்டு இறங்கியதும் எண்மரும், பின் வெளிப் பிராகாரத்துக்கு வரும்வரை இரண்டிரண்டு மடங்காக அறுபத்திநான்கு பேர் வரை தூக்கி வர வேண்டியிருக்கிறது. அதுமட்டுமின்றி, ஆலயத்தை விட்டு வெளி வந்ததும், கல் கருடனின் மேனியில் மனிதர்களைப் போல் வியர்வை வழியத் தொடங்குகிறது!..

Wednesday, 29 June 2016

youtube downoad

http://www.clipconverter.cc/
http://www.mediaconverter.org/

Sunday, 15 May 2016

Birthstone




Original Birth Stones, Gem Stones Ruby (Manikyam) for KARTHIKA, UTHRAM, UTHRADAM Coral (Red pavizham) for Makayiram, Chithira, Avittam Emerald (Marathakam) forAayilyam, Thrikketta, Revathi, Yellow saphire (Manja Pushyaragam) for Punartham, Visakham, Pooruruttathi, Blue Saphire (Indraneelam) for Pooyam, Anizham, Uthrattathi Garnet ( Gomedakam) for Thiruvathira, Chothi, Chathayam, Cat's eye (Vaidooryam) for ASHWATHY, MAKAM, MOOLAM MOONSTONE - CHANDRAKANTHAM for Rohini, Atham, Thiruvonam, Special Gomti Chakra - Special Gomti Chakra Gem Stone Rings - Gomti Chakra Rings, Gomti Chakra, Special Stone For All, For Huge Money, Peace In Mind

Sunday, 8 February 2015

சோதிடமும் வானியலும்:












அண்டத்தில் லட்சகணக்கான விண்மீன் குடும்பங்கள் ( நட்சத்திரங்கள்) உள்ளன.  அவற்றுள் எம்மைச் சூழ்ந்துள்ள சூரிய-விண்மீன் குடும்பமும் ஒன்றாகும். இந்த சூரிய குடும்பத்தில் பல கிரகங்களும், அவற்றின் துணைக் கிரகங்களும் உள்ளன. அவை யாவும் சூரியனை தலைமை - மையமாக கொண்டு அதனைச் சுற்றி் வலம் வருகின்றன. இவற்றுள் நாம் இருக்கும் பூமியும் ஒன்றாகும். 



இந்த கோள்களில்; பூமிக்கு ஒரு துணைக்கோளும்; வியாழனுக்கு 63 துணைக்கோள்களும், சனிக்கு 62 துணைக்கோள்களும், யுரேனசுக்கு 27 துணைக்கோள்களும், நெப்டியூனுக்கு 13 துணைக்கோள்களும்;  செவ்வாய்க்கு உருளைக் கிழங்கு போல் இரண்டு சிறிய துணைக்கோள்களும் உள்ளன. புதனுக்கும், வெள்ளிக்கும் துணைக்கோள் இல்லை.



இந்த கிரகங்கள் யாவும் தம்மிடையே உள்ள ஈற்ப்பு விசையினால் இணைக்கப்பெற்று ஒரு குடும்பம் போல் அண்ட வெளியில் இயங்கிக் கொண்டு  இருக்கின்றன. இவற்றுள் பூமியினுடைய துணைக்கோளான சந்திரனின் அசைவு பூமியில் உள்ள உயிகள் மீது பல தாக்கங்களை உண்டுபண்ணுவதால்; சோதிட சாஸ்திரத்தில் விஷேஷமாக கூறப்பெற்றுள்ளது.



சூரியன் உட்பட எல்லா விண்மீன்களும் ஒளிர்வன. சூரியனுடைய கிரகங்களும், உப-கிரகங்களும் தானாக ஒளிர்வதில்லை. ஆனால் அவைகள் யாவும் விண்மீன்களின் ஒளியைப் பெற்று பிரகாசிக்கின்றன (பிரதிபலிக்கின்றன). புராதன சோதிட நூல்கள் பூமியில் ஆதிக்கம் செலுத்தும் 9 கோள்களில் உண்மைக் கோள்கள்-7 என்றும், மற்றைய இரண்டும் நிழற்கோள்கள் என்றும் தெளிவு படுத்தியுள்ளது.



பூமி சூரியனை மையமாக கொண்டு Ecliptic எனப்படும் கிரக சுற்றுப் பாதை வலயத்தினூடாக ஊடாக தனக்கென அமைந்த பாதையில் சுற்றுவதைப்போல்; பூமியின் உடன் பிறப்புகளான மற்றைய 7 கிரகங்களும் இவ் கிரக சுற்றுப் பாதை வலயத்தினூடாக தத்தமது பாதைகளில், வித்தியாசமான வேகங்களில் சூரியனை சுற்றி வருகின்றன என்பதுவும் விஞ்ஞானிகளின் முடிபு. (சந்திரன் பூமியின் உபகிரகம் அதனால் அதன் சுற்று வித்தியாசமானது)



சூரிய கோள்கள் பின்வருமாறு:
1. சூரியன் - ஞாயிறு - Sun,  2. சந்திரன் - திங்கள் -  Moon,   3. செவ்வாய் - Mars   4. புதன் - Mercury
5. குரு - வியாழன் - Jupiter  6. சுக்கிரன் - வெள்ளி - Venus  7. சனி - Saturn      8. இராகு - (நிழற்கோள்)
9. கேது (நிழற்கோள்)




நாம் ஆலயத்தை சுற்றி அங்கப் பிரதிஷ்டை செய்வது போல் பூமியும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு  சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. பூமி தன்னைத் தான் ஒருமு்றை சுற்ற ஒரு நாளும். சூரியனை ஒருமுறை சுற்றிவர 365 1/4 நாட்களையும் எடுக்கின்றது. அதனைச் சோதிடம்; சூரியன் பூமியை சுற்றிவர  365 1/4 நாட்கள் எடுக்கின்றது என கணிக்கிறது. பூமி தன்னைத் தானே சுற்றுவதனால் பகல், இரவு தோன்றுகின்றது. பூமி சூரியனைச் சுற்றி வலம் வருவதனால் பருவ காலங்கள் உண்டாகின்றன. இதுவே இயற்கையின் நியதி.



பூமியின் உப-கிரகமான சந்திரனும் தன்னைத் தானே சுற்றிக் கொண்டு பூமியை சுற்றி வர சைடீரியல் மாதப்படி 27.32 நாட்களும்; சந்திர மாதப்படி 28.25 முதல் 29.53 நாட்களும் ஆகின்றன. சந்திரன் தன்னைத் தானே ஒருமுறை சுற்றுவதற்குள் பூமி 27 முறை தன்னைத் தானே சுற்றி விடுகின்றது. அத்துடன் சந்திரன் பூமியுடன் இணைந்து சூரியனையும் சுற்றி வலம் வருகின்றது. சந்திரன் பூமியை சுற்றுவதனால் பூமியில் பூரணை, அமாவாசை, போன்ற 30 திதிதிகள் உண்டாகின்றன (விபரமாக பஞ்சாங்கம் பகுதில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது).



