Tuesday, 18 February 2020

ராமநாதபுரம் சமஸ்தானம்..

வருடம் : கி.பி.1862
இடம் : ராமநாதபுரம் சமஸ்தானம்..
ஆண்ட மன்னர் : கிழவன் சேதுபதி ...

            இன்றைய இந்தியா எனும் நிலபரப்பு மொத்தமும்  ஆங்கிலேயர்களின் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சிக்கு கீழ்சென்ற பிறகு, பிரிட்டிஷ் மகாராணி ஒரு சட்டத்தை இங்கிலாந்தில் நிறைவேற்றுகிறார்.அது என்னவென்றால் தங்களின் ஆட்சி அதிகாரத்துக்குட்ப்பட்டு இருக்கும் இந்திய நிலப்பரப்பில் ஆளும் மன்னரோ,பாளையக்காரர்களோ,ஜமீன்களுக்கோ ஆண் வாரிசு இல்லையெனில் ஆளும் மன்னர் மற்றும் அவருடைய மனைவி இறந்தபின்பு அந்த நிலப்பகுதி பிரிட்டிஷ் அரசுக்கு சொந்தம் என சட்டமும் இயற்றினார்கள்.

      இப்போது மேலே சொன்ன ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னர் இறந்துவிட, ராணியான பர்வதவர்த்தினி தன் சமஸ்தானத்தை ஆள முத்துராமலிங்கம் எனும் ஒரு ஆண்பிள்ளையை தன் உறவினர்களின் சம்மதத்தோடு தத்தெடுக்கிறார்.முத்துராமரலிங்கத்தை தத்தெடுத்து வளர்த்த பின் சிறிது காலத்தில் ராணி இறந்துவிட ராமநாதபுர சமஸ்தானத்தின் மன்னராக முத்துராமலிங்கம் பதவியேற்கிறார்..

 அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராமநாதபுரம், சிவகங்கை என எல்லாம் ஒன்றிணைந்த மதுரை மாவட்டத்தின் ஆட்சியரான ஆங்கிலேயர் மன்னர் இறந்த தகவலை லண்டனில் உள்ள மகாராணிக்கு தெரிவித்து,உடனடியாக  அவர் சார்பில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நோட்டீஸ் அனுப்புகிறார்.
இதற்கு மறுப்பு தெரிவித்து ராமநாதபுரம் ராணி சார்பில் தாங்கள் முத்துராமலிங்கத்தை தத்தெடுத்தது சரியே என வாதாடினார்கள் சமஸ்தானத்தார்.  சென்னை ராஜதானி நீதிமன்றத்தில் நடந்த வழக்கில் தத்தெடுத்த முத்துராமலிங்கம் மன்னர் பதவியேற்றது சரியே என தீர்ப்பு வருகிறது...

அன்று பிரிட்டிஷ் அரசின் வெள்ளைய அதிகாரியான ஆட்சியருக்கு சட்ட ஆலோசனை தரும் சாஸ்திரம் கற்ற பார்ப்பனர்கள் இங்கு தான் தங்களின் விஷம விளையாட்டை ஆரம்பிக்கிறார்கள். மீண்டும் அந்த வழக்கு சமஸ்தானத்திற்கு எதிராக லண்டனில் உள்ள பிரிவிவ்யூ கவுன்சிலுக்கு வழக்கு எடுத்து செல்லப்படுகிறது. சாஸ்திர வேதவிற்பன்னர்கள் ஆட்சியருக்கு சொல்லி கொடுக்கிறார்கள், அன்றைய நாளின் ஹிந்து சட்டப்படி,பல ஸ்மிருதிகளின் படியும் ஒரு ஹிந்து விதவைபெண் தத்தெடுக்கவேண்டுமானால் ஆளும் மன்னர் இறக்கும் முன்பே மன்னரின் முன் பலருடைய சாட்சிகளின் முன்னிலையில் தத்தெடுக்கவேண்டும் என ஹிந்து சட்டத்தின் மூலமான ஸ்மிருதிகள் சொல்கின்றன,எனவே முத்துராமலிங்கம் பதவி ஏற்றது செல்லாது என கொள்ளையடிப்பதற்காக வந்த ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு ஆலோசனை தந்தனர்.

இந்த வழக்கு நடந்த 1867-ம் ஆண்டு லண்டன் பிரிவியூ கவுன்சிலில் சமஸ்தானம் சார்பில் வாதாடிய வழக்கறிஞர்கள் எங்களின் சட்டம் ஆரியன் ஸ்கூல் ஆப் லா-வின்( ARYAN SCHOOL OF LAW) கீழ் வராது.எங்களுடைய சட்டம் திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் (DRAVIDIAN SCHOOL OF LAW) கீழ் வரும் என ஆணித்தரமாக வாதாடி தீர்ப்பு முத்துராமலிங்கத்திற்கு சாதகமாக அந்த வழக்கை வென்றது மிகமுக்கியமான திராவிட இயக்கத்தின் முன்னோடியான சட்ட வரலாறு..்.

முத்துராமலிங்கம் VS மதுரை ஆட்சியர் வழக்கு என மூர்ஸ் ஜர்னல் (MOORES JOURNAL) எனும் லண்டன் பத்திரிக்கையில் புகழ்பெற்ற வழக்குகளின் அடிப்படையில் இந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த வழக்கு இடம்பெற்றது.நம் இந்திய ஒன்றியத்தின் சட்ட புத்தகத்தில் "ஹிந்து குடும்ப சட்டத்திலும்" இடம்பெற்றிருக்கிறது.

அந்த திராவிடியன் ஸ்கூல் ஆப் லா-வின் வழியே தான் பிற்காலத்தில் திராவிட இயக்க முன்னோடிகளும்,பெரியாரும் திராவிடர் கழக அமைப்பை நிறுவி தமிழர்களின் நலன்களுக்காக தங்களின் பெரும் உழைப்பை செலுத்தினார்கள்.

இந்த வரலாற்றை எல்லாம் அறியாமல் திராவிடத்தால் வீழ்ந்தோம் என அறியாமையால் அலறும்,திராவிடம் என்ற சொல்லே கிடையாது என உளரும் கும்பலுக்குமான பதில் இதுதான்...

ஹிந்துக்கள் ஏன், கோயில் கோயில் என்று அதை சுற்றியே வருகிறோம் ???


கோயில் பிராமணர்களுக்கு மட்டும் தட்டு காசு கிடைக்க வழி செய்யும் வியாபார ஸ்தலமா ???

பாரத்தை ஆண்ட பெரும்பாலான அரசர்கள் அவரவர் ஆண்ட பொழுது ஏன் மருத்துவமனை கட்டவில்லை, கல்விசாலை அமைக்கவில்லை ஆனால் கோயில்களை காட்டினார்கள் ???

கோயில்கள் எப்பொழுதெல்லாம் கட்டப்பட்டன ????

மக்களுக்கு பிரித்து கொடுக்காமல், அரசன், அரசின் நிலங்களை, ஏன் கோயில்களுக்கு மானியமாக எழுதி வைத்தான் ????
🤔🤔🤔🤔🤔

உலகின் குருவாக பாரதம் ஆனது எப்படி ???

எந்த ஒரு அரசும் பட்ஜட் போடும் பொழுது வரி வசூல் என்ன, அதில் அரசு நடத்த அதிகாரிகளுக்கு ஆகும் செலவு, மக்கள் நல திட்டங்களுக்கு ஆகும் செலவு ன்னு வரவு செலவை வைத்து தன்னிறைவு திட்டத்தை அடையத்தான் பட்ஜட் போடுவார்கள்.

