Friday 6 June 2014

இந்தியன் ரயில்வே - ஐ ஆர் சி டி சி - சீக்ரெட்ஸ்


Referred URL - https://www.facebook.com/photo.php?fbid=780804311937966&set=a.105529529465451.10294.100000252143571&type=1

இந்தியன் ரயில்வேயில் முக்கிய பிரச்சினை அதன் டிராஃபிக் என சொல்லப்படும் அதிக பேர் புக்கிங் செய்ய முனைப்படும்போது அதனின் பல பிரச்சினைகள் நம்மளே சரி செய்தால் பிரச்சினை இல்லாமல் புக்கிங் செய்யலாம் அதன் சில ரகசியங்கள் டெவல...ப்பர் சங்கத்தில் இருந்து சுட்டது உங்களுக்காக - இது 100% லீகல் அதனால் கவலை கொள்ள வேண்டாம்.

March 2014 IRCTC invested 10 crore with 64 GB RAM servers with a spike capacity of 1 Million to 8 Million in REAL TIME and LIGHT VERSION Launched

முதன் முதல் உங்க்ள் பிரவுசரின் அத்தனை கேஷ் / குக்கிஸை கிளியர் செய்யவும். AVOID Internet Ecplorer

இரண்டாவது உங்கள் பிரவுசர் இந்திய நேரம் அதுவும் ஐ ஆர் சி டி சி சர்வர் நேரத்துடன் ஒத்து போக வேண்டும். இதன் மூலம் புக்கிங் அனேகமாய் ஒகே - ஏன் என்றால் வெளி நாட்டிலிருந்து புக்கிங் செய்யும் போது ரிலே டோக்கன் எனப்படும் சர்வர் டிலே - மற்றூம் ஆக்டிவ் ரவுட்டிங் வழி என நினைத்து உங்களுக்கு காலம் தாழ்த்தும். ஐ ஆர் சி டி சி சர்வர் டைமை மேட்ச் செய்ய இந்த லின்க்கை அழுத்தவும். http://www.indianrail.gov.in/train_Schedule.html ஏதாவது ஒரு ரயில் நம்பரை போடவும் உடனே அந்த ரயில் டீட்டெயில் மற்றூம் கீழே இன்றைய தேதி மற்றூம் ஐ ஆர் சி டி சி ரயில்வே சர்வரின் நேரம் - மிக துள்ளிய்மாக காட்டும் அதற்க்கு ஏற்றார் போல் செட் செய்துக்கோங்க - மூணு நிமிஷம் அப் / ட்வுன் ஒகே -

மூன்றாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் பிரவுசர் யூஸ் ப்ண்ணீனா இந்த டூலை டவுன்லோட் செய்தா அதுவே டைம் சின்க் செய்யும் - http://userscripts.org/scripts/show/109376 - இது குரோம் பிரவுசருக்கு வேலை செய்யும்.

நாலாவது செஷன் எக்ஸ்பயரி தான் பிரச்சினை எல்லாம் முடிஞ்சு கடைசியா எக்ஸ்பயரி ஆகி லாகின் திரும்பவும் செய்ய சொல்லும் இது தான் உச்சகட்ட கொடுமை - இதற்க்கு இரண்டு வழிகள் - ஒன்று - உங்க செஷன் ஐடியை பிரவுசரில் இருந்து எடுத்து கொள்ளுங்கள் - இந்த லின்க்கை உபயோகபடுத்தி https://www.irctc.co.in/cgi-bin/bv60.dll/irctc/booking/planner.do?screen=fromlogin&BV_SessionID=%40%40%40%400958659016.1349272417%40%40%40%40&BV_EngineID=ccfladfhmfdefklcefecehidfgmdfkm.0 - இன்னொரு பிரவுசர் - அதாவது நீங்கள் ஃபயர் ஃபாக்ஸ் யூஸ் பண்ணினா = குரோமில் இதை போட்டு செஷன் ஐடியை மாற்றீ அப்படியே சர்வுருக்குள் குடியிருந்த கோயில் மாதிரி ஒட்டிக்கலாம். மூணு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது ஒரு ஆக்டிவிட்டி பண்ணி கொண்டே இருங்கள் லாக் அவுட் ஆகவே ஆகாது. இரண்டாவது மேஜிக் ஆட்டோஃபில் எனப்படும் நிலைத்தகவலை அப்படியே சர்வருக்குள் போட இந்த டூலை பயன்படுத்தினால் எல்லா டீட்டெயிலும் போட தேவையில்லை அதற்க்கான லின்க் - http://ctrlq.org/irctc/ - ஃபயர் ஃபாக்ஸ் / குரோமுக்கு ஆல் ஒகெ ஒகெ - இதன் மூலம் 80% கண்டிப்பாய் டிக்கட் கிடைக்க வாய்ப்புண்டு.

