Sunday 3 August 2014

ரெயில் பயண வெயிட்டிங் லிஸ்ட் உறுதி ஆகுமா? பதில் சொல்லும் இணையதளம்

 உங்கள் ரெயில் பயண டிக்கெட்டுக்கான பி.என்.ஆர் எண்ணை இந்த தளத்தில் சமர்பித்தால் அந்த டிக்கெட் உறுதியாவதற்கு எந்த அளவு வாய்ப்புள்ளது என இந்த தளம் கணக்கு போட்டு சொல்கிறது.
சரி, இந்த கணிப்புகள் எந்த அளவு சரியானவை. பொதுவாக எல்லா கணிப்புகளும் எந்த அளவு சரியானவையோ அதே அளவு இதுவும் நம்பகமானது என இந்த தளம் சொல்கிறது. அது மட்டும் அல்ல, கிட்டத்தட்ட ஒரு லட்சம் முறைக்கு மேல் பரிசோதித்து பார்த்து சேவையை அறிமுகம் செய்திருப்பதால் இந்த கணிப்பு நம்பகமானவை என்றும் உறுதி அளிக்கிறது.
கணிப்பு 65 சதவீத்திற்கு மேல் இருந்தால் டிக்கெட் உறுதி ஆகலாம். கணிப்பு சதவீத்தில் குறிப்பிடப்படுவதோடு வண்ணங்களிலும் காட்ட்ப்படுகிறது.பச்சை வண்ணம் என்றால் ஒ.கே.
இது தவிர ரெயில்களை அறியும் வழக்கமான வசதியும் இருக்கிறது. ரெயில் பயண அடிப்படை தகவல்கள் மற்றும் காத்திருப்பு பட்டியல் செயல்படும் விதம் பற்றிய விளக்க குறிப்புகள் அவசியம் படிக்க வேண்டியவை.
எளிமையான சேவை தான்.

-இணையதள முகவரி; http://www.trainman.in/

from

cyberimman,wordpress.com