இதையேதான் ஹிந்து கோயில்கள் செய்தன.

கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம் ன்னு அதைத்தான் சொல்லி வெச்சாங்க.

மன்னன் கோயில் கட்ட ஆரம்பித்தவுடன், கட்டுமான பணிக்கு அந்த ஊரை சுற்றி உள்ள கட்டுமான கலைஞர்கள், சிற்ப கலைஞர்கள், கல் தச்சர்கள், கட்டுமான பொருட்களான செங்கல், சுண்ணாம்பு போன்றவற்றை உற்பத்தி செய்வோர், அதை ஓரிடத்தில் இருந்து கோயில் கட்டும் இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து, வர்ணம் அடிக்க, ஓவிய கலைஞர்கள், இப்படி அனைவருக்கும் வேலை வாய்ப்பு, அதுவும் அரசரால் கொடுக்கப்படும், அரசு வேலை.

கோவிலுக்கு மானியமாக கொடுக்கப்படும் நிலங்கள், குத்தகை மூலமாக விவசாயிகளுக்கு விடப்பட்டு அதன் மூலம் விவசாய உற்பத்தி, அதற்கு ஒரு சமூகம்,  பாண்ட மாற்று முறையில், தன்னிறைவு பெற்ற பொருளாதாரம்.

கோவிலுக்கு கொடுக்கப்பட்ட பசுமாடுகள், அதை கவனித்தல், அதற்கு ஒரு சமூகம், இதனால்  கோயிலுக்கும் அந்த கிராமத்தாருக்கும் பால் சார்ந்த பொருட்கள்.

நெய்வேத்தியம் சமைக்க சமையல் கலைஞர்கள். அதற்கு ஒரு சமூகம்.

சமையல் செய்ய பாத்திரங்கள் செய்ய மண்பானை செய்வோர் மற்றும் உலோக பாத்திரம் செய்வோர், அதற்கு ஒரு சமூகம். அவர்களுக்கு  தொடர்ந்து வேலை.

நந்தவனம் மூலம் தெய்வத்திற்கு பூ மாலை மற்றும் அலங்கார சேவை செய்ய நந்தவனம் காப்போருக்கு வேலை. அதற்கு ஒரு சமூகம். அவருக்கு தொடர்ந்து வேலை இருக்க, அதற்கேற்ப கோவில் உற்சவங்கள்.

மங்கள இசை இசைக்கும் கலைஞர்கள் ஓர் சமூகம். கூத்து கலைஞர்கள் என,
அவர்களுக்கும் வருட மானியம் மற்றும் வேலை. மாலை வேளைகளில் ஆன்மீக கச்சேரி என்று மனதிற்கு இனிய பொழுது போக்கு நிகழ்ச்சிகள்.

தெய்வத்தின் வஸ்திரங்கள் நெய்ய ஒரு சமூகம்.

அந்த வஸ்திரங்களை துவைக்க ஓரு சமூகம், அவருக்கும் தொடர்ந்து கோவில் மானியம் மூலம் வேலை.

கோயிலை சுத்தமாக வைத்துக்கொள்ள ஒரு தேவை, அதை செய்ய ஒரு சமூகம். அவருக்கும் கோயில் மூலம் மானியம், வருட வருமானம்.

இவை அனைத்தையும் நிர்வாகம் செய்ய, கணக்கு பார்க்க, ஒரு சமூகம்.

இவர்கள் அனைவரும் அவரவர் வேலையை பார்க்க, அதன் மூலம் வாழ்வாதாரம் பெறவும், கோயில் ஒரு மிகப்பெரிய தொழிற்சாலை. ஆன்மீகம் ஒட்டி வாழ்வாதாரம்.

பெரு வெள்ளம் வந்து ஊரே மூழ்கி போனாலும், கோயிலின் கோபுரத்தில், கலசம் மூலம், செறிந்த விஞ்ஞான அறிவுடன், அதனுள் 12 வருடம் வரை கெடாத அந்த கிராமத்தில் மண்ணுக்கேற்ப விளையும் விளை பொருட்களின் விதை பொருட்கள்.

12 வருடத்திற்கு ஒரு முறை அதை மாற்றி அமைத்து, மராமத்து பணிகள் மேற்கொள்ள மேற் சொன்ன அனைவருக்கும் ஒரு கூட்டு வேலை வாய்ப்பு.

இப்படி அவர் அவருக்கு தெரிந்த பணி, அதை சார்ந்த சமூகம், ஒன்றிணைந்து தன்னையும் காப்பாற்றிக்கொண்டு, தன்னிறைவு வாழ்க்கை என வாழ்வதற்கு கட்டமைக்கப்பட்டதே, நம் ஹிந்து கோயில்கள்.

ஊருக்கு ஒரு கோயில், அதை சுற்றிலும் அனைத்து சமூகம்,

அந்த அந்த ஊரை சுற்றி உள்ள இயற்கை வளங்கள் பாதுகாக்கபட்டு, மூலிகை மூலம் வைத்தியம், அதற்க்கென ஒரு சமூகம் என,

ஊரை சுற்றியே, ஓர் தன்னிறைவு வாழ்க்கை.

இப்படி அமைக்கப்பட்டது தான் நம் பொருளாதார கட்டமைப்பு.

மாத சம்பளம் பணமாக, பணத்திற்கு பொருள், அதன் விலை ஏற்ற இறக்கம், பண வீக்கம், இவை எதுவுமே சாராமல் ஓர் தன்னிரைவு வாழ்க்கை.

இதை உடைக்கத்தான், கோயில்கள் தகர்க்கப்பட்டன. இதை தகர்க்கத்தான் கோயிலின் மேல் மாற்று மத படையெடுப்பு நடந்தது.

கோயில்கள் இல்லாமல் போனால் வாழ்வாதாரம் கெடும் என அந்நிய சக்திகள் அறிந்திருந்தனர்.

தெய்வங்களுக்கு உயிரூட்டி, அந்த தெய்வங்கள் அங்கே வாழ்வதாகவும், அந்த கோயிலின் சொத்துக்கள், அந்த தெய்வங்களின் சொத்துக்கள் என்றும்,

எப்படி, உயிருள்ள ஒருவரின் சொத்தை அவர் சம்மதம் இல்லாமல் மற்றவர் அபகரித்து கொண்டாலும், அது அபகரித்தவரின் சொத்து ஆகாதோ, அதே போல, அனைத்து கோயிலின் சொத்துக்களும், அந்த கோயிலில் வாழும் அந்த தெய்வத்திற்கே சொந்தம் என்று காலம் காலமாக நமது சனாதன தர்மத்தில் இருக்கும் நம்பிக்கையும் வகுக்கப்பட்ட கொள்கையும்.

உயிருள்ள ஒருவர்,எப்படி தினமும் குளிப்பாரோ, உடை உடுத்தி கொள்வாரோ, தினமும் உணவு உண்பாரோ, நம் வாழ்வாதாரத்திற்கு உதவும் ஒருவரை நாம் எப்படி போற்றி கவனிப்போமோ, அப்படி  அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக, அனைவரின் சார்பாக,  பூஜைகளை கவனிக்க ஒரு சமூகம்.

அனைத்து சமூகமும் ஒரே முகமாக ஹிந்து என்ற ஒரு குடையின் கீழ், தன்னிறைவு பெற்ற வாழ்க்கையை நமக்கு அளித்ததே ஹிந்து தர்மமும், ஹிந்து  கோயில்கள் மட்டும்தான்.

