Wednesday, 15 August 2012

aval dosa

சமையல் குறிப்பு : அவல் தோசை

அவல் என்றதும் நம் எல்லோருடைய நினைவுக்கும் வருவது விநாயகர் சதுர்த்தி + ஆய்த சரஸ்வதி பூஜைகள் தான்.

இதனை அப்படியே சாப்பிடலாம். எங்கள் ஊரில், இதனை தாளித்து சாப்பிடுவார்கள். ஒரு சிலர் கோவில் பூஜை முடித்து, பக்தர்களுக்கு பிரசாதமாக இதனை தருவார்கள். உடலுக்கு தீங்கு விளைவிக்காத அதிக சத்துக்கள் கொண்ட ஒரு உணவு.

அந்த அவலை கொண்டு செய்வதற்கு மிக எளிமையான ஒரு சிறு உணவு தயாரிப்பதை தான் இங்கே நாம் பார்க்க இருக்கிறோம். அது தான் "அவல் தோசை".

தேவையான பொருட்கள் :
கெட்டி அவல் - ஒரு கப்
அரிசி மாவு - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
  1. அவலை 20 நிமிடங்கள் ஊறவைக்கவும்
  2. அதன் பிறகு, மிக்ஸியில் போட்டு நன்கு அரைக்கவும்.
  3. அதனுடன், அரிசிமாவு + தேவையான உப்பையும் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு
    ஏற்ப நன்கு கலந்து கொள்ளவும்
  4. மிதக சூடேறிய தோசைகல்லில், இந்த மாவை மெல்லிய தோசைகளாக ஊற்றி அது பொன்னிறமாக வந்தவுடன் எடுத்து பரிமாறலாம்.
  5. தேவையென்றால், சிறிது நெய் சேர்த்து தோசைகளை தயாரிக்கலாம். இன்னமும் கம கமவென்று சுவையாக இருக்கும்.

No comments:

Post a Comment