Thursday, 27 September 2012

Blogger Custom Domain Settings

பிளாக்கரில் தங்கள் சொந்த டொமைன் பயன்படுத்துபவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். சமீபத்தில் கூகுள், பிளாக்கர் Domain Add செய்வதற்கு CNAME செட்டிங்க்ஸ் பகுதியில் ஒரு புதிய Record சேர்த்துள்ளது. இதன் காரணமாக புதியதாக டொமைன், சப்-டொமைன் போன்றவற்றை சேர்ப்பவர்களுக்கு Domain Verify -யில் பிரச்சினை என்று வரும். அதை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம். 

நீங்கள் டொமைன் அல்லது சப்-டொமைன் Add செய்யும் கீழே உள்ள பிரச்சினை வரும். 

“We have not been able to verify your authority to this domain. Error 12. Please follow the settings instructions.”

படம் : 

உங்கள் டொமைன் பெயருக்கு கீழே உள்ள "Settings Instructions" என்பதை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் "Blogger Custom domain Instructions" பக்கத்துக்கு வருவீர்கள். 

அதில் நீங்கள் Domain அல்லது Sub-domain என்பதில் ஒன்றை தெரிவு செய்யவும். [நீங்கள் எதை Add செய்கிறீர்களோ அதை]


இப்போது வரும் பக்கத்தில் CNAME Add செய்வதற்கான வழி முறை இருக்கும். பெரும்பாலும் நீங்கள் முதல்  CNAME  Add செய்து இருப்பீர்கள். (www, ghs.google.com என்பது). 

இப்போது புதியதாக இரண்டாவது ஒன்றை சேர்க்க வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள். அதையும் CNAME Record - இல் தான் Add செய்ய வேண்டும். அது கீழே படத்தில் சிவப்பு கட்டத்தில் உள்ளது [படத்தின் மீது கிளிக் செய்து பெரிதாக காணவும்]


இதே போன்று உங்களுக்கும் ஒன்று இரண்டாவது  CNAME  ஆக வரும். அது சில மாற்றங்களுடன் இருக்கும். ஒவ்வொரு டொமைன்க்கும் ஒவ்வொன்று.

இப்போது நீங்கள் டொமைன் வாங்கிய தளத்திற்கு சென்று, உங்கள் டொமைன் Settings பகுதியில் DNS Management -இல் இருக்கும் CNAME Record - இல் இந்த இரண்டாவது CNAME - ஐ சேர்க்க வேண்டும்.  இதில் Destination ஆக உள்ள மிகப் பெரிய ஒன்றில் .com க்கு பிறகு ஒரு முற்றுப் புள்ளி இருக்கும் [dot] அதை கொடுக்க வேண்டாம்.

Bigrock தளத்தில் டொமைன் வாங்கியவர்கள் கீழே படத்தில் உள்ளது சேர்க்க வேண்டும். உங்களுக்கான  CNAME  Settings ஐ என்பதை மறந்து விடாதீர்கள்.


Bigrock மூலம் Domain வாங்கியவர்கள் முதல் டொமைன் Add செய்வது பற்றிய தெளிவான பதிவை இங்கே படிக்கவும் - BigRock டொமைனை Blogger க்கு பயன்படுத்துவது எப்படி?

இதை செய்து முடித்த பின் 6-8 மணி நேரங்களுக்கு பிறகு உங்கள் டொமைன் அல்லது சப்-டொமைனை Add செய்து பாருங்கள். வேலை செய்யும். 

மீண்டும் பிரச்சினை என்றால் மீண்டும் பதிவை படிக்கவும். சரியாக செய்யாவிட்டால் மட்டுமே இது வேலை செய்யாது. 

வேறு ஏதேனும் பிரச்சினை என்றால் கீழே கேட்கவும். 

ஏற்கனவே பயன்படுத்துபவர்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. 

THANKS - Tech Hints

No comments:

Post a Comment