இப்படி ஒரு கோயிலை வைத்து, ஆன்மீகம் மூலமாக ஒரு தன்னிறைவு பொருளாதாரத்தை உலகிற்கு வாழ்ந்து காட்டியதாலேயே, பாரதம் உலக குருவாக திகழ்ந்தது

கோயில்கள், மற்றும் ஹிந்து தர்மத்தை பற்றி, எனது சிறிய பார்வை.

🙏🙏🙏🙏
படித்ததில் பிடித்தது!!

பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர் கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது!!



கவியரசு கண்ணதாசன்

கல்லூரியில் படிக்கும் போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது.

கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது, ஒவ்வொரு வேடிக்கைக்குள்ளும் வேதனை
இருப்பது அவனுக்குப் புரிகிறது.

இளமைக் காலத்து ஆரவாரம், முதுமை அடைய அடையக் குறைந்து வருகிறது.

ஒவ்வொரு துறையிலும், நிதானம் வருகிறது.

இளம் பருவத்தில் இறைவனைப்பற்றிய சிந்தனை அர்த்த புஷ்டியற்றதாகத் தோன்றும்.

வாழ்வில் அடிபட்டு வெந்து, நொந்து ஆண்டவனைச் சரணடைய வரும்போது, அவனது மாபெரும் இயக்கம் ஒன்று பூமியில் நடைபெறுவது புத்தியில் படும்.

பக்குவமற்றவனுக்கு நாத்திகம், அராஜகம் எல்லாமே குஷியான தத்துவங்கள்.

பக்குவம் வர வர, ரத்தம் வற்ற வற்ற இந்தத் தத்துவங்கள் எல்லாம் மறுபரிசீலனைக்கு வரும்.

நடைமுறைக்கு ஒத்த சிந்தனை, பக்குவப்பட்ட பிறகே தோன்றும்.

இருபது வயது இளைஞனைப் பெண் பார்க்கச் சொன்னால் எல்லாப் பெண்களுமே அவன் கண்களுக்கு அழகாய்த்தான் தெரிவார்கள்.

நாற்பது வயதிற்கு மேலேதான், நல்ல பெண்ணைத் தேர்ந்தெடுக்கும் தெளிவு அவனுக்கு வரும்.

கல்லூரி மாணவனைப் படிக்கச் சொன்னால் காதல் கதையையும், மர்மக் கதையையும் படிப்பதில்தான் அவன் கவனம் செலுத்துவான்.

காதலித்துத் தோற்றபின்தான், அவனுக்குப் பகவத் கீதையைப் படிக்கும் எண்ணம் வரும்.

விளையாட்டுத்தனமான மனோபாவம் பிடிவாதத்திற்குப் பெயர் போனது.

எதையும் சுலபத்தில் ஏற்றுக்கொண்டு `அதைவிட உலகமே கிடையாது’ என்று வாதாடும்.

எதிர்த்தால் வேரோடு பிடுங்க முயலும்.

பக்குவமற்ற நிலை என்பது இரண்டு எக்ஸ்ட்ரீம்’ நிலை.

ஒன்று, இந்த மூலையில் நின்று குதிக்கும், அல்லது அந்த மூலையில் இருந்து குதிக்கும்.

பக்குவ நிலைக்குப் பெயரே நடு நிலை.

மேலை நாட்டில் ஒரு பழமொழி உண்டு.

`இருபது வயதிற்குள் ஒருவன் கம்யூனிஸ்ட் ஆகவில்லை என்றால் அவன் அப்பாவி; முப்பது வயதிற்கு மேலும் அவன் கம்யூனிஸ்டாக இருந்தால் அவன் மடையன்!’

இதுதான் அந்தப் பழமொழி.

பரபரப்பான பருவ காலத்தில் கோயிலுக்குப் போனால் தெய்வம் தெரியாது என்பது மட்டுமல்ல, அங்கே சிலையில் இருக்கும் அழகுகூடத் தெரியாது.

ஐம்பது வயதில் கோயிலுக்குப் போனால், சிலையில் இருக்கும் ஜீவனும் தெரியும்.

இதில் வெறும் பருவங்களின் வித்தியாசம் மட்டுமில்லை.

பக்குவத்தின் பரிணாம வளர்ச்சியும் அடங்கியிருக்கிறது.

ஏன், உடம்பேகூட இருபது வயதில் எந்த உணவையும் ஜீரணிக்கிறது.

நாற்பதிற்கு மேலேதானே `இது வாய்வு’, `இது பித்தம்’, என்கிற புத்தி வருகிறது.

`டென்ஷன்’ என்ற ஆங்கில வார்த்தைக்குச் சரியான தமிழ் வார்த்தை எனக்குப் புரியவில்லை.

`முறுக்கான நிலை’ என்று அதைக் கூறலாம்.

அந்த நிலையில் `எதையும் செய்யலாம், எப்படியும் செய்யலாம்’ என்கிற `திமிர்’ வருகிறது.

அதில் நன்கு அனுபவப்பட்ட பிறகு, `இதைத்தான் செய்யலாம்’, `இப்படித்தான் செய்யலாம்’ என்ற புத்தி வருகிறது.

இனி விஷயத்திற்கு வருகிறேன்.

`ஞான மார்க்கப் பக்குவமும் அப்படிப்பட்டது தான்’ என்பதைக் கூறவே இவற்றைக் கூறினேன்.

உள்ளம் உடலுக்குத் தாவி, உடல் ஆன்மாவுக்குத் தாவிய நிலையே, பக்குவப்பட்ட நிலை.

தேளைப் பிடிக்கப் போகும் குழந்தை, அதையே அடிக்கப் போகும் மனிதனாக வளர்ச்சியடைகிறது.

அதற்குப் பிறகு, அந்தத் தேளிடமேகூட அனுதாபம் காட்டும் ஞானியாக அந்த மனிதன் மாறி விடுகிறான்.

இன்றைய பக்குவம் இருபதாண்டுகளுக்கு முன் எனக்கு இருந்திருந்தால், எனது அரசியலில்கூட முரண்பாடு தோன்றியிருக்காது.

வெறும் உணர்ச்சிக் கொந்தளிப்பில், நன்மை தீமைகளை உணரும் நிதானம் அடிபட்டுப் போகிறது.

ஆரம்பத்தில் `இதுதான் சரி’ என்று ஒன்றை முடிவு கட்டிவிட்டு, பின்னால் `இது தவறு’ என நாமே சொல்ல வேண்டிய நிலை வருகிறது.

சரியாகக் கணக்கிட்டால், மனித வாழ்க்கைக்கு மூன்று கட்டங்கள்.

முதற் கட்டம் ஒன்றுமே புரியாத உணர்ச்சிக் கூத்து.

இரண்டாவது கட்டம் ஏதோ இருப்பதாக, ஆனால் தெளிவாகத் தெரியாத, மயங்கிய நிலை.

மூன்றாவது கட்டம் பிரபஞ்சம் எவ்வளவு பெரியது என்றும், நமக்கும் மேலே ஒரு நாயகன் இருக்கிறான் என்றும் முழு
நம்பிக்கை கொண்ட ஞானநிலை.

இந்த மூன்றாவது நிலையை முதற் கட்டத்திலேயே எய்தியவர்கள் பலர் உண்டு.

சுவாமி விவேகானந்தரைப் போல, வளைந்து கொண்டே வளர்ந்த மரங்கள் உண்டு.

அவர்கள் எல்லாம் பூர்வ ஜென்ம புண்ணியத்தால் அந்த நிலையை எய்தியவர்கள்.

மற்றவர்கள், அனுபவத்தின் மூலமாகத்தானே பக்குவ நிலையை அடைய வேண்டியிருக்கிறது!