Zodiac என்றழைக்கப்பெறும் இராசி மண்டல வலயம்:
புவியில் கோள்களினால் ஏற்படும் எல்லா (நிகழ்வுகளையும்) மாற்றங்களையும் உணர்ந்து கொள்வதற்கும், சோதிடப்படி கணக்கிடுவதற்கும், கோள்களின் நிலைகளையும், நகர்வுகளையும் பூமிக்கு சார்பாக கணித்துக் கொள்வதற்கும் சோதிட சாஸ்திரம் புவியை மையமாகக் கொண்ட கற்பனையான "Zodiac - என்றழைக்கப்படும் இராசி மண்டல வலயம்" அல்லது "அயன வீதி" என்ற ஒரு முறைமையை பயன்படுத்துகின்றது.




Zodiac என ஆங்கிலதில் அழைக்கப்படும் இராசி மண்டல வலயம்; கண்ணிற்கு புலப்படாத ஒரு கற்பனை வடிவமாகும். இவ் வலயம்; சூரியனை மையமாக கொண்டுள்ள Ecliptic எனப்படும் கிரக சுற்றுப் பாதைக்கு இருபுறமும் 9 பாகை அளவு விரிந்துள்ள வட்டப் பட்டி போன்ற ஒரு பகுதியெனக் கூறலாம்.  பூமியை சுற்றியுள்ள கற்பனையான இராசி மண்டல வலயத்தினூடாக சூரியன் உள்ளிட்ட எல்லாக் கிரகங்களும் பூமியை சுற்றி வருவதாக சோதிடம் கணிக்கின்றது. 



கிரகங்கள் சூரியனை வலம் வரும்போது நீள் வட்டமாக சுற்றுவதனால் Ecliptic எனப்படும் கிரக சுற்றுப்பாதை முட்டை வடிவமாக அமைந்துள்ளது. அதுபோல்  Zodiac என்று அழைக்கப்படும் இராசி மண்டல வலயமும் முட்டை வடிவினதாக அமைகின்றது.



பூமியின் துருவ அச்சினை மையமாகக் கொண்டு பூமியைச் சுற்றி உள்ள "Zodiac எனப்படும் கற்பனை இராசி மண்டல வலயத்தில் " உள்ள 360 பாகைகளையும் ஒவ்வொன்றும் 30 பாகைகளைக் கொண்ட 12 பகுதிகளாக பிரித்து கணிக்கப்பட்டுள்ளது.  அவை "1" பாகையில் இருந்து "30" பாகை வரை "மேஷ-ராசி" எனவும்;  "31" பாகை முதல் "60" பாகை வரை "இடப-ராசி" எனவும்; இதுபோல் அடுத்து வரும் ஒவ்வொரு 30 பாகைகளைக் கொண்ட பகுதிகளும்; கீழே தரப்பட்டுள்ள 12 - இராசிகளின் பெயர்களால் அழைக்கப்பெறுகின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள மேஷ ராசியில் உதயமாகும் சூரிய பகவான் மீண்டும் மேஷ ராசிக்கு வரும் வரை உள்ள காலம் ஓர் தமிழ்-வருஷமாகும்.



இராசிகள்-12: 1. மேஷம், 2. ரிஷபம், 3. மிதுனம்,  4. கர்க்கடகம், 5. சிம்மம், 6. கன்னி,  7. துலாம்,  8. விருச்சிகம், 9. தனுசு, 10. மகரம், 11. கும்பம்,  12. மீனம் என்பன.



வான் வெளியில் லட்சக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ள போதும்; அவற்றுள் சிலவே பூமியின் Zodiac எனப்படும் இராசி மண்டல வலயத்தில் (சுற்றுப்பாதைக்குள்) அமைந்து பூமியில் விழைவுகளை உண்டுபண்ண கூடியனவாக உள்ளன. இவ் இராசி மண்டல வலயத்தினுள் 27 நட்சத்திர கூட்டங்கள் அமைந்துள்ளதாக கணிக்கப்பெற்றுள்ளன. இந்த 27 நட்சத்திரங்களும் ஒவ்வொன்றும் (3.33 பாகை) 3 பாகை 20 கலைகள் கொண்ட நான்கு பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசியும் ஒன்பது நட்சத்திர பாதங்களை (21/4 நட்சத்திரங்களை) கொண்டனவாக அமைந்துள்ளது.



நட்சத்திரங்கள் - 27:
1. அஸ்வினி, 2. பரணி, 3. கார்த்திகை, 4. ரோகினி, 5. மிருகசீரிஷம், 6. திருவாதரை, 7. புனர்ப்பூசம், 8. பூசம், 9. ஆயில்யம், 10. மகம், 11. பூரம், 12. உத்திரம், 13. ஹஸ்தம், 14. சித்திரை, 15. ஸ்வாதி, 16. விசாகம், 17. அனுஷம், 18. கேட்டை, 19. மூலம், 20. பூராடம், 21. உத்திராடம், 22. திருவோணம், 23. அவிட்டம், 24. சதயம், 25. பூரட்டாதி, 26. உத்திரட்டாதி, 27. ரேவதி என்பனவாம்.
நட்சத்திரங்களும் ராசிகளும்: 




சோதிட கணிப்பின் படி;  பூமியில் பட்டிபோல் சுற்றியுள்ள (கற்பனையான) இராசி மண்டல வலயம்; பூமி சூரியனைச் சுற்றும் போது இராசி மண்டல வலயத்தில் உள்ள ஏதோ ஒரு ராசியில் சூரியன்  சஞ்சரிப்பார். சூரியனைப் போன்றே எல்லாக்கிரகங்களும் ஏதாவது ஒரு ராசியில், அந்தந்த ராசியில் உள்ள நட்சத்திரத்தின் மேல் சஞ்சாரம் செய்கின்றன. சந்திரன் ஒரு குறிப்பிட்ட தினத்தில் குறிக்கப்பட்ட நேரத்தில் எந்த நட்சத்திரத்தின் எந்த பாதத்தில் சஞ்சரிக்கிறாரோ அதுவே அப்போதய நட்சத்திரமும் அதன் பாதமும் என சோதிடம் கூறுகின்றது.



சூரியன் சித்திரை மாதத்தில் மேஷ-ராசியிலும், வைகாசி மாதத்தில் ரிஷப-ராசியிலும் சஞ்சரிக்கிறார். இப்படியே ஒவ்வொரு தமிழ் மாதமும் அடுத்துள்ள ஒவ்வொரு ராசியில் சஞ்சரித்து, தொடர்ந்து 12 ராசிகளிலும் சஞ்சரிக்கிறார். ஜோதிட கணிப்பின் படி சூரியன் தனது சுற்றை மேஷராசியில் அஸ்வினி நட்சத்திரத்தில் ஆரம்பித்து மீனராசியில் உள்ள ரேவதி நட்சத்திரத்தை கடந்து செல்ல (12-ராசிகளையும் சுற்றிவர) 365.25 நாட்கள் எடுக்கின்றது.



Zodiac எனப்படும் இராசி மண்டல வலயம் நீள் வட்டத்தின் அமைப்பை கொண்டதனால் ஒருவருடைய ஜாதக-குறிப்பு கணிக்கும் போது நீள்வட்டமாக வரைதல் வழக்கமாக இருந்து வந்துள்ளது. காலப்போக்கில் இவ் வழக்கம் திரிபுற்று தற்போது நீள் சதுரமாக வரையப்படுகிறது.  ஜாதக-குறிப்பு என்பது சிசு பிறந்த தற்பரையில் பேரண்டத்தின் கோசர (கிரக) நிலையையும், லக்கினத்தையும் குறிப்பதாகும்.



