Monday 25 November 2013

யாரையெல்லாம் மகன்களாக {வாரிசாகக்} எற்றுக் கொள்ளலாம்-




தர்மத்தின் விதிகள் முதல் ஆறு {6} வகை மகன்களை வாரிசுகளாகவும் குடும்ப உறுப்பினர்களாகவும் ஒப்புக் கொள்கின்றன. அடுத்த ஆறு {6} வகை மகன்கள் குடும்ப உறுப்பினர்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் வாரிசாக ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை.

1.
அவை, தானே, தான் மணந்து கொள்ளும் மனைவியிடம் பெறும் மகன் முதல் வகை
2.
அன்பு நிமித்தமாக திறமைமிகுந்த மனிதர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் இரண்டாம் வகை,
3.
பணத்தின் நிமித்தமாக ஒருவர் மூலம் தன் மனைவியிடம் உண்டாகும் மகன் மூன்றாம் வகை,
4.
கணவன் இறந்தபிறகு மனைவியால் பெறப்படும் மகன் நான்காவது வகை, 5. 5.திருமணம் ஆகும் முன்பு மனைவி பெறும் மகன் ஐந்தாவது வகை,
6.
கற்பற்ற மனைவியிடம் பெறும் மகன் ஆறாவது வகை,
7.
சுவீகாரமாகப் பெறப்படும் மகன் ஏழாவது வகை,
8.
சில காரணத்திற்காக பொருள் கொடுத்து வாங்கப்படும் மகன் எட்டாவது வகை,
9.
தானே முன்வந்து மகனாகுபவன் ஒன்பதாம் வகை,
10.
கற்பிணி மணமகளுடன் பெறப்பட்ட மகன் பத்தாவது வகை,
11.
சகோதரன் மகன் பதினோராவது வகை,
12.
தாழ்ந்த சாதி மனைவியிடம் பெறப்படும் மகன் பனிரெண்டாவது வகை

Thanks
Arasan மகாபாரதம்

No comments:

Post a Comment