சமையல் குறிப்பு : காஞ்சிபுரம் இட்லி
காஞ்சிபுரம் என்றாலே நம் எல்றோரோட நினைவுக்கும் வருவது "பட்டு சேலை" தான்.அதை தவிர, நிறைய புராதான கோவில்களும் நிறைந்த இடம். அந்த ஊரின் பெருமையை மேலும் பறைட்சாற்றும் வகையில் வெகு பிரிசித்தம் அந்த ஊரு இட்லி.
அதனை செய்யத்தான் கொஞ்சம் கை பக்குவமும் பொறுமையும் தேவை. இந்த இடுக்கையில், "காஞ்சிபுரம் இட்லி" செய்வது எப்படி என்று தான் பார்க்க போகிறோம்.
தேவையான பொருட்கள் :
புழுங்கலரிசி - 1 கப்
உளுத்தம்பருப்பு - 1 கப்
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
சுக்குத்தூள் - (1/4) கால் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
ஆப்ப சோடா - 1 சிட்டிகை
தாளிக்க தேவையான பொருட்கள் :
கடுகு - 1/2 (அரை) டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைபருப்பு - 2 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
தேங்காய் துருவல் - 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
பெருங்காயம் - 1/2 (அரை) டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்
இஞ்சி - ஒரு துண்டு
செய்முறை :
- அரிசி, பருப்பை ஒன்றாக ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.
- ஒரு மணி நேரம் ஊறிய பிறகு, அரிசி + பருப்பு கலவையை நன்கு கழுவி, சற்றே கர கரப்பாக அரைத்துகொள்ளுங்கள்.
- தேவையான உப்பு சேர்த்துக் கரைத்துப் புளிக்க வையுங்கள்.
- புளித்த மாவில், சுக்குத்தூள், ஆப்பசோடா சேர்த்துக் கலந்துக்கொள்ளுங்கள்.
- நல்லெண்ணையையும் காய்ச்சி அதில் சேர்க்கவும்.
- கடாயில்
எண்ணையைக் காயவைத்து, கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைபருப்பு தாளித்து
பொன்னிறமானதும் மிளகு, சீரகத்தை ஒன்றிரண்டாக உடைத்துக் அதோடு சேருங்கள்.
- இஞ்சியையும் துருவி சேருங்கள்.
- அதனுடன், கறிவேப்பில்லையும் சேர்த்து, வதக்கி மாவில் சேருங்கள்.
- எல்லாவற்றையும் நன்றாக கலந்து, மாவை சிறிய கிண்ணங்களில் நிரப்பி, ஆவியில் வேகவையுங்கள். காஞ்சிபுரம் இட்லி ரெடி.
No comments:
Post a Comment