எகிப்து மன்னன் பாரூக், பட்டம் துறந்து பாரிஸ் நகரில் சீரழிந்த போதுதான் `மனிதாபிமானம்’ என்றால் என்ன என்பதை உணர முடிந்தது.

ஆனால், அரண்மனை வாசத்திலேயே அதனை உணர்ந்து கொண்ட சித்தார்த்தன், கெளதம புத்தரான வரலாறும்
நம்முடைய நாட்டிலே உண்டு.

தூக்கத்திற்கும் விழிப்பிற்கும் நடுவே தடுமாறும் மனிதர்கள் நம்முடைய நாட்டிலே மிக அதிகம்.

ஒன்று, தூங்குவதென்றால் நிம்மதியாகத் தூங்கி விடவேண்டும்.

விழிப்பதென்றால் சுறுசுறுப்பாக விழித்துக் கொள்ள வேண்டும்.

தூக்கமும் விழிப்புமாக இருப்பதால் தூக்கத்தின் பலனும் கிட்டாது, விழிப்பின் பலனும் கிட்டாது.

மனப்பக்குவம்’ என்பது அனுபவங்கள் முற்றிப் பழுத்த நிலை.

அந்த நிலையில் எதையுமே `இல்லை’ என்று மறுக்கின்ற எண்ணம் வராது.

`இருக்கக்கூடும்’ என்றே சொல்லத் தோன்றும்.

எனது நண்பரும் முன்னாள் அமைச்சருமான தோழர் நெடுஞ்செழியன் அவர்கள், ஒரு கட்டுரையில்
“நாஸ்திகன் தன் கொள்கையில் தெளிவாகவே இருக்கிறான்” என்றும், “ஆஸ்திகன் தான் தடுமாறுகிறான்” என்றும், “கடவுள் இல்லை என்பதை நாஸ்திகன் உறுதியாகச் சொல்லுகிறான்”
என்றும், “உண்டு என்பதற்கு ஆஸ்திகன் ஒழுங்காக விளக்கம்
தர முடியவில்லை” என்றும் எழுதியிருக்கிறார்.

நல்லது.

`இல்லை’ என்று சொல்பவனுக்கு எந்தப் புத்தியும் தேவையில்லை.

எதைக் கேட்டாலும் `இல்லை’ என்று சொல்ல முட்டாளாலும் முடியும்.

ஆனால் `உண்டு’ என்று சொல்பவனுக்குத்தான் அதை நிலை நாட்டப் போதுமான அறிவு தேவைப்படும்.

“பூமிக்குக் கீழே என்ன இருக்கிறது” என்று கேட்டால் எதுவுமே இல்லை, என்று குழந்தைகூடப் பதில் சொல்லிவிட முடியும்.

ஆனால், “அடியிலே நீர்; அதன் கீழே நெருப்பு” என்று சொல்ல விஞ்ஞான அறிவு வேண்டும்.

பாத்திரம் செய்பவனுக்குப் பல நாள் வேலை; போட்டு உடைப்பவனுக்கு ஒரு நாள் வேலை.

நாஸ்திகன் எப்போதுமே தெளிவாக இருக்க முடியும்.

காரணம் எதைக் கேட்டாலும், எந்திரம் போல் `இல்லை இல்லை’ என்று மட்டுமே அவன் பதில் சொல்லப் போகிறான்.

நன்றாகத் தலையாட்டத் தெரிந்த அழகர் கோயில் மாட்டை
விடவா அவன் உயர்ந்து விட்டான்.

ஆனால், ஆஸ்திகனோ, விபூதிக்கு ஒரு காரணம், குங்குமத்திற்கு ஒரு காரணம், திருமண்ணுக்கு ஒரு காரணம் சொல்லியாக வேண்டும்.

சொல்வது மட்டுமல்ல, எதிரியையும் ஒப்புக் கொள்ள வைக்க வேண்டும்.

ஒன்றை ஒப்புக்கொண்டு, அதன் உட்கீற்றுகளை விவரிப்பதற்குத் தகுந்த பக்குவம் தேவை.

ஆஸ்திகன், பிரபஞ்சத்தின் தோற்றம் முதல் இயக்கம் வரையில் கண்டு பிடிக்க முயலுகிறான்.

ஜனனம், மரணம் இரண்டையும் அவன்தான் ஆராய்கிறான்.

அப்படி ஆராய்ந்து, இந்து வேதாந்திகள் செய்த முடிவை இதுவரை விஞ்ஞானம் தாண்டியதில்லை.

வேதங்களின் முடிவையே, விஞ்ஞானம் தன் முடிவாக ஏற்றுக் கொண்டிருக்கிறது.

ஆனால், விஞ்ஞானமும் அறியாமல், மெய்ஞ்ஞானமும் அறியாமல், அஞ்ஞானத்தைக் கொண்டு உழலும் நாஸ்திகனுக்கு, எல்லாம் இயற்கையாக நடக்கின்றன’ என்று சொல்லத் தெரிகிறதே தவிர,அந்த இயற்கை என்பது என்னவென்று சொல்லத் தெரியவில்லை.

பக்குவ நிலைக்கும், பக்குவமற்ற நிலைக்கும் வேறுபாடு இதுதான்.

“கோயிலுக்குப் போய் ஏன் தேங்காய் உடைக்க வேண்டும்?”

“அப்படிக் கோயிலிலே என்ன இருக்கிறது?” என்று நாஸ்திகன் கேட்கிறான்.

அந்தத் தேங்காயை உடைக்கும் வரையில், `அந்தத் தேங்காய்க்குள் என்ன இருக்கிறது?’ என்பது
அவனுக்குத் தெரியுமா?
அதில் வழுக்கையும் இருக்கலாம், முற்றிய காயும் இருக்கலாம்.

ஆகவே, உடைத்த பின்பே காயைக் கண்டு கொள்ளும் மனிதன், உணர்ந்த பின்பு தெய்வத்தைக் காண முடியும் என்பது உறுதி.

`கடவுளே இல்லை’ என்று வாதாடியவன் எவனும் `எனக்கு மரணமே இல்லை’ என்று வாதாட முடியவில்லையே!

`மரணம்’ என்று உணரப்படும்போதே சிலருக்குப் பக்குவம் வருகிறது.

எனக்குத் தெரிந்த மிகப் பெரிய நாஸ்திகர் கூட தமது அந்திம காலத்தில் யார் கொடுத்த விபூதிகளையும் பூசிக் கொண்டார்கள்.

மரணத்தின் பின் எங்கே போகப் போகிறோம் என்று நிச்சயமாகத் தெரியும் வரை ஈசுவரன் ஒருவன் இருப்பது உறுதி.

நன்கு பக்குவப்பட்டவர்கள், தம் வாழ்நாளிலேயே காண முடிகிறது.

இப்போதெல்லாம், `போலித்தனம் எது? பொய் எது?’ என்பதைக் கண்டுகொள்ளக்கூடிய தெளிவு எனக்கு வந்து விட்டது.

காரணம், வயது மட்டுமல்ல, பக்குவம்.

செருப்புப் போடாத காலத்தில், மலத்தை மிதித்திருக்கிறேன். அதனால், இப்போது செருப்புப் போடுகிறேன்.

கடலை மாவில் செய்த பலகாரத்தைச் சிறுவயதில் விரும்பிச் சாப்பிட்டேன். இப்போது அது தவறு என்பதை உணருகிறேன்.

என் முன்னால் ஒரு வாதியையும், பிரதிவாதியையும் கொண்டு வந்து நிறுத்தி, `யார் நிரபராதி’ என்று சொல்லச் சொன்னால் அவர்களது வாக்குமூலங்கள் இல்லாமலேயே, நான் அவர்களைக்
கண்டுபிடிப்பேன்.

