Saturday, 26 October 2013

HARDWARE

Wednesday, 23 October 2013

வடக்கே தலை வைத்து படுக்கக்கூடாது

      நம் நாட்டில் வடக்கில் தலை வைத்து படுத்தால் ஆகாது என்பார்கள். இதற்கான காரணத்தை தெரிந்து கொள்ளுங்கள். 
      இந்தியா பூமத்திய ரேகைக்கு மேலே உள்ள நாடாகும். இந்த அமைப்பில் உள்ள நாடுகளில் வடதிசையில் காந்த ஈர்ப்பு அதிக மிருக்கும். இதனால், இத்திசையில் தலை வைத்துப் படுக்கும் போது, தேவைக்கு அதிகமாக மூளைக்கு ரத்தம் பாயும். இதனால் மனப் போராட்டம் போன்ற பிரச்னைகள் ஏற்படும். குறிப்பாக அதிகப்படியான வேலை அல்லது கடுமையான உடற் பயிற்சி செய்து விட்டு, ஓய்வெடுக்கும் போது வடக்கில் தலை வைக்கவே கூடாது. இதனால் மனதில் பதட்டம் அதிகரிக்கும்.
      அமாவாசை, பவுர்ணமி நாட்களில் நிலாவின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும். அப்போது பூமியில் உள்ள கடல் போன்ற பெரிய சக்திகள் கூட, மேல் நோக்கி இழுக்கப்படும். எனவேதான், இந்நாட்களில் கடல் அலைகள் வழக்கத்தைவிட அதிகமாக மேலே எழும்பும். இதைப்போலவே, வடக்கில் தலை வைத்துப் படுக்கும்போது, ரத்த ஓட்டமும் மூளைக்கு அதிகமாக இழுக்கப்படும். இதனால் மூளை பாதிப்பு ஏற்படும். எனவே, வடக்கில் தலை வைத்து படுக்கக்கூடாது. 
      பூமத்திய ரேகைக்கு கீழுள்ள தென் ஆப்ரிக்கா போன்ற நாடுகளில் காந்த ஈர்ப்பு தென்திசையில் இருக்கிறது. எனவே, இந்நாடுகளில் தெற்கே தலை வைத்துப் படுக்கக்கூடாது.

பூமத்திய ரேகை



EQUATOR CROSSING, கப்பல் இந்த எல்லையை கடக்கும்போது கிரேக்கர்கள் உருவாக்கிய சடங்கு என்கின்றனர்,முறையாக 4பெரியவர்களை அதாவது ராஜா,அதன் பின்னர் கீழ் உள்ளவர்கள்,இப்படி ஒரு நிலையை உருவகித்து புதிதாக கப்பலுக்கு வரும் இளைஞனின் தலை முடியை ஒவ்வொருவராக கொஞ்சம் வெட்டி அதனுள் அவர்களின் நாணயம் ஒன்றை வைத்து கடலுக்குள் வீசி காணிக்கையாக்குவார்கள்,அதன்பின்னர் அந்த இளைஞனை மற்றவர்கள் வசம் ஒப்படைத்து மொத்தத்தில் பலிகடாவாக்குவதுதான் இந்த சடங்கு,இப்படி செய்வதால் கப்பலுக்கு எந்த அசம்பாவீதம் நடக்காது என்று நம்பபடுகிறது,ஒருசில கப்பல் காப்டன் இதை பெரிதுபடுத்த மாட்டார்கள், ஆனால் பலர் ஊறிய சம்பிரதாயங்களில் இதை கண்டிப்பாக சடங்காகவும்,அதை ஒரு சாக்காக வைத்து கெட் டு கெதர் பண்ணவும் செய்வார்கள்.  
பெயிண்ட் முதல் கொண்டு,ஆயில்,முட்டை ஜட்டியுடன்,பெண்களை போல உள்ளாடைகள் அணியவைத்து,கிட்டதட்ட அழவைத்துவிடுவார்கள்,தலைமுடியை வேறு கன்னாபின்னானு வெட்டி,கப்பலை முழுதும் சுற்றி இழுத்துவந்து இப்படி கொடுமைகள் நடக்கும்,இந்த சடங்குக்கு பின்னர் அந்த புதியவருக்கு சான்றிதழ் வழங்கப்படும்,அப்படி சான்றிதழ் தவறவிட்டு அடுத்த கப்பலில் வந்து மறுபடியும் மாட்டிக்கொள்பவரும் உண்டு,பழைய கொடுமைகள் கொஞ்சம் குறைந்துள்ளதாக சொல்லப்படுகிறது  
       