பூமியைச் சுற்றியுள்ள ராசிச் சக்கரமானது; பூமி சுற்றும் போது ஒவ்வொரு கணமும், பூமியிலுள்ள ஒரு புள்ளிக்குச் சார்பாக, அடிவானத்தில் ஏதாவது ஒரு இராசியிலுள்ள ஒரு புள்ளி உதயமாகும். சோதிடத்தின்படி, அப்புள்ளியே குறிப்பிட்ட இடத்திற்கு அந்நேரத்துக்குரிய இலக்கினம் ஆகும்.  அந்த குறிப்பிட்ட நேரத்தில் பிறக்கும் ஒரு குழந்தையின் ஜாதக-குறிப்பில் உதயமான அந்த ராசி இலக்கினமாக "//ல" என குறிக்கப்பட்டிருக்கும். இது அப்புள்ளி இருக்கும் இராசியில் அது சென்ற கோண அளவைக் குறிக்கும் பாகை, கலை, விகலை அளவுகளில் குறிப்பிடப்படுகின்றது.



நம்மைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு கோளும் (நட்சத்திரங்களும், கிரகங்களும்) தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளன. அவற்றின் பிரமாணம், தட்ப-வெட்பநிலை, அதில் அடங்கியுள்ள தாதுப்பொருள்கள் என்பனவற்றின் அடிப்படையில் அவற்றின் கதிர்வீச்சுகள் வெளிப்படுகின்றன. சனிக் கோள் கருநீல நிறத்தையும், செவ்வாய்க் கோள் சிகப்பு நிறத்தையும் கொண்டிருப்பதுபோல் ஒவ்வொரு கோளுக்கும் தனித்தனி நிறமும், வெவ்வேறு நிறங்கொண்ட ஒளிக் கதிர்களும் உண்டு.



அத்துடன் ஒளிக் கதிர்களின் அலை (வீச்சின்) நீளங்களும், ஒளிச் சிதறல் (தெறிப்பு) தன்மைகளும் வேறுபட்டவை யாகும். ஜாதக-குறிப்பில் குறிக்கப்படும் ஒன்பது கோள்களும் தத்தமது ஒளிக் கதிர்களை வெளிப்படுத்திக் கொண்ட வண்ணம் உள்ளன. அவை அமைந்துள்ள இடத்திற்கேற்ப பிற கோள்களின் கதிர் வீச்சையும் பெறுகின்றன.



அதேபோல் உலகில் தோன்றி வாழும் உயிரினங்களின் உடலில் உள்ள தாதுப்பொருள்கள்; கிரகங்களில் இருந்து வரும் (நல்ல-தீய) கதிர்வீச்சை எந்த அளவு உட்கிரகிக்கின்றதோ அதற்கேற்ற வகையில் அவற்றிற்கு நன்மைகளும், தீமைகளும் ஏற்படுகின்றன என ஜோதிடம் கூறுகின்றது. அதனால்; நன்மை தரக்கூடிய கதிர்களை உட்கிரகிக்ககூடியதாக "அதிஸ்டக் கற்களை"  பாவிக்கும்படி சோதிடர்கள் சிபார்சு செய்கின்றனர். அதன் பயனாக வாழ்க்கையில் அதிக நன்மைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதாக ஜோதிடர்கள் பரிந்துரைக்கின்றனர். (அதிஸ்டக் கற்கள் பற்றிய விபரம் இவ் இணையத்தளத்தில் "அதிஸ்டக் கற்களை"  பகுதியில் பதியப்பட்டுள்ளன).



பல்வேறு ஒளிக்கதிர்கள் ஒன்றையொன்று கலந்து திறன் குறைந்த கதிர்கள் அழியவும், திறன் மிகுந்த ஒளிக்கதிர் மேலோங்கவும் செய்யும். அன்றியும் இரு கதிர்களின் கூடுகையின் புதிய விளை கதிர்களும் உருவாகும். இவ்வாறு பிற கோள்களின் கதிர்களை அழிக்கும் கதிர் எந்தக் கோளிலிருந்து வருகின்றதோ அக்கோள் "உச்சம்" பெற்றதாக கணிக்கப்பெறுகின்றது. இதை "கிரக வலிமை" என்பார்கள்.



ஒவ்வொரு கோளும் தனித்தனி ஆற்றல் கதிர்களைப் பெற்றுள்ளது போன்று வேறுபட்ட மின் தன்மையும், வேறுபட்ட காந்தப் புலமும் பெற்றுள்ளன. கோள்கள் ஒன்றையொன்று கடக்க நேர்கையில் இருவேறு காந்தப் புலக்கதிர் வெட்டினால் ஒத்த புலம் கொண்ட கோள்கள் விலக்கமடையும்.



ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் "உயிர்க் காந்தம்" (ஜீவ காந்தம்) ஒன்றுண்டு. இந்த உயிர்க் காந்தம் மனிதன் ஜெனன மாகும் போது அவனுக்கு உருவாகின்றது. நாம் கருப்பையில் ஒளியைப் பெறவில்லை. கருப்பையினுள் சிசுவைச் சூழ்ந்துள்ள திரவம் பிற கதிவீச்சுகளில் இருந்து சிசுவை பாதுகாக்கின்றது. சிசு பிறக்கும் போது எந்தெந்தக் கோள்களின் கதிர் வீச்சுகள் எந்தெந்தப் பாகைகளிலிருந்து எவ்வளவு வலிமையுடன் சிசுவில் படுகின்றனவோ அவற்றின் தொகுபயனே நமக்கு உயிர்க் காந்தப் புலத்தை ஏற்படுத்துகிறது.



வேறு விதமாக கூறுவதாயின் ஒருவருடைய பூர்வ-ஜன்ம புண்ணிய-பாபங்களை அனுசரித்து, அவைகளின் வினைப் பயன்களை அனுபவிக்க கூடியதான கிரகங்களின் நிலை ஏற்படும் பொழுது ஒரு சிசு பிறக்கின்றது. அப்பொழுது அதற்கேற்ற உயிர்க் காந்தப் புலம் சிசுவில் உருவாகின்றது. அந்த உயிக் காந்தப் புலத்தின் தன்மையை எடுத்துக் காட்டுவதெ எமது ஜாதகக்-குறிப்பு என்று கூறலாம்.



விளக்கமாக கூறுவதாயின்; ஒரு புகைப்பட கருவியில் (கமராவில்) படச்சுருளில் நொடிப் பொழுதிற்குள் பதியப்படும் முதல் ஒளி யின் வடிவமே அதில் பதியப்படுதல் போன்று; நாம் பிறந்த வேளையின் கோள்களின் அமைவிடமும்; அவற்றின் கதிரியக்கம், ஒளிச்சிதறல், ஒளிக்கசிவு போன்ற தன்மைகளுக் கேற்பவே நமது உயிர்நிலைக் காந்தமும் (படச் சுருள்-நெகரிவ் ஆக) அமைகிறது. ஒளிப்படத்தில் வெளிச்சம், படம் பிடிக்கப்படும் வேகம், ஒளி அளவு முதலியவற்றால் படம் மங்கலாகவோ தெளிவாகவோ அமைதல் போன்று நாம் பிறக்கும் காலத்தின் உருவாகும் உயிர்க் காந்தப் புலமும் கோள்களின் நிலைகளால் எமது வாழ்கை எப்படி அமையும் என படம் பிடித்துக் காட்டுகின்றது என கூறலாம்.