என்னுடைய தீர்க்கதரிசனத்துக்கு முதல் அடிப்படை அறிவல்ல; அனுபவம்.

தலைப்பை மீண்டும் நினைவுபடுத்தினால், அதன் பெயரே `பக்குவம்’.

பக்குவமாய் வாழுங்கள்;
வாழ்வதன் பயனை உணருங்கள்;
வாழ்வின் பலனை அனுபவியுங்கள்

ஐஐடி-யைத் தாக்குங்கள்!


இந்தியா முழுவதும் பல ஐஐடியும், பல்வேறு மத்தியப் பல்கலைகழகங்களும் இயங்கி வருகின்றன. அதில் பெரும்பாலும் வட இந்தியர்களோ, பிராமணர்களோதான் பயில்கின்றனர். இதன் விளைவாக, இந்தியாவின் உயர் பொறுப்புகளில் அவர்கள் எளிதாக நுழைந்துவிடுகின்றனர். பெல், நெய்வேலி பழுப்பு நிலக்கரி மற்றும் மின் உற்பத்தி நிலையம், கல்பாக்கம், கூடங்குளம், சேலம் இருப்பாலை என்று எல்லா மத்திய நிறுவனங்களிலும் அவர்கள்தான் உயர் பொறுப்பில் அமர்ந்துள்ளனர். இந்த நிலையை மாற்ற வேண்டும்.

பிராமணர்களும், வட இந்தியாவைச் சேர்ந்த உயர் வகுப்பினரும், நிதானமாகத் திட்டமிட்டு படித்து, அவற்றுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுதி, ஐஐடி, ஐஐஏஸி, மத்தியப் பல்கலைக்கழகங்களில் உள்ள எல்லா இடங்களையும் கைப்பற்றுகின்றனர். இந்த விடயத்தில் அவர்கள் அவசப்படுவதே இல்லை. 'முந்துகின்ற கல் அடிக் கல்லாக மாறும், பொறுத்திருந்த கல் கோபுரம் செல்லும்' என்பார்களே, அதுதான் இந்த விடயத்தில் நடக்கிறது.

நம் குழந்தைகளுக்கு நாம் என்ன கற்றுக் கொடுக்கிறோம்? 12-ஆம் வகுப்பு படித்தவுடன், அவசர அவசரமாக ஏதேனும் ஒருக் கல்லூரியில் பிஎஸ்ஸி, பிஇ போன்ற ஏதேனும் ஒருப் படிப்பில் சேர்த்துவிடுகிறோம். இலட்சக்கணக்கான ரூபாய் பணத்தைக் கொட்டிப் படிக்க வைத்தேன் என்று பெருமைப் பீற்றுகிறோம். ஆனால், பிள்ளைகளோ, தரமாகத் தயாராகி வராமல், தகுதியற்றவற்களாக சமூகத்திற்குள் நுழைந்து, வேலையில்லாமல் திரிகின்றனர். தொழிற்நுட்ப கிரீயேட்டர்களாக வரவேண்டியவர்கள், மீம்ஸ் கிரியேட்டர்களாக வலம் வருகின்றனர்.

பிஇ படித்துவிட்டு வீட்டிலும் இருக்க முடியாமல், சென்னை, பெங்களூர் போன்ற பெருநகரங்களில் முட்டுச்சந்துகளில் அறை எடுத்துத் தங்கி, சாப்பாட்டுக்கே வழி இல்லாமல் திண்டாடி, தங்களின் வாழ்வே சூரையாடப்பட்டுவிட்டதை உணர்கின்றனர்.

இதற்கெல்லாம் காரணம் என்ன?

'முதல் கோணலே முற்றும் கோணல்' என்பதுதான். முதலில் எந்தப் படிப்பில் சேரவேண்டும். அதையும் எங்கு சேர வேண்டுமெனத் திட்டமிட்டுச் சேரவேண்டும். எத்தனையோ தகுதியுள்ள, திறமையான, புத்திசாலி மாணவர்கள், வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏதேவொரு ஓட்டை ஒடைச்சல் கல்லூரிகளில் சேர்ந்து நான்கு, ஐந்து ஆண்டுகளை விரையம் செய்துவிடுகின்றனர். அந்தக் கல்லூரிகளில் எந்த அறிவியல் புரிதலும் இல்லாத, அதேக் கல்லூரியில் படித்த மாணவர்களையே பேராசிரியர்களாக குறைந்தச் சம்பளத்திற்கு நியமித்து, தொடக்கத்திலேயே மாணவர்களின் வாழ்க்கையை அழித்துவிடுகின்றனர்.

ஆனால், பிராமணர்களும் வட இந்திய உயர் வகுப்பினரும், 12-ஆம் வகுப்பு முடித்தக் கையோடு, பிள்ளைகளை ஓரிரு ஆண்டுகள் வீட்டில் இருந்தே, மத்தியப் பல்கலைக்கழகங்களுக்கான நுழைவுத் தேர்வுகளை எழுத உதவியாக இருக்கின்றனர். அதற்கென எத்தனையோ புத்தகங்கள் வெளியில் கிடைக்கின்றன. அதனை முழுமையாகப் படித்து, இரண்டு மூன்று முறை நுழைவுத் தேர்வுகளை எழுதி, தங்களின் இடங்களைக் கைப்பற்றுகின்றனர்.

ஐஐடியிலும், மத்தியப் பல்கலைகழகங்களிலும் நுழைவதுதான் கடினம். நுழைந்தப்பின் எல்லாமும் மாணவர்களைத் தேடி வந்துவிடுகின்றன. பணம், தொழில்நுட்ப கருவிகள், வசதிகள், புத்தகம் என்று எல்லாமும் எளிதாக அவர்களுக்கு கிடைத்துவிடுகிறது. சிறந்த அறிவியல் புரிதல் உள்ள மாணவர்களாக உருவாகி, புதியப் புதியக் கண்டுபிடிப்புகளை நிகழ்த்துகின்ற பேராற்றல் கொண்ட மாணவர்களாக சமூகத்திற்குள் நுழைகின்றனர். இந்த திட்டமிட்ட நகர்வு நம்மிடம் இருக்கிறதா?

இல்லை..

எல்லாவற்றிலும் ஓர் அவசரம். உடனே பிஇ சேர்ந்தாக வேண்டும். உடனே வேலைக்கு போயாக வேண்டும். உடனே கை நிறைய சம்பாதிச்சாக வேண்டும். இதன் விளைவு, இன்று பொறியியல் துறை கவிழ்ந்து கிடக்கிறது. எல்லாத் துறைகளிலும் தகுதியில்லாத பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் தெருவில் நிற்கின்றனர். இந்தியப் பொருளாதாரம் சரிந்த கையோடு, பொறியாளர்களும் தெருவுக்கு வந்து கொண்டு இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் பலப் பொறியியல் கல்லூரிகளை மூடுகின்ற நிலைக்கு வந்துவிட்டனர்.

ஆனாலும், இன்றும் ஐஐடியன்களுக்கு வாழ்வு உச்சத்தில்தான் இருக்கிறது. ஐஐடியில் தன் படிப்பை முடிப்பதற்கு முன்பே, உலகம் முழுவதும் பறந்துச் சென்று பணியில் அமர்ந்துவிடுகின்றனர். அவர்கள் யாரிடம் கேட்டாலும் ஒரே பதில்தான் வருகிறது. '12-ஆம் வகுப்பு படித்துவிட்டு, இரண்டு மூன்று ஆண்டுகள் கடினப்பட்டு படித்தேன்.. ஐஐடியில் சேர்ந்தேன்.. சாதித்தேன்..' என்பதுதான் அந்த பதில்.

