Wednesday 23 October 2013

பூமத்திய ரேகை



EQUATOR CROSSING, கப்பல் இந்த எல்லையை கடக்கும்போது கிரேக்கர்கள் உருவாக்கிய சடங்கு என்கின்றனர்,முறையாக 4பெரியவர்களை அதாவது ராஜா,அதன் பின்னர் கீழ் உள்ளவர்கள்,இப்படி ஒரு நிலையை உருவகித்து புதிதாக கப்பலுக்கு வரும் இளைஞனின் தலை முடியை ஒவ்வொருவராக கொஞ்சம் வெட்டி அதனுள் அவர்களின் நாணயம் ஒன்றை வைத்து கடலுக்குள் வீசி காணிக்கையாக்குவார்கள்,அதன்பின்னர் அந்த இளைஞனை மற்றவர்கள் வசம் ஒப்படைத்து மொத்தத்தில் பலிகடாவாக்குவதுதான் இந்த சடங்கு,இப்படி செய்வதால் கப்பலுக்கு எந்த அசம்பாவீதம் நடக்காது என்று நம்பபடுகிறது,ஒருசில கப்பல் காப்டன் இதை பெரிதுபடுத்த மாட்டார்கள், ஆனால் பலர் ஊறிய சம்பிரதாயங்களில் இதை கண்டிப்பாக சடங்காகவும்,அதை ஒரு சாக்காக வைத்து கெட் டு கெதர் பண்ணவும் செய்வார்கள்.  
பெயிண்ட் முதல் கொண்டு,ஆயில்,முட்டை ஜட்டியுடன்,பெண்களை போல உள்ளாடைகள் அணியவைத்து,கிட்டதட்ட அழவைத்துவிடுவார்கள்,தலைமுடியை வேறு கன்னாபின்னானு வெட்டி,கப்பலை முழுதும் சுற்றி இழுத்துவந்து இப்படி கொடுமைகள் நடக்கும்,இந்த சடங்குக்கு பின்னர் அந்த புதியவருக்கு சான்றிதழ் வழங்கப்படும்,அப்படி சான்றிதழ் தவறவிட்டு அடுத்த கப்பலில் வந்து மறுபடியும் மாட்டிக்கொள்பவரும் உண்டு,பழைய கொடுமைகள் கொஞ்சம் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது  
       
இதுபோன்ற EQUATOR CROSSING பழக்கங்களை ஒழிக்கணும்,கிட்டதட்ட ஒருவிதமான ராகிங்கொடுமைதான்,எத்தனை புதிய பசங்க இதை சகஜமாக எடுத்துக்கொள்வார்கள்?தானும் அதேபோல நடத்தப்பட்டேன்,எனக்கு பின் வரும் ஜூனியருக்கும் என்னை விட அதிகமாக நடத்தப்படனும் என்று வரிந்து கட்டிக்கொண்டு இறங்குவது,இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி ஓட்டுவார்களோ தெரியாது?
நாத்திகனும் ஆத்திகனும் சண்டையிட்டு யார் ஜெயிப்பார்கள் என்று போட்டி நடத்தி ஜெயிக்கும் விஷயமில்லை,மதம் வேண்டாத,வெத்து சம்பிரதாயங்களை நம்பாத மனிதன் மற்றவர்களின் வீண் நம்பிக்கைக்கு பலியாக்கபடுகிறான்,அவனின் உணர்வுகளுக்கு மரியாதை இல்லை,அவன் வேண்டாம் என்று சொன்னாலும் பலியாட்டைபோல கழுத்தை நீட்டத்தான் செய்ய வேண்டி இருக்கிறது,உங்களுக்கு இதேபோல அமியும் நேரம்  ரொம்பவும் பிகுபண்ணி கொள்ளாதீர்கள்,நான் நிறுவனத்தில் அங்கே இங்கே முறையிடுவேன் என்று குதர்க்கம் செய்ய வேண்டாம்,ஒரே நாள் கூத்து கல்யாணத்தைபோல,அன்று கொஞ்சம் வாய்மூடி கூடிய வரையில் ஜாலியாக மனதை வைத்துக்கொள்ளுங்கள்,அவர்களோடு கூட சேர்ந்து நீங்களும் அனுபவியுங்கள் லேசாக தெரியும்,அவ்வளவுதான்,நாம் ஒரு ஆளாக இந்த முறையை மாற்றிவிட முடியாது என்பதை மறக்கவும் கூடாது,இல்லை அப்படி என்னால் முடியாது என்றால் ஏதாவது சூழ்ச்சி செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்,ஆனாலும் சிலர் விடவே மாட்டார்கள்.            

No comments:

Post a Comment