மேலும், வலிமையான காந்தப் புலத்தில் செலுத்தப்படும் மின் கதிர்கள் வெட்டப்பட்டு இயக்கம் நிகழுதல் போன்றே உயிர்க் காந்தப் புலத்திலும் அண்ட வெளிக் கதிர்கள் தமது தாக்கத்தினால் இயக்கங்களை நிகழ்த்துகின்றன. வேறுபட்ட இருவேறு காந்தப் புலத்தில் ஒரே அளவுள்ள கதிர் வேறுபட்ட இயக்கங்களைக் கொடுக்கும்.



அது போலவே, அண்ட வெளிக் கதிர் வீச்சு எல்லோருக்கும் பொதுவாக இருந்தாலும் அவரவர் உடலில் அமைந்துள்ள மாறுபட்ட காந்தப் புல வேறுபாட்டால் வெவ்வேறான சிந்தனை, செயல், விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இதனை ஜாதக-குறிப்பின் அடிப்படையில் கணித்துக் கூறுவதே சோதிட சாஸ்திரமாகும்.



கிரகங்கள் எல்லாம் தத்தமக்கென வித்தியாசமான வேகத்தினைக் கொண்டுள்ளதால் சூரியனை சுற்றிவர வித்தியாசமான காலத்தை எடுக்கின்றன. இராசி மண்டல வலயத்தில் உள்ள 27 நட்சத்திரங்களையும் ஒரு முறை சுற்றிவர சந்திரன் சுமார் 29.53 நாட்களும்; புதன்-88 நாட்களும்; சுக்கிரன்-225 நாட்களும்; சூரியன்-365.25 நாட்களும் (அதாவது பூமி சூரியனை சுற்ற எடுக்கும் காலம்); செவ்வாய்-687 நாட்களும்; வியாழன் -11.86 வருடங்களும்; ராகு-18 வருடங்களும்; கேது-18 வருடங்களும்; சனி-29.46 வருடங்களும் எடுக்கின்றன.



"அசுவினி" நட்சத்திரம் இராசிச் சக்கரத்தின் முதல் இராசியான "மேடம்"திலும்,  "ரேவதி" நட்சத்திரம்  கடைசி இராசி யான "மீனம்" திலும் அமைகின்றன. இதன்படி, ஒரு கோளின் நில-நிரைக்கோடு (longitude) கொண்டு அக்கோள் எந்த விண்மீன் குழுவில் அமைந்துள்ளது என்பதை கண்டறியலாம்.



இராசிகள் ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதியாக இருக்கின்றது. சூரியனும், சந்திரனும் ஒவ்வொரு ராசிக்கு அதிபதி (உரிமைக்காரன்) ஆவார்கள். ஆனால் மற்றைய கிரகங்கள் 5ம் இரண்டு இரண்டு ராசிகளுக்கு அதிபதியாகின்றனர். ராகு கேதுக்களுக்கு சொந்த ராசிகள் இல்லை. அவர்கள் எந்தவீட்டில் நிற்கிறார்களோ அந்த ராசிக்கு அவர்கள் அதிபதியாகின்றனர்.



சூரியன் விண்மீன்:       சிங்க-ராசிக்கும் அதிபதியாவார்.
சதிரன் கிரகம்:             கடகம்-ராசிக்கும் அதிபதியாவார்.
செவ்வாய் கிரகம்:         மேஷம்-ராசிக்கும், விருட்சிகம்-ராசிக்கும் அதிபதியாவார்.
புதன் கிரகம்:               மிதுனம்-ராசிக்கும், கன்னி-ராசிக்கும் அதிபதியாவார்.
குரு கிரகம்:                மீனம்-ராசிக்கும்,  தனு-ராசிக்கும் அதிபதியாவார்.
சுக்கிரன் கிரகம்:           இடபம்-ரசிக்கும், துலாம்-ராசிக்கும் அதிபதியாவார்.
சனி கிரகம்:                 மகரம்-ராசிக்கும், கும்பம்-ராசிக்கும் அதிபதியாவார்.




ஒருவருடைய ஜாதக-குறிப்பில்; அவர் பிறந்த நேரத்தில் எந்த எந்த கிரகங்கள் எந்த எந்த ராசிகளில் நின்றனவோ அதனை குறித்திருப்பார்கள். அவைகள் தங்கள் சொந்த ராசிகளில் இருந்து விலகி வேறு ராசிகளிலும், சில சமயங்களில் சொந்த ராசிகளிலும் இருக்கலாம். அவை சிசு பிறந்த நேரத்தின் கோசரநிலையாகும்.



ஆஃவே; நாம் ஒருவருடைய ஜாதக குறிப்பைப் பார்த்து பலன் அறிய முற்படும் பொழுது கிரகங்களின் மூன்று நிலைகள் கவனிக்கப்படுகின்றன்.
முதலாவதாக அவற்றின் சொந்த (உரிய) இருப்பிடம்;
இரண்டாவதாக சிசு பிறக்கும் போது கிரகங்களின் (கோசர நிலை) இருப்பிடம் (ஜாதக குறிப்பில் உள்ளவை);
மூன்றாவதாக தற்போதைய இருப்பிடம் (தற்போதைய கோசர-நிலை) என்பனவாம்.




ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படைக் கருவியாக விளங்குவது பஞ்சாங்கம். பஞ்சாங்கத்தில் கிரகங்கள், நட்சத்திரங்களின் அவ்வப்போதய நிலைகள், அசைவுகள், தங்கும் கால அளவுகள் யாவும் துல்லியமாக குறிக்கப்பட்டிருக்கும்.



பஞ்சாங்க  விளக்கம்:
பஞ்ச அங்கங்களைப் (ஐந்து-அங்கங்களைப்) பற்றிய விபரங்களை கூறுவது  பங்சாங்கம். ஐந்து அங்கங்களாவன: 
1. திதி,  2.வாரம்,  3.நக்ஷ்த்திரம்,  4.யோகம்,  5.கரணம் என்பனவாம்.




தற்பொழுது இரு வகையான பஞ்சாங்கங்கள் பாவனையில் உள்ளன.  ஒன்று "திருகணித பஞ்சாங்கம்", மற்றையது "வாக்கிய பஞ்சாங்கம்".



கி.மு. 1200 முதல் கி.மு.400 முடிய உள்ள காலத்தில் 18 விதமான சித்தாந்தங்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த 18 வகையான சித்தாந்தங்களை ஆதாரமாக வைத்தே பஞ்சாங்கங்கள் கணிக்கப்பெற்றன.



கிரகங்களின் வேகம், ராசிகளில் தங்கும் காலம் இவற்றை எல்லாம் கணிப்பதற்கு ஒரு முறையைக் கண்டு பிடித்தனர். இது வாக்கிய முறை எனப்பட்டது. இன்றும் இந்த முறையில் பஞ்சாங்கங்கள் வெளி வருகின்றன. இந்தப் பஞ்சாங்கங்கள் "வாக்கிய பஞ்சங்கம்" எனப்படும்.