உங்கள் வீட்டில் வளரும் இளம் தலைமுறைப் பிள்ளைகளுக்கு நான் ஒரேவொரு அறிவுரைதான் வழங்குகிறேன்...

'ஐஐடியைக் குறிவையுங்கள்..'

-பேராசிரியர் ஆ.அருளினியன்

மஹாளய_அமாவாசை


              புரட்டாசி மாதம்  பௌர்ணமிக்கு. மறுநாள்   பிரதமை  திதியில். தொடங்கி   புரட்டாசி  அமாவாசை வரையிலான  நாட்கள்  மஹாளய பட்சம் என்றும், அதில்   புரட்டாசி  அமாவாசையானது   மஹாளய  அமாவாசை  என்றும்  அழைக்கப்படுகிறது.  மஹாளயம் என்றால்  பெரிய இடம்;  பட்சம்    என்றால் பதினைந்து நாட்கள்.  உயிர்களைக் கவரும் யமதர்மன்,  யமலோகத்திலிருக்கும்  உயிர்களைப்  பூமிக்கு அனுப்பி,  இப் பதினைந்து  நாட்களும்  தங்கள்  குடும்பத்தோடு  தங்கி வருமாறு  அனுப்புவாராம். மறைந்த  நம்  முன்னோர்கள். பித்ரு லோகத்திலிருந்து வந்து  நம்மோடு  தங்கும்  காலமே  மஹாளயபட்சமாகும்.
        மஹாளயபட்ச    விதிப்படி  அந்த  பதினைந்து  நாட்களும்  பித்ருக்களுக்காக  அன்ன  சிரார்த்தம் செய்ய வேண்டும்!  தானதர்மங்களையும்  இந்நாளில்  செய்யலாம். மஹாளய. அமாவாசை  நாளன்றாவது  முன்னோர் வழிபாடு  செய்ய வேண்டும்.  மற்ற நாட்களில்   தர்ப்பணம்( எள்ளுத் தண்ணீர் விடுதல்)  செய்ய வேண்டும்.
         பித்ரு வழிபாடு  செய்தால்   வீட்டில்   நல்லவை  நடைபெறும்;  அவர்களை  அலட்சியப்படுத்தினால்  சாபத்தைப்  பெற்றுத் தரும்.    நம் வாழ்வில் வரும் பல துன்பங்களுக்கு  முன்னோர் வழிபாடு செய்யாததும்  ஒரு  காரணம்  என்கின்றனர்.  இந்நாளில்  புனித நீராடி  பித்ரு கடன்   செய்வதும் சிறப்பான  நாளாகக்  கருதப்படுகிறது.
        நம் வாழ்வில் வரும் இன்பத் துன்பங்கள் யாவும் நாம்  முற்பிறவியில்  செய்த  பாவ புண்ணியத்திற்கு ஏற்ப அமையும்  என்பதே  நம்  நம்பிக்கை.   தவிர்க்க இயலாதக் காரணங்களால்   அமாவாசை திதி நாளில்  நம் முன்னோரை வழிபட முடியாமல் போயிருந்தாலும்,   அவர்களது  ஆன்மா  சாந்தியடைய  இந்த  பதினைந்து  நாட்களுமே அல்லது அதில்  ஏதோவொரு நாளில் முன்னோர் வழிபாட்டைச் செய்து நற்பலனை அடையலாம்.
      அதனால் முற்பிறவியின்  பாவங்களும்,  பித்ரு சாபமும் முழுமையாக விலகும்.
   மஹாளயபட்சத்தில்,  குறிப்பாக  மஹாளய  அமாவாசையன்று  (28. 9. '19) அன்று  முன்னோருக்கு முறையான வழிபாடு செய்தால் நம் வாழ்வின்  அனைத்துவிதமான பிரச்சனைகளும் விலகி, எங்கும் சுபிட்சமே நிலவும். 🙏