இதுபோன்ற EQUATOR CROSSING பழக்கங்களை ஒழிக்கணும்,கிட்டதட்ட ஒருவிதமான ராகிங்கொடுமைதான்,எத்தனை புதிய பசங்க இதை சகஜமாக எடுத்துக்கொள்வார்கள்?தானும் அதேபோல நடத்தப்பட்டேன்,எனக்கு பின் வரும் ஜூனியருக்கும் என்னை விட அதிகமாக நடத்தப்படனும் என்று வரிந்து கட்டிக்கொண்டு இறங்குவது,இன்னும் எத்தனை காலத்துக்கு இப்படி ஓட்டுவார்களோ தெரியாது?
நாத்திகனும் ஆத்திகனும் சண்டையிட்டு யார் ஜெயிப்பார்கள் என்று போட்டி நடத்தி ஜெயிக்கும் விஷயமில்லை,மதம் வேண்டாத,வெத்து சம்பிரதாயங்களை நம்பாத மனிதன் மற்றவர்களின் வீண் நம்பிக்கைக்கு பலியாக்கபடுகிறான்,அவனின் உணர்வுகளுக்கு மரியாதை இல்லை,அவன் வேண்டாம் என்று சொன்னாலும் பலியாட்டைபோல கழுத்தை நீட்டத்தான் செய்ய வேண்டி இருக்கிறது,உங்களுக்கு இதேபோல அமியும் நேரம்  ரொம்பவும் பிகுபண்ணி கொள்ளாதீர்கள்,நான் நிறுவனத்தில் அங்கே இங்கே முறையிடுவேன் என்று குதர்க்கம் செய்ய வேண்டாம்,ஒரே நாள் கூத்து கல்யாணத்தைபோல,அன்று கொஞ்சம் வாய்மூடி கூடிய வரையில் ஜாலியாக மனதை வைத்துக்கொள்ளுங்கள்,அவர்களோடு கூட சேர்ந்து நீங்களும் அனுபவியுங்கள் லேசாக தெரியும்,அவ்வளவுதான்,நாம் ஒரு ஆளாக இந்த முறையை மாற்றிவிட முடியாது என்பதை மறக்கவும் கூடாது,இல்லை அப்படி என்னால் முடியாது என்றால் ஏதாவது சூழ்ச்சி செய்து தப்பித்துக்கொள்ளுங்கள்,ஆனாலும் சிலர் விடவே மாட்டார்கள்.            

கீதை


கீதை இரண்டாவது அத்தியாயத்தில் கிருஷ்ணர், நம் ஐம்புலன்களையும் அடக்க வேண்டியதன் அவசியத்தைக் கூறுகிறார். (கீதை 2- 62 &63).

ஒரு ஆமை எப்படி தன் உறுப்புகளை உள்ளிழுத்து அடக்கிக் கொள்கிறதோ அது போல நாமும் ஐம்புலன்களையும் அடக்கிக் கொள்ளவேண்டும். ஐம்புலன்களும் ஐந்து எதிரிகள் போன்றவர்கள். இந்த ஐந்து எதிரிகளை அடக்கவில்லை என்றால், சங்கிலித் தொடர் போல மேலும் ஐந்து எதிரிகள் உண்டாவார்கள். ஆக மொத்தம் பத்து எதிரிகள் ஒரு மனிதனுக்கு உண்டு.  

ஐம்புலன் நுகர்ச்சியை ஒருவன் அடக்கவிலை என்றால், அவற்றில் - அதாவது போகத்தில் அவன் அமிழ்ந்து விடுவான். அதனால், நுகர்ச்சியில் பற்று ஏற்படும். போகத்தில் உண்டாகும் பற்று 6- வது எதிரி.


பற்று ஏற்படுவதால், இன்னும் வேண்டும் என்று ஆசை ஏற்படும். ஆசை 7-ஆவது எதிரி.


ஆசைப்பட்டது கிடைக்கவில்லை என்றால், அல்லது ஆசைக்கு இடையூறு வந்தால் கோபம் வரும். கோபம் 8-ஆவது எதிரி.


கோபம் வந்தால் அறிவு வேலை செய்யாது. என்ன செய்கிறோம் என்பது தெரியாமல் தவறிழைக்க ஆரம்பித்து விடுவோம். எனவே அறிவு இழப்பு 9- ஆவது எதிரி.


அறிவு இழப்பு ஏற்பட்டால், நினைவு தடுமாறி விடும், எந்த புலன்களை நாம் அடக்க வேண்டுமோ அந்த புலன்கள் நம்மை அடக்க ஆரம்பித்துவிடும். அதனால் எது சரி, எது தவறு என்று ஆராய்ந்து பார்க்கும் விவேக புத்தி அழிந்து விடும். ஆகவே அழிந்துபடும் விவேகம் 10 ஆவது எதிரி.


விவேகம் அழிந்தால் மனிதன் தன் நிலையிலிருந்து வீழ்ச்சி அடைகிறான். முன்பு அசுரன் என்றால் யார் என்று பார்த்தோமே, (பகுதி -21) பிறருக்குத் தீங்கு இழைப்பதில் விருப்பமும், கருணை இல்லாத மனமும் கூடிய அசுர சுபாவம் மனிதனுக்கு வந்து விடும். மனிதனானவன் அங்கு அசுரனாவான். அவன் மனிதனாக ஆவதும், அல்லது தேவனாக ஆவதும், இந்த 10 எதிரிகளை வெல்வதில் இருக்கிறது. அசுர குணத்தைக் கொடுக்கும் இந்தப் பத்து எதிரிகளுக்கும் எதிரி இந்திரன் ஆவான். எனவே இந்திரன் ஆதரவுடன், சுதாஸ் பத்து எதிரிகளை வெற்றி கொண்டான்

Wednesday, 16 October 2013

ஸ்வாதி

ஶ்ரீ:

"ஸ்வாதி" யைத்தான் "சோதி" என்று குறிப்பிடுகிறார்கள்.



"ஸ்வாதியில்" திருமணம் செய்து கொடுத்த பெண்
எக்காரணம் கொண்டும் புக்ககத்திலிருந்து துக்கத்துடன் திரும்பமாட்டாள் - போன்ற
பல ப்ரமாண வாக்கியங்களைக்கொண்டும்,
மற்றும் "ஸ்வாதி" யின் பல்வேறு மகத்துவங்களைக் கொண்டும்
ஸ்வாதியை தீதுறு நக்ஷத்திரங்களின் பட்டியலிலிருந்து நீக்கிவிட்டேன்.