ஐந்தாவது கடைசியாக - தட்கல் டிக்கட் நேரமான 10 - 12 மணி நேராத்தில் இன்னொரு புது சர்வரை ஐ ஆர் சி டி சி மார்ச் மாதம் 10 கோடிக்கு வாங்கி இன்ஸ்டால் செய்திருக்கிறது இதன் மூலம் உங்கள் டிக்கட்டை லைட் வெர்ஷன் என்னும் அறிவிப்பு 9.30 முதல் 12 மணி வ்ரை வருகிறதா என்று பாருங்கள் வர வில்லை என்றால் ரெஃபர்ஷ் செய்து பின்பு ஆரம்பிக்கவும் இதன் மூலம் 10 லட்சம் கப்பாசிட்டி 80 லட்சம் ஆகி 60 - 65,000 டிக்கட்கள் எளிதாக செய்ய முடியும் வித் அவுட் நோ பிராப்ளம்ஸ். இந்த நேரத்தில் விளம்பரம் / டூர் பேக்கேஜ் லொட்டு லொசுக்கு எதுவுமே வேலை செய்யாததால் இதன் டிராஃபிக் ஸ்மூத்தாய் இருக்கும் ஆல் தி பெஸ்ட் மக்களே...

உங்கள் ஜன்ம நட்சத்திரத்து​க்குரிய சைவத் திருமுறைப் பாடல்!!!