சௌராட்டிரர்

சௌராட்டிரர் தற்போதைய குஜராத மாநிலத்தில் உள்ளராஜ்கோட் மாவட்டம்,
பவநகர் மாவட்டம்,ஜாம்நகர் மாவட்டம்,அம்ரேலி மாவட்டம் ,
ஜூனாகாத் மாவட்டம்,போர்பந்தர் மாவட்டம்,
தேவபூமி துவாரகைமாவட்டம், கிர்சோம்நாத்மாவட்டம், சுரேந்திரநகர்மாவட்டம், மற்றும்
அகமதாபாத்மாவட்டத்தின்
கிழக்கு மற்றும்
தென்கிழக்குப்
பகுதிகளில்
வாழ்ந்தவர்கள்.
அலாவுதீன் கில்ஜி
மற்றும் கஜினி முகமது
போன்ற
ஆக்கிரமிப்பாளர்களின்
கொலை
வெறியாட்டத்திற்கு
அஞ்சியும், கட்டாய
இசுலாமிய மத
மாற்றத்திற்கு
அஞ்சியும்,
சௌராஷ்ட்டிர தேசத்து
சௌராட்டிரர்கள் கி.பி.,
1025 முதல்
புலம்பெயர்ந்து, பல
இடங்களில்
பல்லாண்டுகள் சுற்றித்
திரிந்து இறுதியாகத்
தமிழ்நாட்டை தாயகமாகக்
கொண்டு வாழ்கின்றனர்.
புலப்பெயர்வுகள்
1024-1025இல்
கஜினி முகமது
சௌராட்டிர
தேசத்தினையும்,
சோமநாதபுரத்தில் உள்ள
சிவன் கோயிலையும்
சூறையாடிய பின்,
அங்கு வாழ்ந்த
சௌராட்டிரர்களின்
பெரும் பகுதியினர்,
தேவபூமி துவாரகை
மாவட்டத்தின்
தலைமையகமான
காம்பாலியம் நகரத்தில்
குடியேறி அறுபது
ஆண்டுகள் வாழ்ந்த பின்,
தற்போதைய
மகாராட்டிரத்தில் உள்ள
தேவகிரியில்
குடியேறி 300 ஆண்டுகள்
வாழ்ந்தனர். பின்னர்
தில்லி சுல்தான்
அலாவுதீன் கில்ஜியின்
படைத்தலைவரான மாலிக்
கபூர் தேவகிரியை 1307ல்
கைப்பற்றியபின்பு,
இந்துக்களின் புகழிடமாக
விளங்கிய விஜயநகரப்
பேரரசுசில் 1312ல்
குடியேறினர். விஜயநகரப்
பேரரசு,
பாமினி சுல்தான்களால்
ஆக்கிரமிப்பு
செய்யப்பட்ட பின்னர்
சௌராட்டிர சமூக மக்கள்
1675க்குப்
பின்பு தமிழ்நாட்டை
ஆண்டு கொண்டிருந்த
தெலுங்கு நாயக்கர்
மன்னர்கள் ஆளும்
பகுதிகளில்
குடியேறினர்.
சௌராஷ்ட்ர
விஜயாப்தம்
சௌராட்டிரர்கள்
சௌராட்டிர
தேசத்திலிருந்து
வெளியேறி, விசயநகரப்
பேரரசில் குடியேறிய
ஆண்டான கி. பி., 1312-ஆம்
ஆண்டு முதல்
சௌராஷ்ட்டிர
சௌராஷ்ட்ர விஜயாப்தம்
துவங்குகிறது.
தமிழ் நாட்காட்டிப்படி
சித்திரை மாதம்
ஒன்றாம் நாள்
சௌராஷ்ட்டிரர்களின்
புத்தாண்டு
துவங்குகிறது. 14
ஏப்பிரல் 2012 முதல் 13
ஏப்பிரல் 2013 முடிய உள்ள
காலம்
வரை சௌராஷ்ட்டிர
விஜயாப்தம் 700
ஆண்டுகள்
நிறைவு பெற்றுள்ளது.
மக்கட் தொகை
2001ஆம் ஆண்டு மக்கள்
தொகை கணக்கீட்டின்படி
இந்தியாவில் மொத்தம்
10,10,562 சௌராட்டிரர்கள்
வாழ்கிறார்கள்.
வாழ்விடங்கள்
சௌராட்டிர மொழி
பேசும் மக்கள் தமிழ்
நாட்டில் காஞ்சிபுரம் ,
ஆரணி, ஆம்பூர்,
வாலாஜாபேட்டை,
புவனகிரி, சிதம்பரம்,
சேலம் ,அம்மாபேட்டை
நாமக்கல், இராசிபுரம் ,
பரமத்தி, தஞ்சை,
திருபுவனம், தாராசுரம்,
துவரங்குறிச்சி,
திருவாரூர்,
கும்பகோணம்,
திருவையாறு ,
அம்மையப்பன், சேலம் ,
மாரியம்மன் கோயில்
(தஞ்சை), அய்யம்பேட்டை,
திருச்சி, உறையூர்,
திருவாப்பூர்,
(புதுக்கோட்டை),
இலுப்பூர், பரம்பூர்,
அறந்தாங்கி,
திண்டுக்கல்,
பெரியகுளம்,
நிலக்கோட்டை, மதுரை,
பரமக்குடி, எமனேசுவரம் ,
இராமநாதபுரம் ,
பாளையங்கோட்டை ,
கிளாக்குளம்,
வெள்ளாங்குழி,
வீரவநல்லூர், மற்றும்
கோட்டாறு
(நாகர்கோவில்)
பெயர்க் காரணம்
சௌ எனும் சொல் இந்தி
மொழியில் (सौ) =
நூறு எனவும்,
ராஷ்டிரம் எனும்
சொல் ’பெரும் பகுதி ’
என்றும்
பொருள்படும்.
நூறு பகுதிகளில்
வாழ்ந்தவர்கள்
இந்தி மொழியில்
செளராஷ்டிரர் என
வழங்கலாயிற்று.
மேலும் ’செளரம்’எனும்
சொல் சமசுகிருதம்
மொழியில் சூரியனை
குறிக்கும்,
செளராஷ்டிரர்
சூரியனை
வணங்குவோர் என்றும்
பொருள்படும்.
ஸ்ரீகிருஷ்ணனும்
சூரியனை வழிபடும்
மரபினர்
என்பது இங்கு நினைவு
கூரத்தக்கது.
கோத்திரமும்
குடும்பப்
பெயர்களும்
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிரர்களின்
கோத்திரங்களும்
குடும்பப் பெயர்களும்
சௌராட்டிரர்களின்
சமுதாயம், பண்டைய
வேதகால 64 ரிசிகளின்
பெயர்களில்
கோத்திரங்களாகப்
பிரிந்து உள்ளனர்.
ஒரே கோத்திரத்தில்
திருமண உறவு வைத்துக்
கொள்வதில்லை. இவர்கள்
யசூர் வேதம், ஆபஸ்தம்ப
சூத்திரத்தின்படி
அனைத்துச் சடங்குகள்
இச்சமூகப் புரோகிதர்கள்
செய்கின்றனர்.
ஒரு கோத்திரத்தில் பல
குடும்பப் பெயர்கள்
கொண்டுள்ளது.
பெரும்பாலான குடும்பப்
பெயர்கள், காரணப்
பெயர்களாலும் பட்டப்
பெயர்களாலும்
அழைக்கப்படுகிறது.
மொழி
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிர மொழி
இவர்கள் பேசும் மொழி,
சமஸ்கிருதத்தின்
பேச்சு மொழியான
பிராகிருதம் என்ற
குடும்ப
மொழியிலிருந்து பிரிந்த
கிளை மொழியான
’சௌரஸேனி’
மொழியாகும். இந்த
‘சௌரஸெனி’ மொழியைத்
தான் சௌராட்டிரர்கள்
தேசத்தில்
இருந்தபோது பேசினர்.
இந்த மொழி குறித்து 1861
மற்றும் 1907 ஆகிய
ஆண்டுகளில் டாக்டர்.
ராண்டேல் மற்றும்
ராபர்ட் கால்டுவெல்
ஆகியவர்கள்
ஆய்வு செய்து,
தமிழ்நாட்டு
சௌராட்டிரர்கள் பேசும்
மொழி ‘சௌரஸேனி”
என்று உறுதிப்
படுத்தியுள்ளனர்.
இந்தியாவின் மேற்குப்
பகுதியில் புழக்கத்தில்
இருந்த பிராகிருத
மொழியிலிருந்து
வளர்ந்தவைகள்தான்,
”சௌராஷ்ட்ரீ’, ’அவதி’,
மற்றும் ’மஹராஷ்ட்ரீ’
மொழிகள். ’சௌரஸேனி’
மொழியிலிருந்து
வளர்ந்தவைகள் தான்.
இன்றைய குஜராத்தி
மற்றும் இராஜஸ்தானி
மொழிகள்” என்று
கலைக்களஞ்சியம்
(பகுதி 7. பக்கம் 301)
கூறுகிறது.
தமிழ்நாட்டில் வாழும்
சௌராட்டிரர்கள் பேசும்
மொழியை சௌராஷ்ட்ரம்
என்று அழைக்கிறது.
இவர்கள் பயன்படுத்தும்
சௌராஷ்டிர
மொழி எழுத்து
வடிவத்தை மதுரை
போராசிரியர் தொ.மு.
இராமராய் (1852-1913) என்ற
சௌராட்டிர
மொழி அறிஞர், வட
மொழி பேராசிரியரான
சதுர்வேதி
இலக்குமணாச்சாரியர்
என்பவரின் உதவியுடன்,
சௌராட்டிர
மொழி எழுத்துக்களை
சீர்திருத்தி, புதிய
வடிவில்
சௌராஷ்டிரா மொழியில்
பல பாடநூல்கள்
அச்சிட்டு
வெளிட்டுள்ளார்.
இம்மொழிக்கான
இலக்கணத்தை மதுரை,
தொ. மு. இராமராய்
மற்றும் சேலம், புட்டா.
ந. அழகரய்யர் ஆகியவர்கள்
செம்மைப்படுத்தி புதிய
இலக்கண நூல்கள்
அச்சிட்டு வெளியிட்டனர்
.
பல்துறையில் புகழ்
பெற்றவர்கள்
முதன்மைக் கட்டுரை:
சௌராட்டிர சமூகத்தவர்
பட்டியல்
வேங்கடரமண பாகவதர்
வேங்கட
சூரி சுவாமிகள்
நடனகோபால
நாயகி சுவாமிகள்
கே.வி. இராமாச்சாரி
எல்.கே. துளசிராம்
என்.எம்.ஆர். சுப்பராமன்
என்.எம்.ஆர்.
கிருட்டிணமூர்த்தி
பி.எஸ்.ஏ.
கிருட்டிணய்யர்
எம்.வி. வெங்கட்ராம்
சி.எஸ். இராமாச்சாரி
கே. எல். என்.
கிருஷ்ணன்
கே.எல்.என். ஜானகிராம்
என்.எம்.ஆர்.
கிருட்டிணமூர்த்தி
பி.எஸ்.ஏ.
கிருட்டிணய்யர்
எம்.வி. வெங்கட்ராம்
கசின் ஆனந்தம்
கே.ஆர். சேதுராமன்
பி.வி. நரசிம்ம பாரதி
பத்மஸ்ரீ. டி.எம்.
சௌந்தரராஜன்
எம்.என். ராஜம்
ஏ.எல். ராகவன்
லீலாவதி
ஆரியங்காவு கோயில்
முதன்மைக் கட்டுரை:
ஆரியங்காவு ஐயப்பன்
கோவில்
கேரளாவிலுள்ள
ஆரியங்காவு ஐயப்பன்
கோவில் கோயிலில்
மார்கழி மாதத்
திருவிழாவின்
போது சௌராட்டிர
சமூகத்தினருக்கு தனி
மரியாதை
அளிக்கப்படுகிறது.
அதாவது இங்குள்ள
தர்மசாஸ்தாவிற்கு
சௌராட்டிரப்
பெண்ணை திருமணம்
முடிக்கும் நிகழ்வாக
ஒரு விழா உள்ளது.
இதன்படி "ஆரியங்காவு
தேவஸ்தான சௌராட்டிர
மகாஜன சங்கத்தினர்"
இங்கு பெண் வீட்டார்
என்கிற முறையில்
திருமணத்திற்கு
வேண்டிய
பொருட்களோடு வந்து
ஓரிடத்தில்
தங்கி திருமண
ஏற்பாடுகளைச்
செய்கிறார்கள்.
பிள்ளை வீட்டார் செய்ய
வேண்டிய
மரியாதைகளை மறக்காமல்
, முதல் நாள் பாண்டிய
அரசன்
பணமுடிப்பு அளிக்கும்
சடங்கையும்
தேவஸ்தானத்தார்
நிறைவேற்றி
வைக்கின்றனர்.
அன்று சௌராட்டிரர்கள்
குடும்பத்தோடு
மணப்பெண்ணைத்
திருமணத்திற்கு
அழைத்து வரும்
பாவனையில்
அருகிலுள்ள மாம்பழத்
துறைக்குச்
சென்று அங்குள்ள
பகவதியையும்
வணங்கி வருகின்றனர்."

