கீதை இரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர், நம் ஐம்புலன்களையும் அடக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார். (கீதை 2- 62 &63).
ஒரு
ஆமை எப்படி தன் உறுப்புகளை உள்ளிழுத்து அடக்கிக் கொள்கிறதோ அது போல நாமும்
ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ளவேண்டும். ஐம்புலன்களும் ஐந்து எதிரிகள்
போன்றவர்கள். இந்த ஐந்து எதிரிகளை அடக்கவில்லை என்றால், சங்கிலித் தொடர்
போல மேலும் ஐந்து எதிரிகள் உண்டாவார்கள். ஆக மொத்தம் பத்து எதிரிகள் ஒரு
மனிதனுக்கு உண்டு.
ஐம்புலன்
நுகர்ச்சியை ஒருவன் அடக்கவிலை என்றால், அவற்றில் - அதாவது போகத்தில் அவன்
அமிழ்ந்து விடுவான். அதனால், நுகர்ச்சியில் பற்று ஏற்படும். போகத்தில்
உண்டாகும் பற்று 6- வது எதிரி.
பற்று ஏற்படுவதால், இன்னும் வேண்டும் என்று ஆசை ஏற்படும். ஆசை 7-ஆவது எதிரி.
ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால், அல்லது ஆசைக்கு இடையூறு வந்தால் கோபம் வரும். கோபம் 8-ஆவது எதிரி.
கோபம் வந்தால் அறிவு வேலை செய்யாது. என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் தவறிழைக்க ஆரம்பித்து விடுவோம். எனவே அறிவு இழப்பு 9- ஆவது எதிரி.
அறிவு
இழப்பு ஏற்பட்டால், நினைவு தடுமாறி விடும், எந்த புலன்களை நாம் அடக்க
வேண்டுமோ அந்த புலன்கள் நம்மை அடக்க ஆரம்பித்துவிடும். அதனால் எது சரி, எது
தவறு என்று ஆராய்ந்து பார்க்கும் விவேக புத்தி அழிந்து விடும். ஆகவே அழிந்துபடும் விவேகம் 10 –ஆவது எதிரி.
No comments:
Post a Comment