காலப்போக்கில் வாக்கியப் பஞ்சாங்கங்கக் கணித முறையில் சில பிழைகளைக் கண்டறிந்தனர். அதனால் அவைகளை திருத்திப் புதிய முறையில் கணித்துக் கொண்டனர். திருத்திய திருகணித முறையை ஒட்டிய பஞ்சாங்கங்கள்  "திருகணித பஞ்சாங்கம்" எனப்படும்.



இந்த 20-ம் நூற்றாண்டில் கிரகங்களை ஆராச்சி செய்து அறிவதற்கு பல தொழில் நுட்ப உபகரணங்கள் உள்ளன. அவைகள் மூலம் நுட்பமாக கிரகங்களின் வேகம், அவற்றின் நிலைகளைக் கண்டறியக் கூடியதாக உள்ளது. தற்போதுள்ள வான வியல் முறையும், திருகணித-பஞ்சாங்க முறையும் எந்த வித மாறுதலும் இல்லாமல் ஒரே மாதிரியாக இருக்கிறது. அதனால் திருகணித முறை தான் சரியான முறை என முடிவுக்கு வந்துள்ளார்கள். ஆனாலும் சிலர் வாக்கிய முறைதான் பழமையானது என்று பாவிப்பாரும் உளர்.



திதி: அமாவாசை தினத்தில் (அமாந்தத்தில்) சந்திரன்; சூரியனோடும், பூமியோடும் தக்ஷ்ணோத்தர ரேகையில் சமமாக ("0" டிகிரியில்) நின்ற பின் பூமியைச் கிழக்கு நோக்கி சுற்றும் போது சூரியனை பிரிகின்றது. இவ்வாறு சூரியனப் பிரியும் ஒவ்வொரு 12 பாகைகள் கொண்ட 30 பிரிவுகளும் திதிகள் எனப்படும்.



விளக்கமாக கூறுவதாயின்; சூரியன்  - சந்திரன் - பூமி ஆகியவற்றிக் இடையில் ஏற்படும் கோண அளவைக் குறிப்பனவாகும். அவை பூர்வபக்க பிரதமை முதல் அமாவாசை வரையான 30 திதிகளாகும்.  அமாவாசையில் இருந்து பூரணை வரையான (பூர்வ பக்க பிரதமை முதல் பூரணை வரைன  காலத்தில் வரும்) 15 திதிகளும்  சுக்கில பட்சத் திதிகள் எனவும்; தேய் பிறை காலத்தில் அபரபக்க பிரதமை தொடக்கம் அமாவாசை வரை வரும் 15 திதிகளும் கிருஷ்ண பட்சத் திதிகள் எனவும் அழைக்கப்படும்




சந்திரன் தினமும் சுமார் 12 டிகிரி சூரியனின் பார்வையில் இருந்து விலகிச் சென்று கொண்டிருப்பார். 15 ஆவது தினமான பௌர்ணமி அன்று சூரியனில் இருந்து 180 டிகிரி தூரத்தில் இருப்பார். அப்போது சூரியனின் முழுப்பார்வையும் சந்திரனின் மேல் விழுகின்றது. அதாவது இராசிச் சக்கரத்தில் சூரியனில் இருந்து 7-வது ராசியில் சஞ்சரிப்பார்.



அம்மாவாசைக்கு மறுநாள் அன்று சந்திரன் 12 டிகிரி விலகி இருப்பார்.அன்று முதல் திதியாகிய "பிரதமையும்". மறு நாள் இன்னும் ஒரு 12டிகிரி விலகியிருப்பார். அன்று இரண்டாவது திதியாகிய துதியையும், இப்படியே தொடர்ந்து 3. திருதியை, 4. சதுர்த்தி, 5. பஞ்சமி, 6. சஷ்டி, 7. சப்தமி, 8. அஷ்டமி, 9. நவமி, 10. தசமி, 11. ஏகாதசி, 12. துவாதசி. 13. திரயோதசி, 14. சதுர்தசியும், 15-ம் நாள் பெர்ணமித் திதியும் ஏற்படுகின்றது. சந்திரன் அம்மாவாசையில் இருந்து சிறிது, சிறிதாக வளர்வதால் இவைகள் எல்லாம் வளர் பிறைத் திதிகள் என்று அழைக்கப்பெறுகின்றன. இந்த 15 நாட்களையும் சுக்கிலபக்ஷ் திதிகள் என்பார்கள். 



அதே போல் பௌர்ணமி திதியில் இருந்து சந்திரன் தினமும் சிறிது, சிறிதாக தேய்கிறார். அவற்றிற்கும் முறையே அந்த 15 திதிகளின் பெயர்களே குறிப்பிடப்படும். ஆனால் தேய்பிறையாக உள்ளதால் (தேய்-பிறைத் திதிகள்) கிருஷ்ணபக்ஷ் திதிகள் எனக் கூறுவார்கள். .



புத்தி சுவாதீன முற்றோர்; அமாவாசை, பூரணை, அட்டமி போன்ற திதிகளில் (கனத்த நாட்களில்) மிகவும் கடுமையாக (வேகமாக) உள்ளவர்களாக காணப்படுவது கிரகங்கள் புவியில் உள்ள உயிகள் மீது தாக்கத்தினை உண்டு பண்ணுகின்றன என்பதற்கு மற்றுமோர் உதாரணமாகும்.



வாரம்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிழமைகள் வாரம் எனப்படும். இவை கிரகங்களின் பெயர்களில் அமைந்துள்ளமை கவனிக்கத்தக்கது. (ராகு, கேது கிரகங்களிற்கு சொந்த கிழமையும் இல்லை, சொந்த வீடும் இல்லை).




நட்ஷத்திரம்:
சந்திரன் இராசி மண்டல வலயத்தை சுற்றி வரும் போது  ஒரு குறிப்பிட்ட நேரத்தில் எந்தப் பிரிவில் எந்த நட்சத்திரத்தின் மேல் நகர்கின்றதோ அப் பிரிவுக்குரிய நட்சத்திரம் அந்த நேரத்திற்குரிய நட்சத்திரமாக கொள்ளப்படுகின்றது.




கரணம்:
கரணம் என்பது திதியில் பாதியாகும். அதாவது 6-டிகிரி கொண்டது ஒரு கரணம் ஆகும். கரணங்கள் மொத்தம் 11-ஆகும். அவையாவன:1. பவ,  2. பாலவ,  3. கெலவ,  4. தைதூலை,  5. கரசை,  6. வணிசை,  7. பத்தரை,  8. சகுனி,  9. சதுஷ்பாதம்,   10.  நாகவம்,  11. கிம்ஸ்துக்னம்.




இன்றைக்கு என்ன திதி என்று பஞ்சாங்கத்தில் கொடுத்து இருப்பார்கள். அதை எப்படிக் கணக்கிடுவது, அதன் உபயோகம் என்ன என்பது பற்றியும் அறிய வேண்டிய காலம் வரும் போது எழுதுகிறோம்.