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டப்பட்ட ஆண்டுகள்:

1168 – 75 -> சுவாமி கோபுரம்
1216 – 38 -> ராஜ கோபுரம்
1627 – 28 -> அம்மன் சந்நிதி கோபுரம்
1315 – 47 -> மேற்கு ராஜா கோபுரம்
1372 -> சுவாமி சந்நிதி கோபுரம்
1374 -> சுவாமி சந்நிதி வெஸ்ட் கோபுரம்

1452 -> ஆறு கால் மண்டபம்
1526 -> 100 கால் மண்டபம்
1559 -> சௌத் ராஜா கோபுரம்
-> முக்குரிணி விநாயகர் கோபுரம்
1560 -> சுவாமி சந்நிதி நார்த் கோபுரம்
1562 -> தேரடி மண்டபம்
1563 -> பழைய ஊஞ்சல் மண்டபம்
-> வன்னியடி நட்ராஜர் மண்டபம்

1564 – 72 -> வடக்கு ராஜா கோபுரம்
1564-72 -> வெள்ளி அம்பல மண்டபம்
-> கொலு மண்டபம்
1569 -> சித்ர கோபுரம்
-> ஆயிராங்கால் மண்டபம்
-> 63 நாயன்மார்கள் மண்டபம்
1570 -> அம்மன் சந்நிதி மேற்கு கோபுரம்

1611 -> வீர வசந்தராயர் மண்டபம்
1613 -> இருட்டு மண்டபம்
1623 -> கிளிக்கூட்டு மண்டபம்
-> புது ஊஞ்சல் மண்டபம்
1623 – 59 -> ராயர் கோபுரம்
-> அஷ்டஷக்தி மண்டபம்

1626 -45 -> புது மண்டபம்
1635 -> நகரா மண்டபம்
1645 -> முக்குருணி விநாயகர்
1659 -> பேச்சியக்காள் மண்டபம்
1708 -> மீனாக்ஷி நாயக்கர் மண்டபம்
1975 -> சேர்வைக்காரர் மண்டபம்

மீனாக்ஷி அம்மன் கோவில் கட்டியவர்களும், அந்த கால கட்டத்தில் ஆட்சி புரிந்தவர்களும்:

குலசேகர பாண்டியன் -> 1168 – 75.
மாறவர்மன் சுந்தரபாண்டியன் -> 1216 – 38.
பாராக்ரம பாண்டியன் -> 1315 – 47.
விஸ்வநாத நாயக்கர் -> 1529 – 64.

கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1564 – 72.
வீரப்ப நாயக்கர் -> 1572 – 94.
கிருஷ்ணப்பா நாயக்கர் -> 1595 – 1601.
முத்துகிருஷ்ணப்பா நாயக்கர் -> 1601 – 09.

முத்து நாயக்கர் -> 1609 – 23.
திருமலை நாயக்கர் -> 1623 – 1659.
ரௌதிரபதி அம்மாள் மற்றும்
தோளிமம்மை -> 1623 – 59. (Wives of ThirumalaiNaicker )
முத்து வீரப்ப நாயக்கர் -> 1659

சொக்கநாத நாயக்கர் -> 1659 – 82.
முத்து வீரப்ப நாயக்கர் -> 1682 – 89.
விஜயரங்க சோகநாத நாயக்கர் -> 1706 – 32.
மீனாட்சி அரசி -> 1732 – 36

 மதுரையிலேயே பஞ்சபூதத் தலங்கள் உள்ளதை நம்மில் பலபேர் அறிந்திருக்க வாய்ப்பில்லை🌹.
அவை:
1) மதுரை செல்லூரில் உள்ள திருவாப்புடையார் கோயில் 'நீர் ஸ்தலம்',
2) சிம்மக்கல் பழைய சொக்கநாதர் கோயில் 'ஆகாய ஸ்தலம்',
3) இம்மையில் நன்மை தருவார் கோயில் 'நில ஸ்தலம்',
4) தெற்கு மாசி வீதி தென் திருவாலவாயர் கோயில் 'நெருப்பு ஸ்தலம்',
5) தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயில் 'காற்று ஸ்தலம்' ஆகியவை மதுரையின் பஞ்சபூத ஸ்தலங்கள்
அதனால் தான் பஞ்சபூதங்களை உள்ளடக்கி வெள்ளை, ஊதா, பச்சை, சிவப்பு, மஞ்சள் நிறங்கள் கலந்த பஞ்சவர்ண கிளியை அன்னை மீனாட்சி கையில் பிடித்துள்ளாள் .
அப்பன் சிவனும் 64 திருவிளையாடல்களையும் கடம்பவனமாம் மதுரையிலேயே நிகழ்த்தி உள்ளார்.
திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்,
காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்,
காசியில் இறந்தால் புண்ணியம்,
சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்,
திருவண்ணாமலையை நினைத்தாலே புண்ணியம் .
மதுரையில் பிறந்தாலும்
மதுரையில் வாழ்ந்தாலும்
மதுரையில் இறந்தாலும்
மதுரையில் வழிபட்டாலும்
மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.
சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை,காயா பாறை, பாடா குயில்
இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்கை ஊர்கள்.👇👇👇
சீறா நாகம் - நாகமலை
கறவா பசு - பசுமலை
பிளிறா யானை - யானைமலை
முட்டா காளை - திருப்பாலை
ஓடா மான் - சிலைமான்
வாடா மலை - அழகர்மலை
காயா பாறை - வாடிப்பட்டி
பாடா குயில் - குயில்குடி.🙏🏼🙏🏼
நன்றி.