அகத்திக்கீரையைத் தொடர்ந்து உண்டு வந்தால் ஜலதோஷம், சளி, இருமல் போன்றவை குணமாகும்.
அகத்திக்கீரை தேகத்தில் அழகை அதிகரித்து பொலிவுறச் செய்யும். தாது விருத்தி ஏற்பட்டு ஆண்மை அதிகரிக்கும். உடலுக்கு வலிமை சேர்க்கும். அரைக்கீரையை நெய்யில் வதக்கி நாள்தோறும் காலை ஒரு வேளை மட்டும் தொடர்ந்து உண்டு வந்தால் நாற்பது நாட்களில் ஆண்மை பெருகும்.
நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் நீங்கிய பின் உடலில் இருக்கும் பலவீனத்தை அகற்றி, புது ரத்தம் பெருக அகத்திக்கீரை உதவும்.வாத நீர்களைக் கட்டுப்படுத்தும் இக்கீரை நரம்புகளையும் பலப்படுத்தும். உடல்வலி நீக்கும். நீர்க் கோர்வை, சளிப்பிடிப்பு, இருமல் விலகும்.
பெண்களுக்குத் தலைமுடியை நன்றாகக் கருத்தும், அடர்த்தியாகவும் வளரச் செய்யும். இளநரையை நீக்கும். இக்கீரையுடன் புளி சேர்த்து சாப்பிட நாக்கிற்கு நல்ல ருசி ஏற்படும். பசி மந்தமும் நீங்கும்.
No comments:
Post a Comment