யோகம்:
இரு வகையான யோகங்கள் பஞ்சாங்கத்தில் குறிக்கப்படுகின்றன. முதலாவது சூரியனும், சந்திரனும் சம்பந்தப்பட்டது. அதாவது வானமண்டலதில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் இருந்து சூரியனுக்கும், சந்திரனுக்கும் உள்ள மொத்த தூரம் ஆகும். இன்னும் சற்று விளக்கமாகக் கூறப்போனால் சூரியன், சந்திரனின் ஸ்புடங்களையும் கூட்டினால் வருவதே இந்த யோகம் ஆகும். இந்த யோகங்கள் மொத்தம் 27-ஆகும். இதனை " நாம யோகம்" என்பார்கள். அவையாவன:




1.விஷ்கம்பம்,   2.ப்ரீதி,   3.ஆயுஷ்மான்,  4.சௌபாக்யம்,   5.சோபனம்,  6.அதிகண்டம்,  7. சுகர்மம்,   8. திருதி, 9.சூலம்,  10.கண்டம்,  11.விருதி, 12.துருவம், 13. வியாகாதம்,  4. ஹர்ஷணம், 15. வஜ்ரம், 16. சித்தி, 17.வியதிபாதம், 18. வரீயான்,  19.பரீகம்,  20. சிவம், 21. சித்தம்,  22. சாத்தீயம், 23. சுபம்,  24.சுப்ரம், 25.பிராம்யம்,  26.ஐந்திரம்,  27. வைதிருதி.



மற்றைய யோகம் சுபாசுப யோகம்; சித்த யோகமும் அமிர்த யோகமும் சுபகருமங்களுக்கு உரிய சுப யோகங்களாகும். மரண யோகம், நாச யோகம், உற்பாத யோகம், பிரபலா நிஷ்ட யோகம், திரிபுஷ்கர யோகம் எனபன சுப கருமங்களுக்கு விலக்கப்படும் அசுப யோகங்களாகும்.



நக்ஷ்த்திராத்தையும், கிழமையையும் வைத்தும் யோகம் கணக்கிடப்படுகிறது. இன்ன இன்ன கிழமைகளில் இந்த இந்த நக்ஷ்த்திரங்கள் வந்தால் இன்ன யோகம் என வகுத்து அதன்படி கணக்கிடப்படுகிறது.



உதாரணமாக திங்கள் கிழமை அன்று அஸ்வனி, பரணி, திருவாதிரை, பூசம், ஆயில்யம் பூரம், உத்திரம், ஹஸ்தம், அனுஷம், கேட்டை, மூலம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 15 நக்ஷ்த்திரங்கள் வருமேயாகில் அன்று சித்தயோகம் வரும்.



ரோகிணி மிருகசீரிஷம், புனர்பூசம், ஸ்வாதி, திருவோணம் ஆகிய 5 நக்ஷ்த்திரங்கள் வந்தால் அமிர்த யோகம் வரும்.



சோதிட காலவாய்பாடு
60 தற்பரை          =  1 வினாடி




60 வினாடி           =  1  நாளிகை
60 நாளிகை         =  1  நாள்
365 நாள் + 15 நாளிகை + 31 விநாடி + 15 தற்பரை = 1 சௌர வருஷம்




60 வினாடி           =  1 நாழிகை
60 நாழிகை          =  1 நாள்
2 1/2 நாழிகை     =  1 மணி
2 1/2 வினாடி         =  1 நிமிஷம்




ஒரு நாள்        :  60 நாழிகை (24 மணி)
ஒரு நாழிகை        :  60 விநாழிகை
ஒரு விநாழிகை    :  60 லிப்தம்
ஒரு லிப்தம்        :  60 விலிப்தம்
ஒரு விலிப்தம்    :  60 பரா
ஒரு பரா        :  60 தத்பரா   




ஜோதிட விளக்கம்:சௌர வருஷம்:  சூரியன் மேடராசியின் ஆரம்ப நட்சத்திரத்திரமான அஸ்வினியில் பிரவேசிக்கும் காலம் முதல் மீனராசியின் கடைசி நட்சத்திரமான ரேவதியை விட்டு நீங்கும் காலத்தைக் குறிக்கும் (Sidereal revolution of Earth round the Sun). இக்காலப்பகுதி; சராசரியாக 365 நாள், 15 நாடி, 23 வினாடிகளைக் கொண்டதாகும்.



சாயன வருஷம்: சூரியன் மேஷாயன விஷூவத்தில் பிரவேசித்து திரும்ப மேஷாயன விஷூவத்தை வந்தடையும் காலத்தைக் குறிப்பதாகும் Tropical revolution of Earth round the Sun. இக் காலப்பகுதி; 365 நாள், 14 நாடி, 32 வினாடிகளைக் கொண்டதாகும்.



சாந்திர வருஷம்: சௌரவருஷப்பிறபிற்கு முன் அதனை அடுத்து ஆரம்பிக்கும் பூர்வபக்கப் பிரதமை முதல் அடுத்த சௌர வருஷப்பிறபுக்கு முன் நிகழும் அமாவாசை முடியவுள்ள காலத்தைக் குறிப்பது. இக் காலப் பகுதி சுமார் 354 நாட்கள் கொண்டது.



சௌர மாதங்கள்: மேடம் முதல் மீனம் ஈறாகவுள்ள பன்னிரண்டு ராசிகளிலும் சூரியன் சஞ்சரிக்கும் சித்திரை முதல் பங்குனி வரையான 12 காலப் பிரிவுகளாகும். பகல் மானத்துள் சங்கிராந்தி நிகழ்ந்தால் அன்றும்; இரவு நிகழுமாயின் மறுநாளும் மாதப்பிறப்பாக கொள்ளப்படும்.



சாந்திர மாதங்கள்: பூர்வப்க்க பிரதமை தொடக்கம் அமாவாசைமுடியும்வரை உள்ள சைத்திரம் முதல் பாற்குண்ம் வரையான 12 காலப் பிரிவுகளாகும். மூன்று சௌர வருஷத்தில் 37 சாந்திர மாதங்கள் நிகழும். அதனால் சௌரமானத்துடன் சாந்திரமானம்  இணங்கிச் செல்லும் பொருட்டு ஓர் சௌரமாதத்தில் இரண்டு அமாவாசை நிகழ இடையில் வரும் சாந்திரமாதம் "அதிகமாதம்" என் நீக்கப்படும்.



தமிழ் திகதி: சூரிய உதயம் முதல் மறுநாள் சூரிய உதயம் வரயும் உள்ள காலமாகும்.



ஆங்கிலத் திகதி: இரவு 12 மண் தொடக்கம் மறுநாள் இரவு 12 மணி வரையும் உள்ள 24 மணித்தியாலங்களைக் குறிக்கும்.



இஸ்லாமிய திகதி: சூரிய அஸ்தமனம் முதல் மறுநாள் சூரிய அஸ்தமனம் வரை உள்ள கால்ப் பகுதியாகும்.



"அவமா" : ஒரு தினத்தில் மூன்று திதிகள் சம்பந்தப்பட்டால் அன்று "அவமா" அழைக்கப்படும்.



திரிதினஸ்புருக்: ஒரு திதி மூன்று நாட்கள் சம்பந்தப்பட்டுள்ளதொ அது "திரிதினஸ்புருக்" என்று அழைக்கப்படும்.







ஜோதிட குறிப்பு:



கேந்திரம்: இலக்கினத்தில் இருந்து 1, 4, 7, 10 ம் வீடுகள்



திரிகோணம்: இலக்கினத்தில் இருந்து 5, 9 ம் வீடுகள்



வர்கோத்தமம்: ஒரு கிரகம் இராசியிலும் அம்சத்திலும் ஒரே இராசியில் காணப்படுதல் வர்கோத்தமம் எனப்படும்.