தினமும் கணபதித் துதியை ஒருமுறைப் பாடிவிட்டு,உங்களுக்குரிய நட்சத்திரத் திருமுறையைப் பாடிவர,சிவனருள் கிட்டும்;
விநாயகருக்குரிய திருமுறை:பாடியவர்:-சம்பந்தர்
பிடி அதன் உரு உமை கொளமிகு கரியது
வடிகொடு தனது அடி வழிபடும் அவர் இடர்
கடிகணபதி வர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை இறையே.
அசுபதிக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
தக்கார்வம் எய்திச் சமண் தவிர்ந்து
உன் தன் சரண் புகுந்தேன்
எக்காதல் எப்பயன் உன் திறம்
அல்லால் எனக்குளதே
மிக்கார் தில்லையுள் விருப்பா
மிகவட மேரு என்னும்
திக்கா திருச்சத்தி முற்றத்து
உறையும் சிவக்கொழுந்தே.
பரணிக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
கரும்பினும் இனியான் தன்னைக்
காய்கதிர்ச் சோதி யானை
இருங்கடல் அமுதம் தன்னை
இறப்போடு பிறப்பு இலானைப்
பெரும்பொருள் கிளவி யானைப்
பெருந்தவ முனிவர் ஏத்தும்
அரும்பொனை நினைந்த நெஞ்சம்
அழகிதாம் நினைந்த வாறே.
கார்த்திகைக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
செல்வியைப் பாகம் கொண்டார்
சேந்தனை மகனாக் கொண்டார்
மல்லிகைக் கண்ணி யோடு
மலர்க் கொன்றை சூடிக்
கல்வியைக் கரையிலாத
காஞ்சிமா நகர்தன் னுள்ளார்
எல்லியை விளங்க நின்றார்
இலங்குமேற் றளிய னாரே.
ரோகிணிக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனைநினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடனாகி நின்றருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனையாளும்
கங்கா நாயகனே! கழிப்பாவை மேயோனே!
மிருகசீரிடத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
பண்ணின் இசை ஆகி நின்றாய் போற்றி
பாவிப்பார் பாவம் அறுப்பாய் போற்றி
எண்ணும் எழுத்தும் சொல் ஆனாய் போற்றி
என் சிந்தை நீங்கா இறைவா போற்றி
விண்ணும் நிலனும் தீ ஆனாய் போற்றி
மேலவர்க்கும் மேலாகி நின்றாய் போற்றி
கண்ணின் மணி ஆகி நின்றாய் போற்றி
கயிலை மலையானே போற்றி போற்றி
திருவாதிரைக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
கவ்வைக்கடல் கதறிக்கொணர் முத்தம் கரைக்கு ஏற்றக்
கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் திருச்சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடிதொழுவார்
அவ்வத்திசைக்கு அரசு ஆகுவர் அலரான் பிரியாளே.
புனர்பூசத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
மன்னும் மலைமகள் கையால் வருடின மாமறைகள்
சொன்ன துறைதொறும் தூப்பொருள் ஆயின தூக்கமலத்து
அன்ன வடிவின அன்புடைத் தொண்டர்க்கு அமுதரும்பி
இன்னல் களைவன இன்னம்ப ரான் தன் இணை அடியே.
பூசத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
பொருவிடை ஒன்று உடைப் புண்ணியமூர்த்திப் புலியதளன்
உருவுடை அம்மலை மங்கை மணாளன் உலகுக்கெல்லாம்
திருவுடை அந்தணர் வாழ்கின்ற தில்லைச் சிற்றம்பலவன்
திருவடியைக் கண்ட கண்கொண்டு மற்றுஇனிக் காண்பதென்னே.
ஆயில்யத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
கருநட்ட கண்டனை அண்டத் தலைவனைக் கற்பகத்தைச்
செருநட்ட மும்மதில் எய்யவல்லானைச் செந் தீமுழங்கத்
திருநட்டம் ஆடியைத் தில்லைக்கு இறையைச்சிற்றம்பலத்துப்
பெருநட்டம் ஆடியை வானவர் கோனென்று வாழ்த்துவனே.
மகத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
பொடியார் மேனியனே புரிநூல் ஒரு பாற் பொருந்த
வடியார் மூவிலைவேல் வளர்கங்கையின் மங்கையொடும்
கடியார் கொன்றையனே கடவூர்தனுள் வீரட்டத்தெம்
அடிகேள் என் அமுதே எனக்கு ஆர்துணை நீயலதே.
பூரத்துக்குரிய திருமுறை:பாடியவர்:ஞானசம்பந்தர்
நூலடைந்த கொள்கையாலே நுன்னடி கூடுதற்கு
மாலடைந்த நால்வர்கேட்க நல்கிய நல்லறத்தை
ஆலடைந்த நீழல்மேவி அருமறை சொன்னதென்னே
சேலடைந்த தண்கழனிச் சேய்ஞலூர் மேயவனே.
உத்திரத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
போழும் மதியும் புனைக்கொன்றை புனல்சேர் சென்னிப்புண்ணியா
சூழும் அரவச் சுடர்ச்சோதீ உன்னைத் தொழுவார் துயர் போக
வாழும் அவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்தாட்ட
ஆழும் திரைக்கா விரிக்கோட்டத்து ஐயாறு உடைய அடிகளே.
அஸ்தத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
வேதியா வேத கீதா விண்ணவர் அண்ணா என்றென்று
ஓதியே மலர்கள் தூவி ஒருங்கி நின் கழல்கள் காணப்
பாதியோர் பெண்ணை வைத்தாய் படர்சடை மதி சூடும்
