Saturday, 8 September 2012

வைராக்கியம்

வைராக்கியம் ஐந்து காரணங்களால் ஏற்படும்.ஒன்று-பெண்டிர் காரணமாகத் தோன்றும்.இரண்டு-நிலம்,தோட்டம்,வீடு முதலான பொருள்களூக்காக ஏற்படும்.மூன்று-வாய்ப்பேச்சு காரணமாக எழும்,நான்கு-பிறவியிலேயே தோன்றுவது ஐந்து-எப்போதோ நேர்ந்த குற்றத்திற்காக உண்டாகும்.இவற்றில் எவ்விதத்தில் வைராக்கியம் ஏற்பட்டாலும்-தவறு செய்தவன் மன்னனே ஆனாலும் அவனிடம் நம்பிக்கை வைக்கக்கூடாது.வைராக்கியம் என்னும் தீயை நன்மொழிகளாலோ,சாத்திரத்தாலோ போக்க முடியாது.அத்தீயை யாராலும் அணைக்க முடியாது.

No comments:

Post a Comment