வக்கிரம்: ஒரு கிரகம் பின் நோக்கிச் செல்வது வக்கிரம் என அளைக்கப்படும்.



சைடீரியல் ரைம்: குறிப்பிட்ட நட்சத்திரத்தைக் கொண்டு காலத்தை கணக்கிடுவது. மேஷம் "0" பாகைக்கு  பூமி சரியாக 360 டிகிரி சுற்ற எடுக்கும் கால அளவு சைடீரியல் ரைம் என அளைக்கப்படும்.



கிறீன்விச் நேரம்: கிறீவிச்சை மையமாகக் கொண்டு கணிக்கப்படுவது.time zone (greenwich east or west )



இந்தியன் ஸ்டாண்டற் மணி: கிறீன்வீச்சுக்கு 82-30 டிக்கிரிக்கு 5 மணி 30 நிமிட வித்தியாசத்தில் உள்ளது.



சுதேச மணி: தீர்க்க ரேகை 82-30 டிகிரிக்குக் கிழகு அல்லது மேந்கில் இருக்கும் ஊர்களின் மணியாகும். இந்தியா முழுவதும் ஸ்டாண்டட் மணிதான் உபயோகம். ஒரு டிகிரிக்கு 4 நிமிடம் கழித்தோ கூட்டியோ வரும் மணி சுதேச மணியாகும்.



இலக்கினம்: குறிப்பிட்ட இடத்தில் குறிப்பிட்ட தினத்தில் சூரிய உதய காலம்



மறைவிடம்: 3, 6, 12



பாவாதிபன்: ஒரு ராசிக்கு, அல்லது பாவத்திற்கு அல்லது வீட்டிற்கு அதிபதி



சாயண முறை: மேற்கத்திய நாடுகளில் அதிகமாக இந்தமுறையை அநுசரித்து ஜாதகம் கணிக்கப்படுகின்றது. மேஷம் பூஜ்யம் டிகிரிக்குச் சூரியனின் காலத்தை அனுசரித்தது.



நிராயணம்: மேஷத்தில் அஸ்வினி நட்சத்திரத்தைக் கொண்டு பின்பற்றுவது.



அயனாம்சம்: சாயன - நிராயண வித்தியாசம்



கடக ரேகை: (Caner) பூமத்திய ரேகைக்கு வடக்கே உள்ளது.உஷ்ண மண்டலத்தின் வடபகுதி ரேகை.
மகர ரேகை: (Capricorn)  பூமத்திய ரேகைக்கு தெற்கே உள்ளது.




கிரக பார்வை: ஒவ்வொரு கிரகமும் தன் ஸ்தானத்தில் இருந்து 7ம் இடத்தைப் பார்க்கும்.அத்துடன்
விசேஷ பார்வையாக:
குரு:            5 ம், 9 ம் இடத்தையும்;
செவ்வாய்: 4 ம், 8 ம் இடத்தையும்;
சனி: 3 ம், 10 ம் இடத்தையும்; பார்க்கும்.

Thursday, 5 February 2015

ஆகாய விமானமும், பறவைகளும் - சில விளக்கங்கள்



பூமி தன்னைத்தானே சுற்றுவதை நாம் அறிவோம். தன்னைத்தானே சுற்றுவதுடன் சூரியனையும் இந்த பூமி ஒரு வருடத்தில் வட்டமடித்து முடிக்கிறது. சூரியனைச் சுற்றுவதற்க்காக அது செல்கின்ற வேகம் வினாடிக்கு 250 கிலோ மீட்டர் தூரம்.

வினாடிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் பூமி வேகமாக நகரும் போது பூமி நகர்கின்ற திசையில் இருக்கின்ற அந்த பறவைகள் மீது மோத வேண்டும்.

பூமியின் ஈர்ப்பு சக்தி ஒரு குறிப்பிட்ட தொலைவுவரை இருப்பதால் அந்த பறவையை பூமி சேர்த்து இழுத்துக் கொண்டே போகிறது. முன் பக்கம் இருக்கும் பறவையை தள்ளிக் கொண்டும் பின் பக்கம் இருக்கின்ற பறவையை இழுத்துக் கொண்டும் பூமி நகர்கிறது. முன் பக்கம் பறக்கின்ற பறவையைத் தள்ளாமல் இந்த பூமி வேகமாக சென்றால் எந்தப் பறவையும் பறக்க முடியாது. பூமியில் மோதி செத்து விடும்.

இதனாலேயே 'வசப்படுத்தப்பட்ட' என்ற வார்த்தையை குர்ஆன் பயன்படுத்துகிறது.

இதே வசனத்தை தற்போது பயன்பாட்டில் இருக்கும் விமானங்களோடு பொறுத்திப் பார்ப்போம்.

இரண்டு விமானங்கள் முறையே ஒன்று டில்லியில் இருந்து ஹாங்காக்கிற்கும் மற்றொன்று ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கும் ஒரே வேகத்தில் ஒரே நேரத்தில் பறந்தால் அவை ஒரே நேரத்தில் தரை இறங்குமா? இக் கேள்விக்கு 'ஆம்' என்றே அனைவரும் பதில் சொல்வார்கள். அதைத் தொடர்ந்து 'எவ்வாறு' என்று மற்றொரு கேள்வியை எழுப்பினால் 'அவ்விரு விமானங்களும் பறக்கும் தூரமும் பறக்கும் வேகமும் ஒன்றாக இருப்பதால் அவை இரண்டும் ஒரே நேரத்திலேயே தரை இறங்கும்' என்று பதில் கூறப்படும். இந்த பதில் முறையான பதிலாகாது. குறை உடைய பதிலாகும்.

பூமியின் மீது மேற் கொள்ளப்படும் பயணமாக இருந்திருந்தால் இந்தப் பதில் போதுமானதே. ஏனென்றால் பூமி சுழன்ற போதிலும் பூமியின் மீது செய்யப்படும் பயணங்களை அது பாதிப்பதில்லை. ஆயினும் விமானங்கள் தரையை விட்டு கிளம்பியவுடன் பூமியுடனான நேரடித் தொடர்பு துண்டிக்கப்பட்டு விடுகிறது. எனவே பூமியின் சுழற்ச்சி விமானப் பயணத்தை பாதிக்க வேண்டும்.

உதாரணமாக டில்லி விமானம் ஹாங்காக்கை நோக்கி மணிக்கு 650 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கிறது எனக் கொள்வோம். ஆனால் அதே நேரத்தில் பூமியின் சுழற்ச்சி விமானம் செல்லும் அதே திசையில் டில்லியை சுழற்றுகிறது. இப்போது விமானம் பறக்கும் அதே வேகத்தில் பூமியும் சுழலுவதாக இருந்தால் டில்லி விமானம் எப்போதுமே டில்லியின் வான் பரப்பில் எங்கும் நகராமல் அந்தரத்தில் நின்றிருக்கும். இதிலிருந்து விண்ணில் பறக்கும் ஒருவர் கிழக்குத் திசையில் பறப்பதாக இருந்தால் பூமி சுழலும் வேகத்தை விட அதிக வேகத்தில் பறக்க வேண்டும் என்றும் அப்போது மட்டுமே அவர் போக வேண்டிய இலக்கை எளிதாக அடைய முடியும் என்பதையும் அறியலாம்.