ஆதியே ஆலவாயில் அப்பனே அருள் செய்யாயே.
சித்திரைக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியான் உயிரை வவ்வேல் என்று அடற்கூற்று உதைத்த
பொன்னடியே பரவி நாளும் பூவொடு நீர்சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.
சுவாதிக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
காவிளை யிட்டும் குளம்பல தொட்டும் கனி மனத்தால்
ஏவினையால் எயில் மூன்றெரித் தீர் என்று இரு பொழுதும்
பூவினைக் கொய்து மலரடி போற்றுது நாம டியோம்
தீவினை வந்தெமைத் தீண்டப் பெறாதிரு நீல கண்டம்.
விசாகத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை
வேதம்தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன் தன்னை
நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண்ணில் தொல்புகழாள் உமைநங்கை
என்றும் ஏத்தி வழிபடப் பெற்ற
கண்ணும் மூன்றுடைக் கம்பன் எம்மானைக்
காணக் கண் அடியேன் பெற்றவாறே.
அனுஷத்துக்குரிய திருமுறை:பாடியவர்:திருநாவுக்கரசர்
மயிலார் சாயல் மாதோர் பாகமா
எயிலார் சாய எரித்த எந்தைதன்
குயிலார் சோலைக் கோலக் காவையே
பயிலா நிற்கப் பறையும் பாவமே.
கேட்டைக்குரிய திருமுறை:பாடியவர்:திருநாவுக்கரசர்
முல்லை நன்முறுவல் உமை பங்கனார்
தில்லை அம்பலத்தில் உறை செல்வனார்
தொல்லை ஏற்றினார் கொடிகாவா என்று அங்கு
ஒல்லை ஏத்துவார்க்கு ஊனம் ஒன்று இல்லையே.
மூலத்துக்குரிய திருமுறை:பாடியவர்:சுந்தரர்
கீளார் கோவணமும் திருநீறுமெய் பூசி உன்றன்
தாளே வந்தடைந்தேன் தலைவா எனை ஏன்று கொள்நீ
வாளார் கண்ணிபங்கா மழபாடியுள் மாணிக்கமே
ஆளாய் நின்னையல்லால் இனியாரை நினைக்கேனே.
பூராடத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
நின்னாவார் பிறரின்றி நீயே யானாய்
நினைப்பார்கள் மனத்துக்கோர் வித்துமானாய்
மன் ஆனாய் மன்னவர்க்கோர் அமுத மானாய்
மறை நான்கு மானாய் ஆறங்க மானாய்
பொன்னானாய் மணியானாய் போக மானாய்
பூமிமேல் புகழ்தக்க பொருளே உன்னை
என்னானாய் என்னானாய் என்னில் அல்லால்
ஏழையேன் என்சொல்லி ஏத்துகேனே.
உத்திராடத்துக்குரிய திருமுறை:பாடியவர் சுந்தரர்
குறைவிலா நிறைவே குணக்குன்றே
கூத்தனே குழைக்காது உடையானே
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன்
ஒருபிழை பொறுத்தல் இழிவு உண்டே
சிறைவண்டு ஆர்பொழில் சூழ்திருவாரூர்ச்
செம்பொனே திருவாடுதுறையுள்
அறவனேஎனை அஞ்சல் என்று அருளாய்
ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே.
திருவோணத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
வேதம் ஓதி வெண்ணூல் பூண்டு வெள்ளை எருதேறிப்
பூதம்சூழப் பொலிய வருவார் புலியின் உரிதோலார்
நாதா எனவும் நக்கா எனவும் நம்பா எனநின்று
பாதம் தொழுவார் பாவம் தீர்ப்பார் பழன நகராரே.
அவிட்டத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
எண்ணும் எழுத்தும் குறியும் அறிபவர் தாம் மொழியப்
பண்ணின் இசைமொழி பாடிய வானவர் தாம்பணிவார்
திண்ணென் வினைகளைத் தீர்க்கும் பிரான் திரு வேதிகுடி
நண்ண அரிய அமுதினை நாம் அடைந்து ஆடுதுமே.
சதயத்துக்குரிய திருமுறை:பாடியவர்:-சுந்தரர்
கூடிய இலயம் சதிபிழை யாமைக்
கொடியிடை உமையவள் காண
ஆடிய அழகா அருமறைப் பொருளே
அங்கணா எங்குற்றாய் என்று
தேடிய வானோர் சேர்திரு முல்லை
வாயிலாய் திருப்புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படுதுயர் களையாய்
பாசுப தாபரஞ் சுடரே.
பூரட்டாதிக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
முடிகொண்ட மத்தமும் முக்கண்ணனின்
நோக்கும் முறுவலிப்பும்
துடிகொண்ட கையும் துதைந்த
வெண்ணீறும் கரிகுழலாள்
படிகொண்ட பாகமும் பாய்புலித்
தோலும் என் பாவி நெஞ்சிற்
குடிகொண்ட வாதில்லை அம்பலக்
கூத்தன் குரை கழலே.

உத்திரட்டாதிக்குரிய திருமுறை:பாடியவர்:-ஞானசம்பந்தர்
நாளாய போகாமே நஞ்சணியும் கண்டனுக்கே
ஆளாய அன்புசெய்வோம் மடநெஞ்சே! அரண் நாமம்
கேளாய் நம்கிளை கிளைக்கும் கேடுபடாத் திறம் அருளிக்
கோளாய நீக்கும் அவன் கோளிலி எம் பெருமானே.
ரேவதிக்குரிய திருமுறை:பாடியவர்:-திருநாவுக்கரசர்
நாயுனும் கடைபட் டேனை
நன்னெறி காட்டி யாண்டாய்
ஆயிரம் அரவம் ஆர்த்த
அமுதனே அமுதம் ஒத்து
நீயும் என் நெஞ்சின் உள்ளே
நிலவினாய் நிலாவி நிற்க
நோயவை சாரு மாகில்
நோக்கிநீ அருள்செய் வாயே.
ஓம்சிவசக்திஓம்
 
thanks aanmika kadal