ஆனால் உண்மை என்னவெனில் பூமியின் சுழற்சி வேகம் மணிக்கு 1675 கிலோ மீட்டர் என்பதாகும். இந்த நிலையில் டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறப்பதாக இருந்தால் ஹாங்காங்கை நோக்கி எவ்வளவு தூரம் முன்னேறி இருக்க முடியும்? கீழ்க் கண்டவாறு இதை நாம் கணக்கிடலாம்.

விமானப் பயணங்களின் விபரீத விந்தைகள்:

பூமியின் சுழற்சி வேகம் 1675 கிலோ மீட்டர்கள். ஆயினும் விமானத்தை முந்தும் போது அதனுடைய சார்பியல் (relative speed) வேகம் (1675-650) 1025 கிலோமீட்டர்-மணி என்பதாகும். இதிலிருந்து டில்லி விமானம் ஒரு மணி நேரம் பறந்த போதும் அந்த விமானத்தால் டில்லியிருந்து முன்னேறிச் செல்ல முடியாமல் டில்லியிருந்து 1025 கிலோ மீட்டர் பின்வாங்கிச் செல்ல நேரிட்டது என்பதைப் பார்த்தோம். இதை மற்றொரு விதத்தில் கூறுவதாக இருந்தால் டில்லி விமானம் புறப்படுவதற்கு முன்னர் ஹாங்காங்கிலிருந்து எவ்வளவு தூரத்தில் இருந்ததோ அதைவிட 1025 கிலோ மீட்டர் அதிக தூரத்துக்கு விமானம் தள்ளப்பட்டு விட்டது என்பதாகும்.

இப்போது ஹாங்காங் விமானத்தின் நிலை என்ன என்பதைப் பார்ப்போம். இந்த விமானம் ஹாங்காங்கிலிருந்து டில்லி நோக்கிப் பறக்கிறது. வேறு விதத்தில் கூறினால் பூமி சுழலும் திசைக்கு எதிர் திசையில் ஹாங்காங் விமானம் பறக்கிறது. எனவே இந்த விமானம் டில்லியை நோக்கி ஒரு மணி நேரத்தில் 650 கிலோ மீட்டர் முன்னேறிய போது டில்லியானது அதே நேரத்திற்குள் 1675 கிலோ மீட்டர் தூரம் அந்த விமானத்தை நோக்கி முன்னேறுகிறது. எனவே இந்த விமானத்தின் சார்பியல் வேகம் இப்போது (650 +1675) மணிக்கு 2325 கிலோ மீட்டர்களாகும். பூகோளத்தின் சுழற்ச்சியால் இப்படிப்பட்ட விபரீத விளைவுகள் உள்ளபடியே ஏற்படுவதாக இருந்தால் ஹாங்காங் விமானம் 100 நிமிடத்தில் டில்லியை அடைய நேர்ந்திருக்கும்.

அதே நேரத்திலேயே டில்லி விமானமும் தரை இறங்குவதாக இருந்திருந்தால் அந்த விமானம் ஹாங்காக்கில் தரை இறங்கி இறக்க முடியாது. அந்த விமானம் தரை இறங்கிய இடத்திலிருந்து கிட்டத்தட்ட 5500 கிலோ மீட்டர் தொலைவிலேயே ஹாங்காங் இருந்திருக்கும். இப்படிப்பட்ட விபரீத விந்தை நடைபெறுமாயின் டில்லி விமானம் 39 மணி நேரம் கழிந்த பிறகே ஹாங்காங்கை அடைய முடியும். எவ்வளவு கேலிக்குரியதாக இருக்கும் இந்த முடிவு? ஆனால் இப்படிப்பட்ட அசம்பாவிதங்கள் நமது விமான பயணத்திற்கு ஏற்படுகிறதா? இல்லவே இல்லை என்பது அனைவரும் அறிந்ததே! அப்படியானால் பூமி சுழலவில்லை என்பது இதன் பொருளாகுமா? அதுவும் இல்லை.

பூமி எந்தத் திசையில் சூரியனைச் சுற்றி வருவதற்காக நகர்ந்து செல்கிறதோ அந்த திசையில் பறக்கும் விமானங்கள் பூமியின் மீது மோதி நொறுங்கிப் போக வேண்டும். இதைப் போல் பூமி எந்தத் திசையில் நகர்கிறதோ அந்த திசையில் பறக்கும் விமானங்கள் ஒரு சில வினாடிகள் பூமியிலிருந்து தவறிப் போக வேண்டும். பூகோளத்தின் சூரியவலம் இப்படிப்பட்ட பிரச்னைகளைத் தோற்றுவிக்குமாயின் இந்த பூமியில் நமக்கு விமானப் பயணம் சாத்தியமாகுமா? ஆனால் நாம் இவ்விதப் பிரச்னைகள் ஏதுமின்றி விமானப் பயணங்களை சுலமாக நடததிக் கொண்டிருக்கிறோம்.

இதே போல் இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் பூமியின் சுழற்ச்சியாலும் அதன் நகர்வாலும் அதன் மீது பறக்கும் பறவைகளுக்கு பாதிப்புகள் எதுவும் ஏற்படாமல் எவ்வாறு தடுக்கப்படுகிறது என்பதை நன்கு அறிந்துள்ளோம். பூமியின் ஈர்ப்பு விசையானது காற்று மண்டலத்திலும் பரவி இருப்பதால் பூமி காற்று மண்டலத்தையும் தன்னுடன் இணைத்தவாறே சுழல்கிறது. மேலும் சூரியனையும் சுற்றி வருகிறது. எனவே காற்று மண்டலத்தின் மிக பலம் வாய்ந்த கீழடுக்களில் பறக்கும் பறவைகளானாலும் விமானங்களானாலும் அவைகளின் நகர்வு (பறத்தல்) பூமியின் மீது ஓடும் வாகனங்களைப் போன்று பூமியுடன் பிணைக்கப்பட்டதைப் போன்று நடைபெறுகின்றன.

பூமியின் ஈர்ப்பாற்றல் அதன் மீது பறக்கும் பொருட்களை நேரிடையாக ஈர்ப்பதுடன் அவை பறக்கும் இடத்தையும் காற்று மண்டலத்தையும் பூமியுடன் பிணைத்திருக்கும் விதத்தில் அவைகள் வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் பூமியின் மீது பறப்பவைகள் பூமியின் சுழற்சி மற்றும் அதன் நகர்வு போன்றவற்றின் பாதிப்புகளிலிருந்து தடுக்கப்பட்டுள்ளது. இந்த வடிவமைப்பை இறைவன் தாமே செய்த காரணத்தால் இப்பறவைகளை பூமியின் சுழற்சியாலும் நகர்வாலும் ஏற்பட இருந்த இடையூறுகளில் இருந்து இறைவன் தாமே தடுத்துக் கொண்டிருப்பதாகக் கூறுவது மிகப் பொருத்தமான அதே நேரத்தில் மிக சீரியஸான நினைவூட்டல் என்பதும் இந்த வசனங்களிலிருந்து நன்கு விளங்க முடிகிறது.

'திருக்குர்ஆனின் அறிவியல் சான்றுகள்'

வானியலைப் பற்றி இன்னும் மேலதிக விபரங்கள் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் தெரிவித்தால் பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.